கிருபை மற்றும் நன்றியுணர்வு: அவரது கிருபையில் முழுமையாக வாழுங்கள்மாதிரி
கிருபையால் காப்பாற்றப்பட்டோம்
நாம் பிறந்த காலத்திலிருந்தே, நாம் காரணம் மற்றும் விளைவுகளால் பயிற்றுவிக்கப்படுகிறோம். நாம் ஏதேனும் நன்மையைச் செய்தால், நம்மை பாராட்டுகிறார்கள். நாம் ஏதேனும் தவறு செய்தால், நம்மை நியாயப்படுத்துகிறார்கள், அது சரியாக்கப்படும் வரை நம்மை பொறுப்புக் குறிக்கிறார்கள். நம்முடைய செயல்களால் நன்மை, அங்கீகாரம் மற்றும் திருப்பம் ஏற்படுகிறது. இதுவே பலருக்கு கிருபையின் கருத்தைப் புரிந்து கொள்ள கடினமாக்குகிறது. தேவனின் கிருபையின் கீழ் நாம் சுதந்திரமாக வாழ மனிதனால் உருவாக்கப்பட்ட நிலைமைகளை அகற்றுவதற்காக கிறிஸ்து தம் இரக்கத்தினால் நமக்காக மரித்தார். இயேசுவின் மரணத்தின் இறுதிக் காரணம் நம் வாழ்வில் சுதந்திரத்தையும் கிருபையையும் ஏற்படுத்தியது. அதை நம்பி ஏற்றுக்கொள்வதைத் தவிர நாம் இனி எதையும் "செய்ய" வேண்டியதில்லை. உங்களிடம் உள்ளதா?
ஜெபம்:
பிதாவே, உமது கிருபையின் உடன்படிக்கையில் நான் வாழ உமது மகனின் தியாகத்திற்கு நன்றி. ஏனெனில் நான் உம்முடைய கிருபையின் உடன்படிக்கையில் வாழலாம். இப்போது, அதை முழுமையாக ஏற்றுக்கொண்டு, நான் பெற்ற சுதந்திரத்தில் வாழ கிருபை செய்யும். ஆமென்.
இந்த திட்டத்தைப் பற்றி
கடவுள் உங்களுக்கு பல வாக்குறுதிகளை அளித்துள்ளார், மேலும் அவர் ஒவ்வொன்றையும் நிறைவேற்ற விரும்புகிறார். இன்றைய உலகில், கடவுளின் நன்மையையும், கிருபையையும் மறப்பது எளிது. இந்த 7-நாள் தியானம், அவருடைய ஏராளமான கிருபை மற்றும் ஆசீர்வாதங்களை, தியானப் பகுதி, கடவுளின் வார்த்தை மற்றும் ஆழமான தினசரி பிரார்த்தனை மூலம் நினைவில் கொள்ள உதவும். இந்த ஆய்வு, ஷன்னா நோயல் மற்றும் லிசா ஸ்டில்வெல் ஆகியோரின் 100 நாட்கள் கிருபையும் & நன்றியறிதலும் என்ற தியானஇதழிலிருந்து எடுக்கப்பட்டது.
More