தீவிர ஞானம்: தந்தைகளுக்கான 7-நாள் பயனம்மாதிரி

Radical Wisdom: A 7-Day Journey For Fathers

7 ல் 6 நாள்

இயேசுவைப் - பின்பற்றும் அப்பாக்கள்

இயேசுவைப் பின்பற்றும் அப்பாக்கள் தங்கள் குழந்தைகளுக்குப், அவர்கள் கிறிஸ்துவில் யாராக இருக்கிறார்கள் என புரிய உதவுவதன் மூலம் தொடங்குகிறார்கள். அவர்கள் மன்னாதி மன்னரின் தத்தெடுக்கப்பட்ட குழந்தை என்று உங்கள் குழந்தைக்குத் தெரியுமா - முற்றிலும் மன்னிக்கப்பட்ட, முற்றிலும் போதுமான, மற்றும் தகுதியனவர்கள் என்று?

கிறிஸ்துவில் அவர்கள் யார் என்பதை குழந்தைகள் புரிந்து கொள்ளும்போது, ​​அவர்கள் ஒரு அர்த்தமுள்ள அடையாளத்தைக் கண்டுபிடிக்கிறார்கள். சரியானது மற்றும் தவறானது தெளிவற்றதாகத் தோன்றும் போது அல்லது பெற்றோர்கள் ஒரு முடிவைத் திரும்பப் பெறும்போது அந்த தருணங்களில் என்ன செய்வது என்பதை அறிந்து கொள்வதில் இந்த அடையாளம் மிகவும் முக்கியமானதாக விளங்குகிறது.

அவர்களின் சிந்தனை செயல்முறை இவ்வாறாக அமையும்"இயேசு என்னைக்கொண்டு என்ன செய்வார்?" ஏனென்றால், கிறிஸ்துவில் அவர்களின் அடையாளம் தான் அவர்கள் யார் என்பதற்கான அடித்தளம்.

என் நண்பர்கள் கிரேக் மற்றும் கெர்ரிக்கு மூன்று அற்புதமான மகள்கள் உள்ளனர். குட்டை பாவடைகள் மற்றும் குறைந்த வெட்டு ரவிக்கைகளைப் பற்றி முடிவுகள் வரும்போது, ​​​​கெர்ரி கேட்கிறார், “அது பொருத்தமானது என்று நீங்கள் நினைக்கிறீர்களா?” நிறைய குழந்தைகள் இவ்வாறாக சிந்திப்பர், அம்மா தனது யோசனையை தன் மீது திணிக்கிறார் என்று.

ஆனால் இந்த பெண்கள் தங்கள் சொந்த அடையாளங்களை உருவாக்கியுள்ளனர். . . எது பொருத்தமானது மற்றும் எது பொறுத்தமற்றது என்பதற்கான அவர்களின் சொந்த தரநிலைகள். எதை அணியலாம், எதைச் செய்யக்கூடாது என்பது பற்றிய பெரும்பாலான சண்டைகளை அவர்கள் தவிர்த்துவிட்டார்கள், ஏனென்றால் அவர்கள் தங்களைத் தாங்களே நிதானித்து கொண்டார்கள். "நான் யாரென்று எனக்கு தெரியும். என்னைப் போன்றவர்கள் இதுபோன்ற ஆடைகளை அணிய மாட்டார்கள். என்னைப் போன்றவர்கள் இந்த மாதிரியான விஷயங்களைச் செய்ய மாட்டார்கள். ”

கேள்வி: உங்கள் குழந்தைகளுடைய கிறிஸ்துவின் அடையாளத்தை நீங்கள் கவனத்தில் கொள்வீர்களா?

நாள் 5நாள் 7

இந்த திட்டத்தைப் பற்றி

Radical Wisdom: A 7-Day Journey For Fathers

தந்தைகள் நம்மை எவ்வளவு வடிவமைக்கின்றனர் என்பது மிகவும் வினோதமானது. உலகத்திற்குரிய தந்தையின் சக்தியையும் தாக்கத்தையும் விட்டு யாரும் தப்பிப்பதில்லை. மற்றும் பல ஆண்களும் தந்தையாக இருப்பதற்கு அவர்கள் தயாராகவில்லை என்று உணர்வதால் - வேதத்திலிருந்தும் பிற தந்தைளிடமிருந்தும், வழிநடத்துதல் பெறுவது அவசியம். தீவிர ஞானம் என்பது வேதத்திலுள்ள கொள்கைகளையும் ஞானத்தையும் தன்னுடைய தவறுகளிலிருந்து கற்றுக்கொண்ட ஒரு வயதுமிக்க, ஞானமிக்க தந்தையின் அனுபவத்தோடு கலப்பதின் மூலம், ஞானம் மற்றும் தந்தைகளுக்கான ஆழ்ந்த அறிவு நோக்கிய ஒரு பயனமாகும்.

More

இந்த திட்டத்தை வழங்கியமைக்காக Radical Mentoring இற்கு எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.மேலும் தகவல் அறிய http://radicalwisdombook.com க்கு செல்லவும்