தீவிர ஞானம்: தந்தைகளுக்கான 7-நாள் பயனம்மாதிரி

Radical Wisdom: A 7-Day Journey For Fathers

7 ல் 4 நாள்

ஒன்றாக இருந்து இரவு உணவு உண்ணுதல்

என் மனைவி வற்புறுத்தும் விஷயங்களை என்னால் ஒரு கையால் எண்ண முடியும். அதில் ஒன்றாக இருந்து இரவு உணவு உண்பதும் ஒன்று.

"நீங்கள் எப்போது வீட்டிற்கு வருவீர்கள்?" அவள் கேட்ப்பாள். "நான் வேலையினால் பிணைக்கப்பட்டுள்ளேன். . . சிறிது நேரம் ஆகும் "என்று நான் சொல்லுவேன். அதற்க்கு சிறிதும் மாறாமல், அவள் மறுபடியும், "உங்களை நீங்களே கட்டவிழ்த்துக்கொள்ளுங்கள் மற்றும் சாலைக்கு இறங்கி வாருங்கள். இந்த குடும்பத்தில் நாம் ஒன்றாக இரவு உணவு உண்ண வேண்டும். உணவு தயாராக இருக்கும் மற்றும் நாம் மேஜையில் 6:30க்கு இருக்க வேண்டும் ! " என்றும் சொல்லுவாள்.

நான் சற்று மிகைப்படுத்தி சொல்கின்றேன், ஆனால் அதிகம் இல்லை. என் மனைவி ஒரு குடும்பமாக ஒவ்வொரு இரவும் ஒன்றாக இரவு உணவு உண்ண வேண்டும் என்று வலியுறுத்தினாள். முதலில், அது ஏன் முக்கியம் என்று நான் உணரவில்லை.

ஆனால் காலப்போக்கில், குறிப்பாக என் குழந்தைகளின் இளமை பருவத்தில், நான் அதின் மதிப்பை உணர்ந்தேன். ஒவ்வொரு நாளும் அந்த ஒரு முறை மட்டுமே நாங்கள் எல்லாரும் கண்ணு-க்கு-கண்ணைப் பார்த்து பேசினோம். நாங்கள் சில விஷயங்களைப் பற்றி பேசிவோம். அவர்களின் மனதில் உள்ளதை கேட்போம், அவர்களும் எங்களுடைய எண்ணத்தைக் கேட்டறிவார்கள். அதுமட்டும் அல்லாமல் பெற்றோர்களாகிய நாங்கள் எப்படி பேசுகிறோம், ஒன்றாக வேலை செய்கிறோம், ஒருவருக்கொருவர் எப்படி நேசிக்கிறோம் என்பதியும் அவர்கள் பார்க்கும் நேரமும் அதுவே. அண்ணன் மற்றும் தங்கையாக குடும்பத்தினருடன் உட்கார்ந்தார் செலவிடும் அந்த சற்று நேரம்.

வீட்டில் இல்லையென்றால், உங்கள் குழந்தைகள் காதல், குடும்ப இயக்கவியல், விசுவாசம், பரிவுணர்வு, தொடர்புடைய சிக்கல் தீர்க்கும் திறன், மற்றும் மன்னிப்பு ஆகிய இவையனைத்தையும் எங்கு கற்றுக்கொள்வார்கள்? திருமணத்திற்கும் குடும்ப வாழ்க்கைகும் யார் அவர்களை ஆயத்தப்படுத்துவர்கள்? என் குழந்தைகள் இவை அனைத்தையும் கற்றுக்கொள்ள ஒரு "கணவன் பள்ளியோ" அல்லது "மனைவிப் பள்ளியோ" இருப்பதாக எனக்கு தெரியவில்லை.

கேள்வி: உங்கள் குடும்பம் எந்த ஒழுங்குமுறையுடனாகிலும் வீட்டில் எல்லாரும் ஒன்றாக உட்காருகிறது உண்டா? உங்களையே கேட்டு பாருங்கள், "இப்போது இருந்து இருபது ஆண்டுகள் பின், உங்கள் குழந்தைகள் வெளிப்புற நடவடிக்கைகளில் இருந்து வரும் பொருள்களுக்கு, 101 குடும்பத்தை விட அதிக முக்கியத்துவம் கொடுபார்களா?"

நாள் 3நாள் 5

இந்த திட்டத்தைப் பற்றி

Radical Wisdom: A 7-Day Journey For Fathers

தந்தைகள் நம்மை எவ்வளவு வடிவமைக்கின்றனர் என்பது மிகவும் வினோதமானது. உலகத்திற்குரிய தந்தையின் சக்தியையும் தாக்கத்தையும் விட்டு யாரும் தப்பிப்பதில்லை. மற்றும் பல ஆண்களும் தந்தையாக இருப்பதற்கு அவர்கள் தயாராகவில்லை என்று உணர்வதால் - வேதத்திலிருந்தும் பிற தந்தைளிடமிருந்தும், வழிநடத்துதல் பெறுவது அவசியம். தீவிர ஞானம் என்பது வேதத்திலுள்ள கொள்கைகளையும் ஞானத்தையும் தன்னுடைய தவறுகளிலிருந்து கற்றுக்கொண்ட ஒரு வயதுமிக்க, ஞானமிக்க தந்தையின் அனுபவத்தோடு கலப்பதின் மூலம், ஞானம் மற்றும் தந்தைகளுக்கான ஆழ்ந்த அறிவு நோக்கிய ஒரு பயனமாகும்.

More

இந்த திட்டத்தை வழங்கியமைக்காக Radical Mentoring இற்கு எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.மேலும் தகவல் அறிய http://radicalwisdombook.com க்கு செல்லவும்