தீவிர ஞானம்: தந்தைகளுக்கான 7-நாள் பயனம்மாதிரி

Radical Wisdom: A 7-Day Journey For Fathers

7 ல் 5 நாள்

நிறைவு (எதிர்). பற்றாக்குறை

பிள்ளை வளர்ப்பு கடுமையானது. இது மிகவும் கடினமான வேலைகளில் ஒன்றாகும். எந்த கையேடும் கிடையாது, எந்த நிறுவப்பட்ட சூத்திரமும் இல்லை, மற்றும் தேவன் ஒவ்வொரு குழந்தையையும் வெவேறு விதமாக படைத்திருக்கிறார். காலப்போக்கில், நீங்கள் அர்த்தமுள்ளதாக இருக்கும் ஒரு கொள்கைகயைக் கைப்பற்றி; அதை செயல்படுத்த முயற்சி செய்கிறீர்கள், அது வேலை செய்தால், அது உங்களுடயதாகிறது.

எனவே நான் இதை முன்மொழிய போகிறேன்: உங்கள் குழந்தைகளுக்கு என ஒரு நிறைந்த சூழலை உருவாக்குங்கள்.

குழந்தைகளின் தேவையே அன்பு மட்டுமே. அது இந்த உலகின் விதியைப் போலவே இருக்கிறது, எது குறுகிய விநியோகத்தில் இருக்கிறதோ, அது மிகவும் மதிப்புமிக்கதாகிவிடும், மேலும் விவாதத்தையும் உருவாக்குகிறது. எது ஏராளமாக இருக்கிறதோ, அதற்கு பெரிய மதிப்பு இல்லை.

எண்ணெய் மற்றும் உப்பை எடுத்துக்காட்டாக எடுத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு நாட்டிற்கும் பெட்ரோலியம் தேவை, அதனால் அதற்கான கடுமையான போட்டி இருக்கிறது. விலையும் உயர்ந்துக்கொன்டே போகிறது. நாமும் அதற்காக போராடுகிறோம், லஞ்சம் கொடுக்கிறோம், ஆன்மாக்களையே எண்ணெய்க்காக விற்கிறோம்.

மறுபுறம், உப்பு மனித வாழ்வுக்கான ஒரு அத்தியாவசிமாகும், ஆனால் அது மிகுதியாக கிடைக்கிறது. உப்பு ஒரு பொட்டலின் விலை ஒரு சில சில்லறைகள் ஆகும். காரணம் அது ஏராளமாக கிடைக்கின்றது.

அப்பாக்கள் தங்கள் குழந்தைகளுடன் வேலைப்பளுவினால் ஈடுபடத் தவறினால், அவர்கள் பிள்ளைகள், அப்பாவிற்கு தங்கள் இருப்பில் அதிக, நாட்டம் இல்லை என சிந்திக்க தொடங்கிவிடுவர். அப்பாவின் இருப்பு நேரம் குறைந்து, குழந்தைகளுடன் வெளியே செலவிட உண்மையிலேயே நேரம் இல்லை என்றால், அது ஒரு பற்றாக்குறையான சூழல்.

ஆனால் அப்பாக்கள் முடிவில்லாத அன்பை வழங்கும்போது, ​​அப்பாவின் தொடர்ச்சியான ஏராளமான இருப்பு இருக்கும்போது, ​​குறைவான போட்டி, குறைவான கையாளுதல் மற்றும் வீட்டில் அதிக அமைதி இருக்கும். அப்பா உடல் ரீதியாகவும் உணர்ச்சி ரீதியாகவும் இருக்க வேண்டும் .

ஒரு நிறைவான சூழல் இயற்கையாகவே அமைவதில்லை, அது எளிதானதும் அல்ல.

ஆனால் அது மதிப்புக்குரியது.

கேள்வி: உங்கள் வீட்டில் நிறைவான சூழலா அல்லது பற்றாக்குறையான சூழலா? குழந்தைகள் நிறைவான அன்பின் சூழலில் செழித்து வளர்கிறார்கள். அவர்கள் பற்றாக்குறையான சூழலில் பாடுபடுகிறார்கள்.

நாள் 4நாள் 6

இந்த திட்டத்தைப் பற்றி

Radical Wisdom: A 7-Day Journey For Fathers

தந்தைகள் நம்மை எவ்வளவு வடிவமைக்கின்றனர் என்பது மிகவும் வினோதமானது. உலகத்திற்குரிய தந்தையின் சக்தியையும் தாக்கத்தையும் விட்டு யாரும் தப்பிப்பதில்லை. மற்றும் பல ஆண்களும் தந்தையாக இருப்பதற்கு அவர்கள் தயாராகவில்லை என்று உணர்வதால் - வேதத்திலிருந்தும் பிற தந்தைளிடமிருந்தும், வழிநடத்துதல் பெறுவது அவசியம். தீவிர ஞானம் என்பது வேதத்திலுள்ள கொள்கைகளையும் ஞானத்தையும் தன்னுடைய தவறுகளிலிருந்து கற்றுக்கொண்ட ஒரு வயதுமிக்க, ஞானமிக்க தந்தையின் அனுபவத்தோடு கலப்பதின் மூலம், ஞானம் மற்றும் தந்தைகளுக்கான ஆழ்ந்த அறிவு நோக்கிய ஒரு பயனமாகும்.

More

இந்த திட்டத்தை வழங்கியமைக்காக Radical Mentoring இற்கு எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.மேலும் தகவல் அறிய http://radicalwisdombook.com க்கு செல்லவும்