கிருபை மற்றும் நன்றியுணர்வு: அவரது கிருபையில் முழுமையாக வாழுங்கள்மாதிரி
கர்த்தருக்குள் மகிழ்சியாயிருங்கள்
வாழ்க்கை சீராக செல்லும் போது மகிழ்ச்சியாயிருப்பது, ஜெபிப்பது மற்றும் நன்றியை வெளிப்படுத்துவது எளிது, ஆனால் படுக்கையில் இருந்து எழுவதற்குகூட நீங்கள் சிரமப்படும்போது என்ன செய்வது? உங்களுக்கு கடினமான காலங்கள் இருக்கும் என்பதை இயேசு அறிந்திருந்தார், மேலும் ஒடுக்கப்பட்ட ஆவிக்கான அவரது மாற்று மருந்து துதிப்பது - போராட்டத்திற்காக அல்ல, மாறாக பிரசன்னம் மற்றும் அவருடன் நித்திய வாழ்விற்கான வாக்குறுதிக்காக. அவர் உன்னை நேசிக்கிறார். அவர் உங்களுக்காக மரித்தார். இவை அனைத்தும் அவரில் களிப்படைவதற்கும் மகிழ்ச்சியடைவதற்கும் சரியான காரணங்கள்.
ஜெபம்:
இயேசுவே, நான் இப்போது உம்மில் மகிழ்கிறேன், எனக்காக சிலுவையில் நீங்கள் செய்த தியாகத்திற்காக என் இதயத்திலிருந்து உமக்கு நன்றி கூறுகிறேன். நான் உண்மையிலேயே நன்றியுள்ளவனாக இருக்கிறேன். ஆமென்.
இந்த திட்டத்தைப் பற்றி
கடவுள் உங்களுக்கு பல வாக்குறுதிகளை அளித்துள்ளார், மேலும் அவர் ஒவ்வொன்றையும் நிறைவேற்ற விரும்புகிறார். இன்றைய உலகில், கடவுளின் நன்மையையும், கிருபையையும் மறப்பது எளிது. இந்த 7-நாள் தியானம், அவருடைய ஏராளமான கிருபை மற்றும் ஆசீர்வாதங்களை, தியானப் பகுதி, கடவுளின் வார்த்தை மற்றும் ஆழமான தினசரி பிரார்த்தனை மூலம் நினைவில் கொள்ள உதவும். இந்த ஆய்வு, ஷன்னா நோயல் மற்றும் லிசா ஸ்டில்வெல் ஆகியோரின் 100 நாட்கள் கிருபையும் & நன்றியறிதலும் என்ற தியானஇதழிலிருந்து எடுக்கப்பட்டது.
More