நோயல்: அனைவருக்கும் கிறிஸ்துமஸ்மாதிரி

Noel: Christmas Is For Everyone

12 ல் 6 நாள்

எளிய ஆரம்பங்கள்

Danny Saavedra  

“தேவதூதன் அவளை நோக்கி: 'மரியாளே, பயப்படாதே; நீ தேவனிடத்தில் கிருபைபெற்றாய். இதோ, நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக' . . . அதற்கு மரியாள்: 'இதோ, நான் ஆண்டவருக்கு அடிமை, உம்முடைய வார்த்தையின்படி எனக்கு ஆகக்கடவது' என்றாள். ”—லூக்கா 1:30–31, 38

கற்பனைக் கதைகளில் சிறந்த வீரர்களில் தனித்தன்மை வாய்ந்த ஒன்று லார்ட் ஆப் த ரிங்ஸ் படங்களில் உள்ள ப்ரோடோ என்ற கதாப்பாத்திரம். ஏன்? ஏனென்றால் ஹெர்குலஸ், வண்டர் வுமன், தார், அல்லது சூப்பர் மேன் போன்ற பெரிய உருவம் கொண்ட, வல்லமை நிறைந்த, தெய்வத்தன்மைகள் பெற்றவன் அல்ல அவன். அனகின் அல்லது லுக் ஸ்கை வாக்கர் போல அசாதரணமான வல்ல சக்திகள் கொண்டவனும் அல்ல. பேட்மேன் போல சிறந்த பயிற்சி பெற்ற போர்வீரனோ, அவனைப் போல நுட்பமான ஆயுதங்களையும் ஆயுத வர்க்கங்களையும் செய்யக் கூடிய கோடீஸ்வரனும் அல்ல. ப்ரோடோ இப்படிப் பட்டவன் அல்ல. அவன் ஷைரை சார்ந்த அனுபவமற்ற, சாந்தமான, மென்மையான, சிறிய மனிதன். அவன் ஒரு எளிய 'ஹாபிட்'. ஆனால் த பெல்லோஷிப் ஆப் த ரிங்திரைப்படத்தில் கலாட்ரியல் சொல்வதுப் போல, “மிகச் சிறிய மனிதன் கூட எதிர்காலத்தின் திசையை மாற்ற முடியும்” 

ப்ரோடோவை சிறப்பாக்கியது அவனது மனிதத்தன்மைக்கு அப்பாற்பட்ட தன்மைகள் அல்ல, மேதைத் தன்மையோ அல்லது பிறப்புரிமையோ அல்ல . . . விசுவாசத்தில் அடியெடுத்து வைக்கக் கூடிய தன்மையே. அவன் வீரர்களுக்குள் வீரனாக இருப்பதன் காரணம், சாத்தியமற்ற இந்த செயலுக்கு அவன் சித்தப்படுத்தப்பட்டவனாக இல்லையென்றாலும் (அவனுக்கு மார்டர் செல்லும் வழி கூட தெரியாது), அவன் தாழ்மையில் அடி எடுத்து வைத்தான், அழைப்பு வந்தப்போது அதனை ஏற்றுக்கொண்டான்.  

இந்த மிகச்சிறிய வீரன் ஒரு ஆழ்ந்த வேதாகமக் கருத்தை சித்தரிக்கிறான். தேவன் யாரை வேண்டுமானாலும், மிக எளிய நபரைக் கூட பயன்படுத்தி, மிகவும் அற்புதமான பணியை செய்யலாம். ஒரு ராட்சசனை வீழ்த்திய இளம் ஆடு மேய்க்கும் சிறுவனிலிருந்து தன் மாமியாருக்கு அதிக நன்றியுணர்வுள்ளவளாய் இருந்த ஒரு விதவை, மற்றும் எந்த நன்மையும் வரமுடியாத (யோவான் 1:46) நாசரேத்திலிருந்து வந்த, "எல்லா பெண்களுக்கும் மேல் தேவன் ஆசீர்வதித்த" இளம் கன்னிப்பெண் வரை, தேவன் மிகச்சிறிய, மிக எளிய மக்கள் மூலம் பெரிய காரியங்களை செய்யும் பணயில் இருக்கிறார்.

ஏன் மரியாள்? ப்ரோடோவைப் போல, "சிறந்தவள்" என்று சொல்லப்படுவதற்கு அவளிடம் எதுவும் இல்லை. புகழ் பெற்ற குடும்பத்திலிருந்து அவள் வரவில்லை. மக்களுக்குள் மகத்துவமாக அவள் எண்ணப்படவில்லை. ஆனால் தேவனிடத்தில் அதிகமாக ஆசிப்பெற்றவளாக இருந்தாள். பரிசுத்த ஆவியானவர் மூலம் அவள் ஒரு குழந்தையை பெறுவாள் என்று காபிரியேல் சொன்னதும் அவள் சொன்ன பதிலே நமக்கு காட்டுகிறது ஏன் தேவன் அவளை தெரிந்துக் கொண்டார் என்றும், அவள் ஏன் அதிக ஆசிப்பெற்றவள் என்றும் இந்த கௌரவத்தால் ஏன் ஆசீர்வதிக்கப்பட்டாள் என்றும்.  

