நோயல்: அனைவருக்கும் கிறிஸ்துமஸ்மாதிரி
யோசேப்பின் பயணம்
Danny Saavedra
“அவன் இப்படிச் சிந்தித்துக்கொண்டிருக்கையில், கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் அவனுக்குக் காணப்பட்டு: தாவீதின் குமாரனாகிய யோசேப்பே, உன் மனைவியாகிய மரியாளைச் சேர்த்துக்கொள்ள ஐயப்படாதே; அவளிடத்தில் உற்பத்தியாயிருக்கிறது பரிசுத்த ஆவியினால் உண்டானது. அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான். யோசேப்பு நித்திரைதெளிந்து எழுந்து, கர்த்தருடைய தூதன் தனக்குக் கட்டளையிட்டபடியே தன் மனைவியைச் சேர்த்துக்கொண்டு...”—மத்தேயு 1:20–21, 24 (NLT)
நீங்கள் ஒரு காரியத்திற்கென்று உங்களை ஒப்புவித்த பின், நீங்கள் நினைத்ததை விட அது கடினமானது என்று கண்டுப்பிடித்ததுண்டா? ஒரு பொருளை வாங்கியப்பின் அதை நினைத்து வருந்தியிருக்கிறீர்களா? என்ன சொல்ல வருகிறேன்? நீங்கள் நல்ல நிலையில் ஒரு காரை வாங்கி, சில மாதங்களுக்கு பின் அதற்கு புதிய ரேடியேட்டர் தேவைப்படுகிறது என்றும் அதற்கு அதிகமாக செலவு செய்ய வேண்டும் என்றும் கண்டுப்பித்திருக்கிறீர்களா?ஒரு குறிப்பிட்ட வேலைக்கென்று ஒரு பணியை செய்யத் துவங்கிய பின், உங்களுக்கு அனுபவம் இல்லாத பகுதியில் வேலையும் பொறுப்புகளும் கொடுக்கப்பட்டு ஆனால் சம்பள உயர்வு இல்லாமல், புதிய பதவியும் இல்லாமல், மற்ற பொறுப்புகளும் குறையாமல் இருக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதா? அப்படிப் பட்ட நேரத்தில் தான் நாம் யோசிக்கிறோம், நான் இதற்காக என்னை ஒப்புவிக்கவில்லையே!
மனைவியாகவிருப்பவள், அவளுடன் இன்னும் திருமண மஞ்சத்தை பகிர்ந்துக் கொள்ளவில்லை, ஆனால் அவள் கர்ப்பமாக இருக்கிறாள் என்று யோசேப்புக்கு தெரியவந்ததும் அவர் எப்படி உண்ர்ந்தார் என்று நினைக்கிறீர்கள்? தேவத்தூதன், கன்னியாக கருத்தரித்தல், மேசியா என நம்பமுடியாத, வினோதமான, சற்று பைத்தியமாக தென்படும் கதைகளை அவள் சொல்லும் போது அவர் எப்படி உணர்ந்திருப்பார்? பரிசுத்த ஆவியால் கர்ப்பம் தரித்ததாக அவள் கூறுகிறாள், ஆனால் யோசேப்புக்கு அதனை ஏற்றுக்கொள்ள கடினமாக தான் இருந்திருக்கும். அவர் அவளை நம்பாமல் இருந்திருக்க வாய்ப்புகள் உண்டு. சொல்லப்போனால், யார் தான் நம்புவார்? அந்த நேரத்தில் அவர் நிச்சயிக்கப் பட்டிருந்த திருமணத்தைப் பற்றியே வருத்தம் அடைந்திருப்பார் என்று நான் நினைக்கிறேன்.
அந்த நேரத்தில் நீங்கள் என்ன செய்திருப்பீர்கள்? நாம் ஒப்புக்கொண்டதை விட அதிகமாக கொடுக்கப்படும் போது, நம் ஒப்பந்தத்தில் இருக்கும் வித்தத்தில் காரியங்கள் போகவில்லை என்றால், நம்மில் அநேகர் வாடிக்கையாளர் சேவையில் முறையிடுவோம், முதலாளியிடம் பேச வேண்டும் என்றுக் கேட்போம், நமக்கு வேண்டியதுக் கிடைக்கவில்லை என்றால் கணக்கை ரத்து செய்துவிடுவதாக மிரட்டுவோம். யோசேப்பின் குறிப்பிட்ட சூழ்நிலையில், அநேகர் மரியாளை அவமானப் படுத்தியிருப்பார்கள். சிலர் சட்டம் முழுவதையும் எடுத்துக்கொண்டு, மரியாளை கல் எரிந்து கொன்றிடுப்பார்கள். ஆனால், யோசேப்பு அநேகரைப் போல இல்லை. . .
நற்செய்தி நூல்களில் யோசேப்பு அதிகமாக குறிப்பிடப்படவில்லை என்றாலும், அவர் வாழ்க்கையைப் பற்றிய தகவல்கள் அதிகம் இல்லை என்றாலும், நமக்குத் தெரிந்தது இது: அவர் ஒரு நீதிமான் (மத்தேயு 1:19). "நல்ல மனிதன்" என்று வேதாகமம் அனேகரை அழைப்பதில்லை. இப்படி அவரை சொல்லும்போது, நோவா, தானியேல், யோபு போன்ற மேல் தரத்திலுள்ள மனிதர்களுடன் அவரை வைக்கிறது. ". . .யோசேப்பு நீதிமானாயிருந்து, அவளை அவமானப்படுத்த மனதில்லாமல், இரகசியமாய் அவளைத் தள்ளிவிட யோசனையாயிருந்தான்" என்று மத்தேயு 1:19 சொல்லுகிறது. அவமானம் இல்லை, மரணம் இல்லை; ஒரு அமைதியான, இரக்கமான முடிவை அவன் தேர்ந்தெடுத்தான்.
