நோயல்: அனைவருக்கும் கிறிஸ்துமஸ்மாதிரி
மிகப்பெரிய பரிசு
Danny Saavedra
“தேவன் தம்முடைய ஒரே பேரான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப் போகாமல் நித்திய ஜீவனை அடையும் படிக்கு அவரைத் தந்தருளி இவ்வளவாய் உலகத்தில் அன்புக்கூர்ந்தார்.”—யோவான் 3:16
இன்று கிறிஸ்துமசுக்கு முந்தைய நாளாக இருப்பதால், நாம் எல்லாரும் நேர்மையாக ஒத்துக்கொள்ளலாம், நமக்கு பரிசுகள் பெறுவதென்றால் மிகவும் பிடிக்கும் என்று! பரிசு பெறுவதென்றால் யாருக்கு தான் பிடிக்காது? உங்கள் மேல் அக்கறை வைத்திருப்பவர்களிடமிருந்து நல்ல பொருட்களை பெறுவதைப் பற்றி பிடிக்காதது என்று என்ன தான் இருக்க முடியும்? மக்களிடமிருந்து பரிசுகள் பெறுவதென்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். அங்கீகாரத்திற்கும் ஏற்றுக்கொள்ளப் படுவதற்குமான என் தேவைகளை அது திருப்தி செய்கிறது. ஏன்? ஏனென்றால், மக்களிடமிருந்து அன்பளிப்புகள் பெறுவது அவர்கள் என்னை உண்மையாக நேசிப்பது போலவும், பாராட்டுவதுப் போலவும், என்னை நானாகவே ஏற்றுக்கொள்வது போலவும் என்னை உணரச் செய்கிறது.
நாம் இன்றைய பாடத்திற்குள் செல்வதற்கு முன், ஒன்று கேட்கிறேன். . . நீங்கள் இது வரை பெற்றதில் மிகச்சிறந்த அன்பளிப்பு என்ன? நான் சிறு பிள்ளையாக இருக்கும் போது எனக்கு கொடுக்கப்பட்ட மிகச்சிறந்த அன்பளிப்பு எனக்கு நினைவிருக்கிறது. அது ஒரு Super Mario 64 கொண்ட Nintendo 64. அந்த பொருளிலிருந்து எனக்கு பல மணி நேரங்களும் மிகுந்த சந்தோஷமும் கிடைத்தது.
இன்று வரை, எனக்கு அன்பளிப்புகள் என்றால் மிகவும் பிடிக்கும். ஆனால், உண்மையாக சொல்லப்போனால், பெரியவனாக இருக்கும் போது, குறிப்பாக ஒரு அப்பாவாக, நான் கவனித்த ஒரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால், நான் பரிசுகள் கொடுப்பதில் இன்னும் அதிக சந்தோஷம் காண்கிறேன். நான் பெரியவனான பின் பெற்ற அன்பளிப்பு எதுவும் சிறுவனாக இருக்கும் போது பெற்ற பரிசு போல உணர வைத்தத்தில்லை. ஆனால் என் மகனோ மகளோ அவர்களுக்கு வேண்டிய பரிசை நான் அவர்களுக்கு கொடுக்கும் போது, அவர்கள் முகத்தில் சந்தோஷத்தையும் மகிழ்ச்சியையும் பார்க்கும் போதும், சந்தோஷம் நிறைந்த அரவணைப்பை உணரும் போதும், "நன்றி! நன்றி! நன்றி அப்பா!" என்று அவர்கள் சொல்வதைக் கேட்கும் போதும், எனக்கு அதே N64 நிலை அற்புதமான உணர்வுகள் மீண்டும் வருகின்றன.
இன்று நாம் கிறிஸ்துமஸ் கொண்டாடும் காரணத்தைப் பற்றி நான் நினைக்கையில், என் நினைவுக்கு வருவது மத்தேயு 7:11. அதில் இப்படியாக சொல்லப்பட்டிருக்கிறது, “ஆகையால், பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா?” நம் பரலோக பிதாவுக்கு நல்ல அன்பளிப்புக் கொடுக்க நன்றாகவே தெரியும்!
தேவன் தம் ஒரே பேரான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் நித்திய ஜீவனை அடையும் படிக்கு அவரைத் தந்தருளினார் என்று யோவான் 3:16 சொல்கிறது. "தம்முடைய சொந்தக்குமாரனென்றும்பாராமல் நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர், அவரோடேகூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பதெப்படி?" என்று சொல்லி ரோமர் 8:32 இன்னும் விரிவாக காட்டுகிறது. "நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையை அறிந்திருக்கிறீர்களே; அவர் ஐசுவரியமுள்ளவராயிருந்தும், நீங்கள் அவருடைய தரித்திரத்தினாலே ஐசுவரியவான்களாகும்படிக்கு, உங்கள்நிமித்தம் தரித்திரரானாரே." என்று 2 கொரிந்தியர் 8:9 சொல்கிறது.