லூக்கா 1:38 இல் அவள் இப்படி சொல்கிறாள், "நான் ஆண்டவருக்கு அடிமை, உம்முடைய வார்த்தையின்படி எனக்கு ஆகக்கடவது”. அவள் இங்கே காட்டும் தாழ்மையை பாருங்களேன்! இந்த பைத்தியக்காரத்தனமான, சாத்தியமற்ற, அச்சுறுத்தும் செய்திக்கு, அவள் கொடுத்த பதில், "இதோ, நான் ஆண்டவருக்கு அடிமை." அவள் நிச்சயம் செய்யப்பட்ட, திருமணமாகாத, 12இல் இருந்து 14 வயது நிரம்பிய கன்னிப் பெண்ணாக இருந்தாள். 

யாரும் அவளை நம்ப மாட்டார்கள் என்று அவளுக்குத் தெரியும். இகழ்ச்சியான, ஆபத்தான காரியமாக இது இருக்கக்கூடும் என்றும் அறிந்திருந்தாள், ஆனாலும் தேவனை நம்பினாள். அவள் நிச்சயம் செய்யப்பட்டிருக்கும் போது கருவுற்றிருந்ததால், யோசேப்பு உயிரியல் ரீதியான தகப்பன் அல்ல என்பதால், அவன் அவளை பொதுவாக அவமானப்படுத்தியிருக்கலாம் அல்லது கல் எறிந்து கொன்றிருக்கலாம். அவள் தேவனையும் அவர் வார்த்தையையும் நம்பினாள். தேவனுடைய வேலையை செய்ய அவரால் பயன்படுத்தப்பட அவள் தன்னை விட்டுக் கொடுத்தாள். அவளுக்கு தேவன் கொடுத்த அழைப்புக்கு அவள் சித்தப்படவில்லை என்று அவள் அறிந்தும், தன் வாழ்க்கையை, சித்தத்தை, எதிர்க்காலத்தை அவருடைய கைகளில் ஒப்புக்கொடுத்தாள், ஏனென்றால் வழியில் உள்ள ஒவ்வொரு படியிலும் அவர் அவளுடன் இருப்பார் என்று அவள் நம்பினாள்.

நம் சொந்த வாழ்க்கையிலும், நம்மை சுற்றியுள்ள மக்களின் வாழ்க்கையிலும் அற்புதங்களை நிகழ்த்த, நம்மிடமிருந்து தேவனுக்கு தேவைப்படுவது இது தான். மிகவும் திறன் பெற்று, அதிக தகுதி கொண்ட மேதைகளாக நாம் இருக்க வேண்டுவதில்லை. பயிற்சியற்ற மீன் பிடிப்பவர்களை, ஏழை விதவைகளை, தள்ளப்பட்டவர்களை அவர் பயன்படுத்தியது போலவே, வியத்தகு திறன்களும், தாலந்துகளும், வளங்களும், திறமைகளும் கொண்டவர்களையும் அவர் பயன்படுத்துகிறார், ஆனால் அவருடைய சிறந்த பணியை செய்வதற்கு அது அவசியமானது அல்ல. மாறாக, தாழ்மையானவர்கள், பயன்படுத்தப்பட சித்தமுள்ளவர்களும், அதற்காக ஆயத்தமாக இருப்பவர்களின் வாழ்க்கையில் தான் தன் சிறந்த பணியை தேவன் செய்ய முடியும். நீங்கள் என்ன செய்ய முடியும் என்பது பற்றியது அல்ல, ஆனால், உங்களிலும் உங்கள் மூலமாகவும் அவரை என்ன செய்ய விடுகிறீர்கள் என்பது பற்றியது தான். "நான் ஆண்டவருக்கு அடிமை, உம்முடைய வார்த்தையின்படி எனக்கு ஆகக்கடவது" என்று சொல்பவர்களை அவர் ஆசீர்வதிக்கிறார்.  

மரியாளை போல, தேவன் எழுதும் இந்த அற்புதமான மீட்பின் கதையில் நாம் அனைவருக்கும் ஒரு பங்கு இருக்கிறது. சீடர்களை உருவாக்கவும், நற்செய்தியை பிரசங்கிக்கவும், அவரது சாட்சிகளாக இருக்கவும் நாம் அனைவருக்கும் ஒரு அற்புதமான அழைப்பு இருக்கிறது. இதனை செய்து முடிக்க நாம் அறிஞர்களாகவோ சிறந்த பேச்சாளர்களாகவோ இருக்க வேண்டுமா? இல்லை! "இதோ நான் ஆண்டவருக்கு அடிமை, உம்முடைய வார்த்தையின்படி எனக்கு ஆகக்கடவது” என்று தான் சொல்ல வேண்டும்.

நாள் 5நாள் 7

இந்த திட்டத்தைப் பற்றி

Noel: Christmas Is For Everyone

அடுத்த 12 நாட்களில் நாம் கிறிஸ்துமஸ் கதையின் வழியாக பயணம் செய்யவிருக்கிறோம். இது வரை சொல்லப்பட்ட மிகப்பெரிய கதையாக இது இருப்பதோடு, கிறிஸ்துமஸ் எப்படி உண்மையாகவே எல்லாருக்காகவும் உண்டானது என்பதையும் கண்டறிய போகிறோம்!

More

இந்த திட்டத்தை வழங்கியதற்காக Calvary Chapel Ft. Lauderdale க்கு நன்றி தெரிவிக்கிறோம். மேலும் தகவல் அறிய http://CalvaryFTL.org க்கு செல்லவும்