ஆனால் ஒரு தேவத்தூதன் கனவில் யோசேப்புக்கு தோன்றி, மரியாளை தன் மனைவியாக ஏற்றுக்கொள்ள சொல்லுகிறார், ஏனென்றால் அவளது கருவில் உள்ள குழந்தை உண்மையாகவே ரட்சகர் தான். மறுபடியும் யோசேப்பு இப்படியாக தன்னிடம் தானே சொல்லியிருக்கலாம், நான் இதற்கு ஒப்புக்கொள்ளவில்லையே. ரட்சகரை வளர்ப்பதா? நான் வெறும் தச்சன் தான். இதற்கு நான் சித்தப்படுத்தப் படவில்லையே. நான் ஒப்புக்கொண்டதை விட இது அதிகமாக இருக்கிறது. என்னை விட்டு விடுங்கள். ஆனால் அவர் அப்படி செயவில்லை. மாறாக, அவர் எழுந்தப் போது தேவத்தூதன் கட்டளையிட்ட அனைத்தையும் செய்தார்.
யோசேப்பு ஒரு கடினமான சூழ்நிலையை சந்தித்தார். திருமணத்திற்கு முன் கர்ப்பமாக இருந்த ஒரு பெண்ணை திருமணம் செய்ய சொல்லியிருக்கிறார்கள். அதனால் ஏற்பட்ட விமர்சனம், வதந்திகள், மற்றும் அவமானத்தை சகிக்க வேண்டும். மரியாளுக்கும் யோசேப்புக்கும் நிகழ்ந்ததாக ஒரு பெரிய திருமண கொண்டாட்டத்தை நாம் வாசிக்கவில்லை. தங்கள் இரண்டு குடும்பங்களின் விருப்பத்தையும் மீறி திருமணம் செய்திருப்பது அதிக சாத்தியம். ஆனால் யோசேப்பு தைரியமாக இதனை சகித்துக்கொண்டு, இயேசுவை தன் சொந்தப் பிள்ளையாக வளர்த்து அதன் மூலம் ஆண்டவருக்கு தன் நன்றியுணர்வை காட்டுகிறார். ஒரு அச்சுறுத்தும் சூழ்நிலையில் அவர் கீழ்படிந்திருந்தார்.
நம் வாழ்க்கையில் நான் இதற்கு ஒற்றுக்கொள்ளவில்லையே என்று நாம் சொல்லக்கூடிய சூழ்நிலைகளை சந்திக்க நேரும். நாம் பல்வேறு சோதனைகளுக்குள் விழலாம், சாத்தியமற்ற தரிசனத்தை நிறைவேற்ற அழைக்கப்படலாம், அல்லது நம் வசதியான பகுதியை விட்டு வெளியே செல்ல வேண்டியிருக்கலாம். இது தான் உண்மை: நாம் ஒற்றுக்கொண்டதற்கு அதிகமாக தான் தேவன் அனேக நேரங்களில் நமக்குக் கொடுப்பார். நம்மால் தனியாக கையாள முடியாத சூழ்நிலைகளில் நம்மை பல நேரங்களில் வைப்பார். நாம் நன்றியுள்ளவர்களாக, கீழ்படிதலுள்ளவர்களாக இருந்து, அதனை கடந்து செல்ல பெலன், ஞானம், வழிநடத்துதலுக்கு அவரை முழுமையாக சார்ந்திருக்கவே அவர் அப்படி செய்கிறார்.
யோசேப்பைப் போல, நாம் என்ன விலையாக இருந்தாலும் கீழ்ப்படிதலுக்கும் உண்மையாக இருப்பதற்கும் நம்மை ஒப்புவிப்போம். நாம் எதற்கு ஒப்புக்கொண்டோம் என்பதை நாம் நினைவில் கொள்வோம் —நம் வாழ்க்கையை அவருக்கு அர்பணித்து, தம் குமாரனை பின்பற்றுவதன் மூலம் அவர் கிருபையை பெறவே ஒப்புக்கொண்டோம். அவர் கிருபை நமக்கு போதும்; நம் பெலவீனத்தில் தம் வல்லமை பூரணமாகும் என்ற வாக்குறுதியை நாம் பற்றிக்கொள்வோம். . . குறிப்பாக, நாம் ஒற்றுக்கொண்டதற்கு அதிகமாக நாம் பெறும் போதும், நம்மால் சமாளிக்க முடிவதை விட அதிகமாக பெறும் போதும்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
அடுத்த 12 நாட்களில் நாம் கிறிஸ்துமஸ் கதையின் வழியாக பயணம் செய்யவிருக்கிறோம். இது வரை சொல்லப்பட்ட மிகப்பெரிய கதையாக இது இருப்பதோடு, கிறிஸ்துமஸ் எப்படி உண்மையாகவே எல்லாருக்காகவும் உண்டானது என்பதையும் கண்டறிய போகிறோம்!
More