நோயல்: அனைவருக்கும் கிறிஸ்துமஸ்மாதிரி

Noel: Christmas Is For Everyone

12 ல் 10 நாள்

வீட்டில் இடம் இல்லை . . . ஆனால் அனைவருக்கும் அழைப்பு உண்டு

Danny Saavedra

“அவ்விடத்திலே அவர்கள் இருக்கையில், அவளுக்குப் பிரசவகாலம் நேரிட்டது. அவள் தன் முதற்பேறான குமாரனைப் பெற்று, சத்திரத்திலே அவர்களுக்கு இடமில்லாதிருந்தபடியினால், பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தினாள். அப்பொழுது அந்த நாட்டிலே மேய்ப்பர்கள் வயல்வெளியில் தங்கி, இராத்திரியிலே தங்கள் மந்தையைக் காத்துக்கொண்டிருந்தார்கள். அவ்வேளையில் கர்த்தருடைய தூதன் அவர்களிடத்தில் வந்து நின்றான். . . தேவதூதர்கள் அவர்களை விட்டுப் பரலோகத்துக்குப் போனபின்பு, மேய்ப்பர்கள் ஒருவரையொருவர் நோக்கி: நாம் பெத்லகேம் ஊருக்குப் போய், நடந்ததாகக் கர்த்தரால் நமக்கு அறிவிக்கப்பட்ட இந்தக் காரியத்தைப் பார்ப்போம் வாருங்கள் என்று சொல்லி”—லூக்கா 2:6-9, 15

“யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரைப் பணிந்துகொள்ளவந்தோம் என்றார்கள். . . . அவர்கள் அந்த நட்சத்திரத்தைக் கண்டபோது, மிகுந்த ஆனந்த சந்தோஷமடைந்தார்கள். அவர்கள் அந்த வீட்டுக்குள் பிரவேசித்து, பிள்ளையையும் அதின் தாயாகிய மரியாளையும் கண்டு, சாஷ்டாங்கமாய் விழுந்து அதைப் பணிந்துகொண்டு, தங்கள் பொக்கிஷங்களைத் திறந்து, பொன்னையும் தூபவர்க்கத்தையும் வெள்ளைப்போளத்தையும் அதற்குக் காணிக்கையாக வைத்தார்கள்.”—மத்தேயு 2:2, 10–11

உங்கள் முதல் முறையாக குடும்பமாக விடுமுறை சென்றது உங்களுக்கு நினைவிருக்கிறதா? எனக்கு நினைவிருக்கிறது! ஒரு திருமணத்திற்காக நார்த் கரோலினா சென்றிருந்தோம். என் 17 மாதமான மகனை அப்போது தான் முதல் முறையாக விமானத்தில் கூட்டி சென்றோம். எதிர்பார்க்க கூடிய விதத்தில், பயங்கர நாடகம் தான்! விமானத்தில் எங்கள் மகன் ஒரே அழுகை; ஒரு வயது நிரம்பிய மகனைக் கொண்ட எங்கள் நெருங்கிய நண்பர்களுடன் தங்கியிருந்தோம். அங்கேயும் நாங்கள் எதிர்பார்க்காத விதத்தில் ஒரே அமர்க்களம் தான். ஆனால் அது நன்றாகவும் இருந்தது. அந்த அழகிய நேரத்தையும் நல்ல நினைவுகளையும் நினைத்து பார்த்து நாங்கள் இன்றும் மகிழ்வது உண்டு.

