தீவிர ஞானம்: தந்தைகளுக்கான 7-நாள் பயனம்மாதிரி
சில வருத்தங்களுடன் ஒரு தந்தை
"பகுத்தறிவு முறை"யிலான முடிவெடுக்கும் தன்மை வணிகத்தில் ஒரு சகாப்தம். பின்னர் நாம் பல சூத்திரங்களை உருவாக்கி, வெற்றியின் நிகழ்ச்சி மிக உயர்ந்ததாகவும் மற்றும் தோல்வியின் மிகக் குறைவானதகும் மாற்றினோம். நாம் சில விஷயங்களைச் செய்தால், பெரும்பாலான நேரங்களில் வெற்றி பெறுவோம் என்ற நோக்கத்தொடவே விளையாடினோம்.
தந்தையர்களாக, நாம் நமது குழந்தைகளுடன் விளையாடும் போது “முரண்பாடுகளுடன் விளையாட” விரும்பவில்லை, அதாவது வெற்றி பெறும் நோக்கு இல்லை. நாம் என்ன செய்தாலும், அவர்கள் அற்புதமான, இயேசுவைப் பின்பற்றும் பெரியவர்களாக மாறுவார்கள் என்று நம்மால் அவர்களுக்கு உத்தரவாதம் அளிக்க முடியாது. ஆனால் நமக்காக வருத்தத்தின் மிகக் குறைந்த குணத்திற்கு வழிவகுக்கும் முடிவுகளை நாம் எடுக்க முடியும்! நாம் பிற்காலத்தில் வருத்தப்பட வேண்டிய விஷயங்களைச் செய்யக் கூடாது என்று நமக்கு நாமே தேர்வு செய்யலாம்.
பல ஆண்கள் தங்கள் நாக்கையும் மனநிலையையும் கட்டுப்படுத்தாத தகபபன்களினால் ஏற்பட்ட வடுக்களுடன் வாழ்கின்றனர். “பிதாக்களே, உங்கள் பிள்ளைகளை கோபப்படுத்தாதீர்கள்; அதற்கு பதிலாக, கர்த்தருடைய பயிற்சியிலும் போதனையிலும் அவர்களை வளருங்கள். "குறைந்தபட்சம், நாம்அமைதியாகஇருப்பது நல்லது. உங்களது விமர்சனத்தையும் கோபத்தையும் கட்டுப்படுத்துங்கள். நாம் அதைச் செய்கிறோம் என்பதை பொதுவாக . . . நம் தன்மை மாறும் வரை அடையாளம் காண முடியாது.
நாம் நமது அப்பாக்களிடமிருந்து பாராட்டு மற்றும் உறுதிப்படுத்தும் வார்த்தைகளைக் கேட்க ஏங்கினோம், ஆனால் நம்மில் பலர் ஒருபோதும் கேட்கவில்லை. பெருமை நம்மை எவ்வாறு முடக்குகிறது என்பது ஆச்சரியமாக இருக்கிறது. நாம் இயந்திர காளைகளில் மற்றும் மோட்டார் சைக்கிளில் சவாரி செய்வோம், ஆனால் நமது மகன்களுக்கும் மகள்களுக்கும் அவர்கள் எவ்வளவு சிறப்பு வாய்ந்தவர்கள், நாம் அவர்களை எவ்வளவு நேசிக்கிறோம் என்று சொல்வதன் மூலம் வித்தியாசமாக அல்லது மென்மையாக ஒலிப்போம் என்ற அச்சத்தால் நாம் சொல்லாமலேயே இருந்து விடுகிறோம்.
உங்கள் குழந்தைகளுக்காக நீங்கள் முழுமையாக இருக்கிறீர்களா? நீங்கள் ஒரு தந்தையாக இருப்பதன் மூலம், உங்கள் சாலையில் வருத்தப்படுவதற்கான குறைந்தபட்ச குணம் உங்களுக்கு இருக்கிறதா?/p>
கேள்வி: இப்போதிருந்தே ஒரு தந்தையாக நீங்கள் வருத்தப்படப்போகிறகிற மிகப் பெரிய விஷயத்தைக் காட்டும்படி தேவனிடம் கேட்பீர்களா? அதைச் சமாளிக்க உங்களுக்கு தைரியம் தரும்படி அவரிடம் கேளுங்கள்?
இந்த திட்டத்தைப் பற்றி
தந்தைகள் நம்மை எவ்வளவு வடிவமைக்கின்றனர் என்பது மிகவும் வினோதமானது. உலகத்திற்குரிய தந்தையின் சக்தியையும் தாக்கத்தையும் விட்டு யாரும் தப்பிப்பதில்லை. மற்றும் பல ஆண்களும் தந்தையாக இருப்பதற்கு அவர்கள் தயாராகவில்லை என்று உணர்வதால் - வேதத்திலிருந்தும் பிற தந்தைளிடமிருந்தும், வழிநடத்துதல் பெறுவது அவசியம். தீவிர ஞானம் என்பது வேதத்திலுள்ள கொள்கைகளையும் ஞானத்தையும் தன்னுடைய தவறுகளிலிருந்து கற்றுக்கொண்ட ஒரு வயதுமிக்க, ஞானமிக்க தந்தையின் அனுபவத்தோடு கலப்பதின் மூலம், ஞானம் மற்றும் தந்தைகளுக்கான ஆழ்ந்த அறிவு நோக்கிய ஒரு பயனமாகும்.
More