தேவனிடம் திரும்பும் வழியை கண்டறிதல்மாதிரி

Finding Your Way Back To God

5 ல் 2 நாள்

"மறுபடியும் துவங்க விரும்புகிறேன்"

தேவனிடம் திரும்பும் நம் பயணத்தில் அடுத்த திருப்புமுனையை வருத்தப்படுவதற்கான விழிப்புணர்வு என்று நாம் அழைக்கிறோம். ஒரு நாள் காலையில் உங்கள் வாழ்க்கையை நீங்கள் பார்த்து, உங்கள் சிறந்த முயற்சிகளின் மத்தியிலும் எல்லாவற்றையும் சொதப்பிவிட்டீர்கள் என்று திடீரென உணருகிரீர்கள். ஏமாற்றத்தாலும் வருத்தத்தாலும் நிரம்பியிருக்கிறீர்கள். இப்போது இன்னும் தெளிவாக நீங்கள் காண்பதால், மற்றொரு வாய்ப்பை விரும்புகிறீர்கள். ஆனால் அப்படி ஒரு வாய்ப்பு வருவதாக தென்படவில்லை.

அதை பற்றி யோசித்து பார்த்தால், நீங்கள் ஏன் அப்படி செய்வீர்கள்?

எங்களுடன் இருங்கள்.

நாம் நன்மையிலிருந்தும் அன்பிலிருந்தும் வந்தோம் என்றும் இன்னும் அதிகமாக அவற்றை பெறுவதற்காக படைக்கப்பட்டோம் என்றும் நம் அனைவருக்குள்ளும் ஒரு ஆழமான நம்பிக்கை இருக்கிறது. நாம் அடிமட்டத்தை அடையும் போதும் நாம் வாழ்க்கையில் எவ்வளவு சிக்கலாக்கி விட்டோம் என்றும் வாழ்க்கை நம்மை எவ்வளவு சிக்கலாக்கி விட்டது என்றும் நாம் உணரும் போது, நம் பதில் இப்படியாக இருக்கிறது: "மறுபடியும் துவங்க விரும்புகிறேன்."

அதில் அழகு என்னவென்றால், நீங்கள் மீண்டும் துவங்க முடியும். நன்மையிலும் அன்பிலும் உள்ள உங்கள் தோற்றத்தை பற்றிய உள்ளுணர்வு முற்றிலும் சரியானதே. நீங்கள் மீண்டும் துவங்க தேவன் அனுமதிக்கிறார்.

நம்மில் அநேகர், நாம் மீண்டும் துவங்க ஆயத்தமாக இருக்கும் போது, எல்லாம் தெற்கு நோக்கி செல்வதற்கு முன் இருந்த அந்த வாழ்க்கைக்கு திரும்ப செல்ல விரும்புகிறோம். ஆனால் தேவன் வேறு திட்டங்களை வைத்திருக்கிறார். நாம் கற்பனை செய்வது போன்ற அந்த மேம்பட்ட வாழ்க்கைக்கு செல்ல உதவுவதோடு நிறுத்திக்கொள்ள அவர் விரும்பவில்லை. ஒரு முற்றிலும் வேறு விதமான வாழ்க்கையை அனுபவிக்க அவர் விரும்புகிறார். நீங்கள் தேவனிடம் திரும்பும் வழியை கண்டடைகையில் உங்கள் எதிர்காலம் மற்றும் மாறுவதில்லை, உங்கள் கடந்த காலமும் நிகழ் காலமும் கூட மாற்றம் அடைகின்றன.

கடந்த கால வேதனைகள், நோக்கம் இல்லாத நிகழ் காலம் மற்றும் நம்பிக்கையற்ற எதிர்காலம் என்ற நிலையில் வாழ்ந்துக்கொண்டிருந்த நாட்களுக்கு முற்று போட ஆயத்தமா? வருத்தத்தை விட்டு விட்டு தேவனில் உள்ள உங்கள் இல்லத்தை நோக்கி செய்யும் இந்த பயணம் உங்களை ஒரு ஆழமான, உண்மையான வாழ்க்கைக்கு நேராகவும் வழிநடத்துகிறது. இன்றைக்கே நீங்கள் மீண்டும் துவங்கவும் தேவன் உங்கள் முடிவில்லாத வாழ்க்கைக்காக வைத்திருக்கும் கனவுகளின் படி வாழ துவங்கவும் உம்களை அழைக்கிறது இந்த விதமான வாழ்க்கை.

நீங்கள் இன்றைக்கு மீண்டும் துவங்க தேவன் அனுமதிக்கிறார் என்று விசுவாசிப்பது எப்படி காணப்படும்? அது எதிர்காலத்தை பற்றிய உங்கள் எண்ணங்களை எப்படி மாற்றும்?

வேதவசனங்கள்

நாள் 1நாள் 3

இந்த திட்டத்தைப் பற்றி

Finding Your Way Back To God

வாழ்க்கையில் இன்னும் அதிகமாக எதிர்ப்பார்க்கிறீர்களா? தேவனுடன் உள்ள உங்கள் உறவு எங்கு இருந்தாலும், இன்னும் அதிகமாக வேண்டும் என்ற உணர்வு தேவனிடம் திரும்புவதற்கான ஏக்கம் தான். நாம் தேவனிடம் திரும்பும் வழியை கண்டறிகையில், நாம் அனைவரும் மைல் கற்கள் அல்லது விழிப்புணர்வுகளை சந்திக்கிறோம். இந்த விழிப்புணர்வுகள் ஒவ்வொன்றன் வழியாகவும் பயணம் செய்து, நீங்கள் இப்போது இருப்பதற்கும் நீங்கள் இருக்க வேண்டும் என்று விரும்பும் இடத்திற்கும் உள்ள இடைவெளியை நிரப்புங்கள். நாம் தேவனை கண்டடைய விரும்புகிறோம், அவர் கண்டடையப்பட இன்னும் அதிகமாக விரும்புகிறார்.

More

இந்த திட்டத்தை வழங்குவதற்காக, டேவ் பெர்குசன், ஜான் பெர்குசன், மற்றும் வாட்டர்ப்ரூக் முல்ட்நோமா வெளியீட்டு குழுவுக்கு நன்றி தெரிவிக்கிறோம். மேலும் தகவலுக்கு, http://waterbrookmultnomah.com/catalog.php?work=235828 ஐ பார்க்கவும்.