கர்த்தர் செய்த எல்லாவற்றையும் நினைவுகூரல்மாதிரி
சங்கீதம் 91 கர்த்தருடைய உண்மையைக் குறித்தது. இந்த சங்கீதத்தில் கர்த்தர் நம் அடைக்கலம், நம் கோட்டை, நம்மைக் காப்பார், நம்மைத் தப்புவிப்பார், என்று வாசிக்கிறோம். இந்த சங்கீதம் ஒரே ஒரு எளிய உண்மையை தெரிவிக்கிறது: சூழ்நிலைகள் எவ்வாறாக இருப்பினும் கர்த்தர் உண்மையுள்ளவராகவே இருக்கிறார். நல்ல நேரங்களிலும் நன்றாக இல்லாத நேரங்களிலும் கூட கர்த்தர் நம்மோடு இருக்கிறார். அவர் இருப்பதை நீங்கள் உணராத போதும் அவர் அங்கே தான் இருக்கிறார். ஒவ்வொருவருடைய கிறிஸ்துவுடனான வாழ்க்கையும் வளர வளர வேறுபட்டுக் கொண்டே இருக்கும், ஆனால் கர்த்தருடைய உண்மை என்றுமே மாறுவதில்லை. உங்கள் வாழ்வு முழுவதும் கர்த்தரின் உண்மையை அனுபவித்திருக்கிறீர்களா? இன்று கர்த்தருடைய உண்மை உங்களை வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் எவ்வாறு விடுவித்தது என்று நேரம் எடுத்து நினைவுகூருங்கள். கர்த்தருடைய உண்மைக்காக அவருக்கு நன்றி சொல்லி, எப்போதும் அவர் உன் சார்பில் இருப்பார் என்று ஆறுதலடையுங்கள்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
எதிர்காலத்தைக் குறித்தே எண்ணிக்கொண்டிருப்பது நமது இயற்கை சுபாவமாக இருந்தாலும் கடந்த காலத்தை மறந்து விடக்கூடாது. இந்த திட்டம் ஐந்து நாட்களில் உங்களை இன்றைய நிலைமைக்கு உருவாக்கின கர்த்தரின் செயல்களை நினைவுகூரும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. தினமும் ஒரு வேதபகுதியும் ஒரு சுருக்கமான தியானமும் கிறிஸ்துவுடனான உங்கள் வாழ்வின் முக்கிய நிகழ்வுகளை உங்களுக்கு நினைத்துப் பார்க்க உதவும்.
More
We would like to thank Life.Church for providing this plan. For more information, please visit: www.life.church