மரியாளுக்கும் யோசேப்புக்கும் அப்படி தான் இருக்கும் என்று நான் கற்பனை செய்கிறேன். . . மிகவும் துணிச்சலான, கடினமான, நீண்ட, கஷ்டமான, எதிர்பாரா நிகழ்வுகள் நிறைந்ததாக இருந்தாலும், தங்கள் வாழ்க்கையிலேயே மிகவும் அற்புதமான நினைவாக இருந்தது. யோசித்துப் பாருங்கள் . . . மரியாள் நிறை மாத கர்ப்பிணியாக இருக்கும் இந்த நேரத்தில், அவர்கள் ஒரு கழுதையில் பொருட்களை ஏற்றிக்கொண்டு தங்கள் மூதாதையரின் ஊரான பெத்லேகமுக்கு கிளம்பிச் செல்கின்றனர். அந்த ஊரில் அவர்கள் வாழ்ந்ததில்லை, சில தூரத்து உறவினர் இருந்தனர், ஆனால் நெருக்கமாக அறிந்த யாரும் அங்கு இருந்திருக்க மாட்டார்கள். தங்கள் உறவினர் யாராவது அவர்கள் தங்குவதற்கு போதிய அளவு இடம் வைத்திருப்பார்கள் என்ற நம்பிக்கையில் தான் இருக்க வேண்டும். 

ஆனால் மரியாளும் யோசேப்பும் பெத்லெகேமுக்கு வந்து சேரும் நேரத்திற்குள் தங்கள் உறவினர் யாரிடமும் இவர்களுக்கு இடமில்லை. தங்கள் அறைகள் எல்லாம் நிறைந்து விட்டன, ஆனால் அவர்கள் சொந்தக்காரர்கள் என்பதாலும், மரியாள் கர்ப்பிணியாக இருப்பதாலும், ஒரு உறவினர் இரவில் மிருகங்கள் வைத்திருக்கும் கீழ் அறையில் தங்கிக்கொள்ள அவர்களை அனுமதிக்கிறார். ஒரு வீட்டின் கீழ் அறையை கற்பனை செய்துப் பாருங்கள். அங்கே உங்கள் நாய், பூனை. . . அல்லது மாடு, கழுதை வைக்கும் இடமாக இருக்கலாம்! 

விசித்திரமாக இல்லை? இன்னும் வித்தியாசமாக ஆகவிருக்கிறது . . . இயேசு ரட்சகர் உலகத்தின் தன் முதல் நாளில் எங்குத் தூங்கினார் என்று தெரியுமா? ஒரு அழகிய தொட்டிலிலோ, நல்ல கட்டிலிலோ இல்லை; அவர் ஒழு குடிலில், மிருகங்கள் உண்ணும் தீவனத் தொட்டியில் தான் கிடத்தப் பட்டிருந்தார். இந்த தீவனத் தொட்டி படங்களில் ஒரு கட்டையால் செய்யப்பட்ட சிறய கட்டிலைப் போல தெரிகிறது, ஆனால் உண்மைலேயே அது இரண்டு செங்கற்கள் மேல் வைக்கப்பட்ட ஒரு பெரிய செவ்வக வடிவத்திலுள்ள தொட்டியாக தான் இருந்தது! 

அந்த இரவில், ஏசுவுக்கு உலகத்தில் இடம் இல்லை, ஆனால், பக்கத்திலுள்ள வயலில் இருந்த மேய்ப்பர்களுக்கு கொடுக்கப்பட்ட அழைப்பு மற்றும் பின்னர் கிழக்கிலிருந்து வந்த ஞானிகள் மூலம், இயேசுவின் பாதத்தில் வந்து வணங்க அனைவரும் அழைக்கப்பட்டிருக்கிறோம் என்று அறிகிறோம். எப்படி? முழு யூத சமுதாயத்திலும் இருந்து அழைக்கப்பட எத்தனையோ பேர் இருக்கும் போது, இயேசுவின் பிறப்பின் செய்தியை கேட்கவும் அவரை வந்து பணிந்துக்கொள்ளவும் ஒரு கூட்ட மேய்ப்பர்களை தேவன் தேர்ந்தெடுத்தார். அது ஒரு வல்லமையான காட்சி, ஏனென்றால் மேய்ப்பர்கள் சமுதாயத்தின் கீழ் தட்டில் இருந்தவர்கள்.

