தீவிர ஞானம்: தந்தைகளுக்கான 7-நாள் பயனம்மாதிரி
எதை மகிமைப்படுத்துகிறாயோ அதையே நீ பெறுவாய்
என்றாவது ஒரு சிறு பெண் தன் தாயால் "அலங்காரம்" செய்யப்பட்டு, ஒப்பனைகள், கன்னங்களை நிறப்படுத்தும் பொடி, கண்மை மற்றும் உதட்டுச்சாயம் போன்றவற்றிற்கு குழந்தையாக உள்ளபோதே அறிமுகப்படுத்தப்பட்டதை பார்த்துள்ளீரா? பின்பு அவள் அழகாய் இருக்கிறாள் என்றல்ல, அவள் (அல்லது அவள் தாய்) அப்படியிருக்க கடினமாக முயன்றுகொண்டிருப்பதால், அவள் எவ்வளவு அழகானவள் என்று பிறரரால் பாராட்டப்படுவாள்.
ஒரு சின்ன லீக் போட்டிக்கு நீங்கள் சென்று அங்கே தந்தை ஒருவர் தன் மகன் அடிக்கும் ஒவ்வொரு ஓட்டத்திற்கு அல்லது பார்வையாளருக்குள் அடிக்கும் ஒவ்வொரு பந்திற்கும் ஆர்பரித்து கத்துவதை பார்த்ததுன்டா? ஒவ்வொரு முறையும் அவன் சருக்கலோடு ஓட்டத்தை முடித்து புள்ளிகளை பெறும்போதும், பிறரோடு அவர் கைகளை தட்டிக்கொள்வார்.
நான் அத்தகைய வாலிப சிறுவர்களும் சிறுமிகளும் ஆண்களும் பெண்களுமாக வளர்வதை காணும் அளவிற்கு நீண்ட காலம் வாழ்ந்திருக்கிறேன், மற்றும் நீ எதை மகிமைப்படுத்துகிறாயோ அதையே நீ பெறுவாய்!என்பதையும் நான் கண்டுள்ளேன்
நாம் நம் குழந்தைகளையும் பதின்வயதினரையும் உடைஅலங்காரத்தில் அருமையாக்க நேரத்தையும் என்னற்ற பணத்தையும் செலவு செய்தால், நாம் "துணிமணி கொக்கிகளை" தான் அவர்கள் வளரும்போது பெறுவோம். நம் மகன்கள் மகிமைபெறும் ஒரே வழி அவர்களுடைய விளையாட்டு செயல்திறன் என்றால், அவர்கள் வயதடையும் போது விளையாட்டுடன் மூழ்கிப்போனவர்களை தான் நாம் பெறுவோம்.
ஆடைகள் அல்லது அலங்காரங்களில் தப்பொன்றுமில்லை, விளையாட்டுக்களிலும் தவறொன்றுமில்லை.
ஆனால் உங்கள் குழந்தைகளுக்குள் எதை நீங்கள் மகிமைப்படுத்துகிறீர்கள் என்பதில் ஜாக்கிரதையாயிருங்கள்.
என்னுடைய அகராதியில், "மகிமை" எனும் சொல்லை "பாராட்டு" எனும் சொல்லாலும் குறிக்கலாம். உங்கள் குழந்தைகளிடம் எதை நீங்கள் பாராட்டுகிறீர்களோ அதுவே அவர்கள் வளரும்போது தங்களுக்காக மேற்கொள்ளுவதாதிவிடும்.
உங்கள் குழந்தைகளிடம் பிறர் மீதான அன்பை மகிமைப்படுத்த நினைத்திடுங்கள். அவர்களுடைய சகோதரன் அல்லது சகோதரிக்காக அவர்கள் செய்வது ஒன்றை பார்க்க முற்படுங்கள். அதற்காக அவர்களை பாராட்டுங்கள். அவர்களை ஜெபிப்பது, வேதம் வாசிப்பது, இயேசுவைக் குறித்து கேட்பது, ஆலயத்திற்கு, கருனை இல்லங்களுக்கு, அல்லது ஏழைகளுக்கு பண உதவியளிப்பது போன்றவற்றிற்காக மகிமைப்படுத்துங்கள்.
ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள், நீங்களே வழிநடத்துபவர். எதை நோக்கி என்பதே கேள்வி.
கேள்வி:நீங்கள் எதை உங்கள் குழந்தைகள் வயோதிபர்களாக வளரும் போது பெறவேண்டும் என நம்புகிறீர்களோ அதை மகிமைபடுத்தி கொண்டிருக்கிறீர்களா?
இந்த திட்டத்தைப் பற்றி
தந்தைகள் நம்மை எவ்வளவு வடிவமைக்கின்றனர் என்பது மிகவும் வினோதமானது. உலகத்திற்குரிய தந்தையின் சக்தியையும் தாக்கத்தையும் விட்டு யாரும் தப்பிப்பதில்லை. மற்றும் பல ஆண்களும் தந்தையாக இருப்பதற்கு அவர்கள் தயாராகவில்லை என்று உணர்வதால் - வேதத்திலிருந்தும் பிற தந்தைளிடமிருந்தும், வழிநடத்துதல் பெறுவது அவசியம். தீவிர ஞானம் என்பது வேதத்திலுள்ள கொள்கைகளையும் ஞானத்தையும் தன்னுடைய தவறுகளிலிருந்து கற்றுக்கொண்ட ஒரு வயதுமிக்க, ஞானமிக்க தந்தையின் அனுபவத்தோடு கலப்பதின் மூலம், ஞானம் மற்றும் தந்தைகளுக்கான ஆழ்ந்த அறிவு நோக்கிய ஒரு பயனமாகும்.
More