அவர் ஏன் நமக்கு இந்த அன்பளிப்பைக் கொடுத்தார்? பரலோக ராஜா ஏன் கீழே வந்து நம் மத்தியில் தன் வாசஸ்தலத்தை ஏற்படுத்தினார்? "பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார்" என்று 1 தீமோத்தேயு 1:15 சொல்கிறது. "பாவத்தின் சம்பளம் மரணம்" என்று ரோமர் 6:23 இல் வெளிப்படையாக சொல்லப்பட்டிருக்கிறது. இது தான் நமக்கு கிடைக்க வேண்டியது. நம் பாவத்தினால் நாம் தேவனுக்கு கொடுக்க வேண்டிய கடனாகி விட்டது இது. பாவத்தில், நாம் பரிசுத்தமான மாசற்ற தேவனிடமிருந்து அகன்று நிற்கிறோம். ஆனால், அன்பும், கிருபையும், இரக்கமும் நிறைந்த நம் ஆண்டவர் அந்த பெரிய பிளவிற்கு இடையே பாலம் அமைக்க "நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவில் நித்திய ஜீவன்" ஆகிய "தேவனின் அன்பளிப்பை" நமக்கு கொடுப்பதன் மூலம் ஒரு திட்டத்தை அமைத்துள்ளார். "தம்முடைய ஒரேபேறான குமாரனாலே நாம் பிழைக்கும்படிக்கு தேவன் அவரை இவ்வுலகத்திலே அனுப்பினதினால்" இதனை அவர் அடைந்தார். (1 யோவான் 4:9).
கிறிஸ்துவை பின்பற்றுகிறவர்களாகிய நாம் கொடுத்துக் கொண்டே இருக்கக் கூடிய ஒரு அன்பளிப்பை பெற்றிருக்கிறோம். அந்த அன்பளிப்பு எப்போதுமே பழையதாகாது, எப்போதுமே உடையாது, எப்போதுமே தேய்ந்துப் போகாது, காலியாகாது, அதன் மதிப்பை எப்போதுமே இழக்காது; இந்த உலகம் அறிந்ததிலேயே மிகப் பெரிய அன்பளிப்பு அது . . . நாம் செய்ய வேண்டியது நம்புவது தான். நமக்கு அதனை அவர் இலவசமாய் கொடுப்பதற்காக, இயேசு மிகபெரிய, உயர்ந்த விலையை செலுத்தினார். அதனால் தான் யோவான் 3:16 வேதாகமத்திலேயே மிகவும் நன்கு அறிந்த வசனமாக இருக்கிறது, ஏனென்றால் தேவனுடைய அன்பின் மிக வல்லமையான, மிக எளிய வெளிப்பாடாக இருக்கிறது. அவரது அன்பளிப்பை ஒருவர் ஏற்றுக்கொள்ளும் போது அவர் எப்படி உணருகிறார் என்று தெரியுமா? லூக்கா 15:7 சொல்கிறது, மனம்திரும்பி யேசுவாகிய பரிசை ஏற்றுக்கொள்ளும் ஒரு பாவியின் நிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாகிறது!
எனவே, இன்று, இயேசுவின் பிறப்பை நாளை கொண்டாட ஆயத்தப்படும் போது, உங்கள் கிறிஸ்துமஸ் விருந்தை தயாரிக்கும் போதும், ஆலயத்திற்கு செல்ல நீங்கள் ஆயத்தப் பதும் போதும், கொண்டாடுவது நீங்கள் மட்டும் அல்ல என்று அறிந்துக் கொள்ளுங்கள். . . நீங்களும் நானும் அவருடைய பிள்ளைகளான அந்த பொழுதை பிதாபரலோகத்தில் கொண்டாடிக்கொண்டிருக்கிறார் என்று உறுதியாய் தெரிந்துக் கொள்ளுங்கள், அவரை அறிந்துக் கொள்ள மக்கள் வரும் போது, பரலோகத்தில் மிகுந்த மகிழ்ச்சி இருக்கும் என்றும் அறிந்துக்கொள்ளுங்கள்.
இந்த திட்டத்தைப் பற்றி
அடுத்த 12 நாட்களில் நாம் கிறிஸ்துமஸ் கதையின் வழியாக பயணம் செய்யவிருக்கிறோம். இது வரை சொல்லப்பட்ட மிகப்பெரிய கதையாக இது இருப்பதோடு, கிறிஸ்துமஸ் எப்படி உண்மையாகவே எல்லாருக்காகவும் உண்டானது என்பதையும் கண்டறிய போகிறோம்!
More