தேவனிடம் திரும்பும் வழியை கண்டறிதல்மாதிரி
"இதை என்னால் சொந்தமாக செய்ய முடியாது"
தேவனிடம் திரும்பும் வழியை கண்டடையும் பயணத்தில் நாம் எங்கிருந்தாலும், நாம் இன்னும் பிடித்துக்கொண்டிருக்கும் காரியங்கள் நம் அனைவர் வாழ்க்கையிலும் உண்டு. சிலருக்கு, அது யாருக்கும் தெரியாத ஒரு செயல் அல்லது பழக்கமாக இருக்கும். மற்றவர்களுக்கு, நாம் எதை பின்தொடருகிறோம் என்று அனைவருமே அறிந்திருக்கிறார்கள்.
உங்களுடையது என்ன? நீங்கள் எதனை விட்டுவிட வேண்டும்? பழைய உடைந்த ஒன்றை நீங்கள் விட்டுவிடும் வரை அனேக நேரங்களில் தேவன் புதியவற்றை உங்கள் வாழ்க்கையில் கொடுப்பதில்லை.
அதனால் தான், வருத்தத்திற்கு விழிப்பதற்கு அடுத்த படி உதவிக்கு விழித்தெழுவது. நம்மால் தனியாக செய்ய முடியாது என்று உணருவதால், இந்த மூன்றாவது விழித்தெழுதல் நம்மை தேவனிடம் நெருங்கி சேருவதில் ஒரு பெரிய படி எடுத்து வைக்க செய்கிறது. அடுத்து என்ன நடக்கிறது?
நாம் ஒரு அழைப்பு செய்கிறோம்.
ஒருவருடன் பேசுகிறோம்.
ஒரு உதவி குழுவிற்கு செல்கிறோம்.
திருச்சபையின் கடைசி வரியில் உட்காருகிறோம்.
"தேவனே, நீர் உண்மையாக இருந்தால்....!" என்று நம் முழங்காலில் விழுந்து கதறுகிறோம்.
சீரழிக்கும் முடிவுகளிலிருந்து திரும்பி உதவி தேடுவது மனம்திரும்புவதன் ஒரு அங்கம். மனம்திரும்புவது வீடு செல்வது போன்றது, நாம் வந்த இடத்திற்கு அல்லது நம் சொந்த இடத்திற்கு செல்வது போன்றது. மன்னிக்கப்படுவது மற்றும் இந்த வாழ்க்கைக்கு பின் உள்ள வாழ்க்கையை பற்றிய நிச்சயத்தை பெறுவது பற்றியது தான் வீடு திரும்புவது, ஆனால் வேறு எங்கும் கிடைக்காத விதத்தில் வாழ்க்கைக்கு புதிய அர்த்தமும் திசையும் கண்டடைவதை பற்றியதும் கூட. தேவனுடன் ஒரு உறவு ஏற்படுத்துவது பற்றியது. உங்கள் வாழ்க்கையை திசைத்திருப்பி, எங்கிருந்து வந்தீர்களோ, எங்கே உங்கள் சொந்தமோ அங்கே செல்வது பற்றியது அது. நீங்கள் மனம்திரும்பும் போது, தேவன் உங்களை மாற்றுகிறார். நீங்கள் வித்தியாசமாக மாறுகிறீர்கள். தேவனுடைய ஆவி உங்களில் வசிக்க வருகிறார் என்றும் அது காணக்கூடிய தொடர் மாற்றத்தை உங்களில் ஏற்படுத்திகிறது என்றும் பைபிள் கூறுகிறது.
மனம்திரும்புவது என்றால் உங்களை நினைத்து வருத்தப்படுவது இல்லை என்று நினைவில் கொள்ளுங்கள். சொல்லப் போனால், உண்மையான மனம்திரும்புதல் தேவனிடமிருந்து வரும் "இளைப்பாறுதலின் காலங்களுக்கு" வழிநடத்தும் என்று பைபிள் கூறுகிறது. மீண்டும் துவங்கி, எனக்கு உதவி தேவைப்படுகிறது என்று ஒத்துக்கொள்வது தான் மனம்திரும்புதல். நம் பாவத்திலிருந்து திரும்பி தேவனிடம் வீடு திரும்ப இந்த மனம்திரும்புதலுக்கான அழைப்பு நாம் அனைவருக்கும் கொடுக்கப்படுகிறது.
நீங்கள் வீட்டிற்கு செல்லும் நாள் இன்றைக்காக இருக்கலாம். நீங்கள் இருக்கும் இடத்திலிருந்து எழுந்து, உங்களுக்கு சொந்த இடமான உங்கள் வீட்டிற்கு திரும்புங்கள். நீங்கள் கடந்தகாலத்தில் என்ன தவறான முடிவுகள் எடுத்திருந்தாலும் பரவாயில்லை. "நீங்கள் என்ன செய்திருந்தாலும், என்னவாக மாறி இருந்தாலும், பரவாயில்லை" என்று தேவன் உங்களிடம் கூறுகிறார். "வீட்டிற்கு வா"
இன்றைக்கு நீங்கள் எதிலிருந்து மனம்திரும்ப வேண்டும்? உங்கள் மனம்திரும்புதல் உங்களை தேவனிடமிருந்து வரும் "இளைப்பாறுதலின் காலங்களுக்கு" நேராக எப்படி வழிநடத்த கூடும்?

வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
வாழ்க்கையில் இன்னும் அதிகமாக எதிர்ப்பார்க்கிறீர்களா? தேவனுடன் உள்ள உங்கள் உறவு எங்கு இருந்தாலும், இன்னும் அதிகமாக வேண்டும் என்ற உணர்வு தேவனிடம் திரும்புவதற்கான ஏக்கம் தான். நாம் தேவனிடம் திரும்பும் வழியை கண்டறிகையில், நாம் அனைவரும் மைல் கற்கள் அல்லது விழிப்புணர்வுகளை சந்திக்கிறோம். இந்த விழிப்புணர்வுகள் ஒவ்வொன்றன் வழியாகவும் பயணம் செய்து, நீங்கள் இப்போது இருப்பதற்கும் நீங்கள் இருக்க வேண்டும் என்று விரும்பும் இடத்திற்கும் உள்ள இடைவெளியை நிரப்புங்கள். நாம் தேவனை கண்டடைய விரும்புகிறோம், அவர் கண்டடையப்பட இன்னும் அதிகமாக விரும்புகிறார்.
More
இந்த திட்டத்தை வழங்குவதற்காக, டேவ் பெர்குசன், ஜான் பெர்குசன், மற்றும் வாட்டர்ப்ரூக் முல்ட்நோமா வெளியீட்டு குழுவுக்கு நன்றி தெரிவிக்கிறோம். மேலும் தகவலுக்கு, http://waterbrookmultnomah.com/catalog.php?work=235828 ஐ பார்க்கவும்.