தீவிர ஞானம்: தந்தைகளுக்கான 7-நாள் பயனம்மாதிரி
உங்கள் அடுத்த - தலைமுறையினரின் மரபு என்ன?
ஒரு அப்பா எதை ஆர்வத்துடன் பின்தொடரந்தாரோ, அவரது குழந்தைகள் மிதமாகத் அதையே தொடருவர். எதை ஒரு அப்பா மிதமாக தொடர்ந்தாரோ, அவரது குழந்தைகள் அதை புறக்கணிப்பர். . . நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதை உங்கள் பேரக்குழந்தைகளின் நடத்தைகளை நீங்கள் பார்க்கும் வரை உங்களுக்குத் தெரியாது? "
ஒரு பேச்சாளர் இதைச் சொல்வதை நான் முதலில் கேட்டபோது, நான் முணுமுணுத்தேன். இது எப்போதும் உண்மையாக இருக்க முடியாது. ஆனால் பின்னர் அவர் வேதத்திலிருந்து எண்ணற்ற உதாரணங்களைப் பயன்படுத்தினார்.
ஆபிரகாம். வெளியேற்றப்படபட்டார். கீழ்ப்படிந்தார்.விசுவாசம் என்னும் வார்த்தையை கண்டுபிடித்தார். அவரது மகன் ஈசாக்கு? நிச்சயமாக ஒரு தெய்வீக மனிதர், ஆனால் தேவனின் அறிவுறுத்தல்களுக்கு எதிராகச் சென்று எகிப்துக்குச் சென்றார் அதனால் அவர் தனது மனைவியை தனது சகோதரி என சொல்லும் நிலைக்கு தள்ளப்பட்டார், அவரது தந்தையும் பல ஆண்டுகளுக்கு முன்பு அவருக்கு முன்மாதிரியாக இதே போல் செய்து இருந்தார்.
நீங்கள் அவர்களின் குழந்தைகளின் குழந்தைகளைப் பார்க்கும்போது பேச்சாளரின் கோட்பாடு நிலைத்திருக்கிறதா?
ஈசாக்கின் குழந்தைகள், யாக்கோபு மற்றும்ஏசா ஆகியோர் தெய்வபக்தியுள்ளவர்கள். ஆனால் புத்திரசுவிகாரத்தைப் பெற யாக்கோபு பயன்படுத்திய மோசடி என்ன? ஒரு கிண்ணம் கூழுக்காக அதை விற்றுப்போட ஏசாவின் மனத்தூண்டுதல் என்ன?
விஷயம் என்னவென்றால் அப்பாகளாக நாம் ஆர்வத்தோடு தேவனைப் பின்தொடர வேண்டுமே தவிர நடுத்தரத்தன்மையில் அல்ல. நம்முடைய விசுவாசம் நமக்கு எவ்வளவு முக்கியம் என்பதைப் பார்ப்பதன் மூலம் அவர்களின் நம்பிக்கை em> அவர்களுக்கு எவ்வளவு முக்கியம் என்பதை நம் குழந்தைகள் ஆழ்மனதில் தீர்மானிக்கிறார்கள்.
எந்த வாய்ப்புகளையும் நீங்களாக எடுக்காதீர்கள். எல்லவற்றிற்கும்இயேசுவிடம் ஜெபத்திலிருந்து, தசமபாகம் செலுத்தி, அன்பான, அருளால் நிரப்பப்படடவர்களாக ஏற்ற முடிவை எடுங்கள்.
தேவனைப் பின்தொடர்வதில் நீங்கள் ஆர்வமாக இருந்தீர்கள் என்பதை குறைந்தபட்சம் இந்த நாளிலிருந்தே நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். அப்போது யாரும் உங்களை மீண்டும் நீங்கள் மிதமாக தான் தேவனைப் பின்பற்றினீர்கள் என்று அழைக்கக்கூடாது.
ஒருவேளை உங்கள் பேரக்குந்தைகளுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும்!
கேள்வி: உங்கள் குழந்தைகள் உங்களை தேவ அன்பில்ஆர்வமுள்ளவர் என விவரிப்பார்களா?
இந்தத் திட்டம் ஒரு தந்தையாக உங்களுக்கு சவாலானதாக இருந்ததா?
இவை முழுவதையும் மேலும் அறிய தீவிர ஞானம்தியானம்.
இந்த திட்டத்தைப் பற்றி
தந்தைகள் நம்மை எவ்வளவு வடிவமைக்கின்றனர் என்பது மிகவும் வினோதமானது. உலகத்திற்குரிய தந்தையின் சக்தியையும் தாக்கத்தையும் விட்டு யாரும் தப்பிப்பதில்லை. மற்றும் பல ஆண்களும் தந்தையாக இருப்பதற்கு அவர்கள் தயாராகவில்லை என்று உணர்வதால் - வேதத்திலிருந்தும் பிற தந்தைளிடமிருந்தும், வழிநடத்துதல் பெறுவது அவசியம். தீவிர ஞானம் என்பது வேதத்திலுள்ள கொள்கைகளையும் ஞானத்தையும் தன்னுடைய தவறுகளிலிருந்து கற்றுக்கொண்ட ஒரு வயதுமிக்க, ஞானமிக்க தந்தையின் அனுபவத்தோடு கலப்பதின் மூலம், ஞானம் மற்றும் தந்தைகளுக்கான ஆழ்ந்த அறிவு நோக்கிய ஒரு பயனமாகும்.
More