மேய்ப்பர்களின் வேலை அவர்களை யூத சமுதாயத்தின் முக்கிய காரியங்களில், சுத்திகரிப்பு சடங்குகளில், மத பண்டிகைகளிலும் கூடப் பங்கெடுக்க முடியாமல் தடுத்தது. ஆனாலும், ஒரு நாள் தேவாலயத்தில் பலியாகவிருக்கும் ஆடுகளைக் கண்காணித்த இந்த மேய்ப்பர்கள் அழைக்கப்பட்டனர். "தேவ ஆட்டுக்குட்டியை அவர்கள் முதலாவதாக அறிந்துக் கொள்வது எவ்வளவு அம்சமானது" என்று ஜான் மெக்ஆர்தர் அவர்கள் சரியாக சொன்னார்.

அரசனைத் தேடி தைரியமாக நட்சத்திர யாத்திரை சென்ற பாபிலோனிய, பெர்சிய பூசாரிகள் மற்றும் ஜோசியக்காரர்களின் வருகை இன்று வாழும் நமக்கு ஓர் ஆழ்ந்த அர்த்தத்தைக் கொடுக்கும். ஆனால், என்னவென்றால், அவர்கள் யூதரல்லாதவர்கள். தங்கள் தேசங்களை விட்டு வாக்களிக்கப் பட்ட மேசியாவைத் தேடி செல்லும் அளவிற்கு தேவனுடைய வார்த்தையை நம்பினார்கள். அவரை விசுவாசத்துடனும், தங்கள் முழு இதயத்தோடும் தேடினார்கள், அவரை அடையும் வழியைக் கண்டதும் பெருமகிழ்ச்சியுடன் ஆர்ப்பரித்தனர். அவரது தாழ்மையான மகிமையில் அவரை அவர்கள் கண்டதும், தங்கள் விலைமதிக்க முடியாத, அரசருக்கேற்ற பரிசுகளை அவருக்கு படைத்தனர். தேவனின் மகிமையான பரிசாகிய, மேசியாவும் ராஜாவுமாகிய இயேசுவின் பாதத்தில் அனைவருக்கும் அழைப்பு உண்டு என்று இது நமக்கு காட்டுகிறது. வந்து, அவரை ஆராதிக்க, இரட்சிக்கப்பட அனைவருக்கும் அழைப்பு உண்டு!

இந்த கிறிஸ்துமஸ் நாட்களில், இதே மன நிலையை நாமும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ஜெபிக்கிறேன். தங்கள் பின்னணி, நபிக்கைகள், வாழ்க்கை முறைகள் போன்றவற்றை கவனிக்காமல், இயேசு காண்கிற அன்போடு, கரிசனையோடு, கருணையோடு, மக்களை காண வேண்டும் என்று ஜெபிக்கிறேன். ஞானிகளை இயேசுவிடம் வழிக்காட்டிய நட்சத்திரத்தைப் போல, நாமும் நம் ராஜாவை ஆராதிக்க மக்களை ஈர்க்கும் வெளிச்சமாக இருக்கும்படி நான் ஜெபிக்கிறேன்!

நாள் 9நாள் 11

இந்த திட்டத்தைப் பற்றி

Noel: Christmas Is For Everyone

அடுத்த 12 நாட்களில் நாம் கிறிஸ்துமஸ் கதையின் வழியாக பயணம் செய்யவிருக்கிறோம். இது வரை சொல்லப்பட்ட மிகப்பெரிய கதையாக இது இருப்பதோடு, கிறிஸ்துமஸ் எப்படி உண்மையாகவே எல்லாருக்காகவும் உண்டானது என்பதையும் கண்டறிய போகிறோம்!

More

இந்த திட்டத்தை வழங்கியதற்காக Calvary Chapel Ft. Lauderdale க்கு நன்றி தெரிவிக்கிறோம். மேலும் தகவல் அறிய http://CalvaryFTL.org க்கு செல்லவும்