கர்த்தர் செய்த எல்லாவற்றையும் நினைவுகூரல்மாதிரி

Remembering All God Has Done

5 ல் 5 நாள்

நீங்கள் கர்த்தரை உங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டிருப்பீர்களானால் நீங்கள் ஒரு புது சிருஷ்டி. "பழையவைகள் ஒழிந்து போயின, எல்லாம் புதிதாயின" கடந்த வாரம் முழுவதும் நீங்கள் கடந்த காலத்தை சிந்தித்து கர்த்தரின் வல்லமையையும் அவரது உண்மையையும், உங்களை ஒரு நபராக வளர்ச்சியடையச் செய்தவைகளையும், கிறிஸ்து நமக்காக மூலாதார பலியானதையும் நினைவுகூர்ந்தீர்கள். இன்று 2 கொரிந்தியர் 5:11-21 ல் கொடுக்கப்பட்ட பகுதியிலிருந்து கர்த்தரின் மீட்கும் வல்லமையைப் பற்றி சிந்தியுங்கள். தமது குமாரனான இயேசு கிறிஸ்துவின் மூலமாக கர்த்தர் உனக்குக் கொடுத்திருக்கிற பாவமன்னிப்பை விட மேலான, வல்லமையான, உண்மையான, தியாகமான, வாழ்க்கையையே மாற்றக் கூடியதான காரியம் வேறு எதுவுமே இல்லை. இன்று, கர்த்தர் கொடுத்த பாவமன்னிப்பின் மூலம் நீங்கள் அனுபவிக்கும் வாழ்க்கை மாற்றத்தைக் குறித்து சிந்தியுங்கள். உங்கள் பழைய வாழ்க்கையை முற்றிலும் மறந்துவிட்டு, உங்கள் வாழ்வை என்றென்றைக்குமாக மாற்றின அந்த நாளை நினைவுகூருங்கள். கர்த்தரைப் போற்றித் துதித்து அவர் தந்த புதிய வாழ்வுக்காக அவருக்கு நன்றி சொல்லுங்கள்.

வேதவசனங்கள்

நாள் 4

இந்த திட்டத்தைப் பற்றி

Remembering All God Has Done

எதிர்காலத்தைக் குறித்தே எண்ணிக்கொண்டிருப்பது நமது இயற்கை சுபாவமாக இருந்தாலும் கடந்த காலத்தை மறந்து விடக்கூடாது. இந்த திட்டம் ஐந்து நாட்களில் உங்களை இன்றைய நிலைமைக்கு உருவாக்கின கர்த்தரின் செயல்களை நினைவுகூரும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. தினமும் ஒரு வேதபகுதியும் ஒரு சுருக்கமான தியானமும் கிறிஸ்துவுடனான உங்கள் வாழ்வின் முக்கிய நிகழ்வுகளை உங்களுக்கு நினைத்துப் பார்க்க உதவும்.

More

We would like to thank Life.Church for providing this plan. For more information, please visit: www.life.church