கர்த்தர் செய்த எல்லாவற்றையும் நினைவுகூரல்மாதிரி
கர்த்தர் நம்மை உருவாக்கும் விதங்களில் ஒன்று, பிறரது ஞானத்தின் மூலமாக; ஏனென்றால் அவரது ஞானமும் போதனைகளும் நாம் சீர்தூக்கிப் பார்க்கும் பிறர் மூலம் நமக்கு வெளிப்படுகிறது. மற்றவர்களுக்கு ஆலோசகராகவும் பிறரை கர்த்தரின் சாயலில் உருவாக்குபவர்களாகவும் விளங்குவதின் முக்கியத்துவத்தை 1பேதுரு 5 :1 - 1 1 போன்ற வேத பகுதிகள் வற்புறுத்துகின்றன. நீங்கள் கிறிஸ்துவுக்குள் இன்றைய உறவின் நிலைமையில் இருப்பதற்குக் காரணமான ஆலோசகர் யார்? அது ஒரு ஆசிரியராகவோ, ஒரு போதகராகவோ, ஒரு குடும்ப அங்கத்தினரோ அல்லது ஒரு நெருக்கமான நண்பராகவோ இருக்கலாம் - அவர் தம் ஞானத்தையும் அறிவையும் அனுபவத்தையும் உங்கள் வாழ்க்கையில் முதலீடு செய்திருக்கிறார்கள். உங்கள் வாழ்வில் கர்த்தர் வைத்திருக்கும் முக்கிய நபர்களை கொஞ்ச நேரம் நினைத்துப் பாருங்கள். அவர்கள் உங்கள் வாழ்வில் செய்திருக்கும் முதலீட்டை என்றைக்கும் மறக்காதீர்கள்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
எதிர்காலத்தைக் குறித்தே எண்ணிக்கொண்டிருப்பது நமது இயற்கை சுபாவமாக இருந்தாலும் கடந்த காலத்தை மறந்து விடக்கூடாது. இந்த திட்டம் ஐந்து நாட்களில் உங்களை இன்றைய நிலைமைக்கு உருவாக்கின கர்த்தரின் செயல்களை நினைவுகூரும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. தினமும் ஒரு வேதபகுதியும் ஒரு சுருக்கமான தியானமும் கிறிஸ்துவுடனான உங்கள் வாழ்வின் முக்கிய நிகழ்வுகளை உங்களுக்கு நினைத்துப் பார்க்க உதவும்.
More
We would like to thank Life.Church for providing this plan. For more information, please visit: www.life.church