நோயல்: அனைவருக்கும் கிறிஸ்துமஸ்மாதிரி

Noel: Christmas Is For Everyone

12 ல் 12 நாள்

எல்லாருடனும் பகிர நற்செய்தி

Danny Saavedra

மகா கனம்பொருந்திய தேயோப்பிலுவே, நாங்கள் முழுநிச்சயமாய் நம்புகிற சங்கதிகளை, ஆரம்பமுதல் கண்ணாரக்கண்டு வசனத்தைப் போதித்தவர்கள் எங்களுக்கு ஒப்புவித்தபடியே அவைகளைக் குறித்துச் சரித்திரம் எழுத அநேகம்பேர் ஏற்பட்டபடியினால், ஆதிமுதல் எல்லாவற்றையும் திட்டமாய் விசாரித்தறிந்த நானும் உமக்கு உபதேசிக்கப்பட்ட விசேஷங்களின் நிச்சயத்தை நீர் அறியவேண்டுமென்று, அவைகளை ஒழுங்காய் உமக்கு எழுதுவது எனக்கு நலமாய்த் தோன்றிற்று..”—லூக்கா 1:1–4

“தேவதூதர்கள் அவர்களை விட்டுப் பரலோகத்துக்குப் போனபின்பு, மேய்ப்பர்கள் ஒருவரையொருவர் நோக்கி: நாம் பெத்லகேம் ஊருக்குப் போய், நடந்ததாகக் கர்த்தரால் நமக்கு அறிவிக்கப்பட்ட இந்தக் காரியத்தைப் பார்ப்போம் வாருங்கள் என்று சொல்லி, தீவிரமாய் வந்து, மரியாளையும் யோசேப்பையும், முன்னணையிலே கிடத்தியிருக்கிற பிள்ளையையும் கண்டார்கள். கண்டு, அந்தப் பிள்ளையைக்குறித்துத் தங்களுக்குச் சொல்லப்பட்ட சங்கதியைப் பிரசித்தம்பண்ணினார்கள். மேய்ப்பராலே தங்களுக்குச் சொல்லப்பட்டதைக் கேட்ட யாவரும் அவைகளைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள்.”—லூக்கா 2:15–19

2010ல் நடத்தப்பட்ட ஒரு சமூக செயல்முறையின் படி, கெட்ட செய்தியை விட நல்ல செய்தி வேகமாக பரவுகிறது. வாய் வழி வார்த்தை, வைரல் மார்கெட்டிங், மற்றும் சமூகத்தின் தாக்கம் ஆகியவற்றில் உலகறிந்த வல்லுனரான டாக்டர். ஜோனா பெர்கர் அவர்கள் இந்த விரிந்த ஆய்வின் கண்டுப்பிடுப்புகளை இப்படியாக சுருக்கிக் கூறுகிறார், "உலகத்தையும் என்னையும் பற்றி புரிந்துக் கொள்ளும் விதத்தை மாற்றக்கூடிய இந்த கதையை நான் இப்போது தான் படித்திருந்தால், அதன் அர்த்தம் என்னவென்று நான் மற்றவர்களிடம் பேச வேண்டும்."

இது விசித்திரமாகவும் ஆச்சரியமாகவும் இருக்கிறதல்லவா? கெட்ட செய்தி நல்ல செய்தியை விட சீக்கிரமாக பரவும் என்று அநேகர் நினைத்திருப்பார்கள், அனால் அப்படி அல்ல. "வினிகரை விட தேனால் தான் அதிக ஈக்களைப் பிடிக்க முடியும்" என்ற பழைய கூற்றுப் படி தான் போல! சிந்தித்து பாருங்கள். . . நீங்கள் சாப்பிட்ட மிக சிறந்த உணவோ, நீங்கள் பார்த்த அருமையான படமோ, நீங்கள் படித்த மூடி வைக்க முடியாத விறுவிறுப்பான புத்தகமோ, உங்களுக்கு கிடைத்த நல்ல அன்பளிப்போ, நீங்கள் கனவு கண்ட வேலை கிடைத்தாலோ, அல்லது வாழ்க்கையை மாற்றும் அற்புதமான ஒரு அறிவிப்போ, ஆச்சரியமான ஒன்று நிகழும்போது, நாம் முதலாவதாக நாம் செய்ய விரும்புவது மற்றவர்களிடம் பகிர தான்! 

இந்த மனுக்குலம் இது வரை பெற்றதிலேயே மிகப் பெரிய செய்தியின் கொண்டாட்டம் தான் கிறிஸ்துமஸ். நீங்கள் சாப்பிட்ட அருமையான உணவையோ, அல்லது உங்களுக்கு ஏற்பட்ட உற்சாகமான செய்தியையோ போல உங்களையும் ஒரு சிலரையும் மட்டும் பாதிப்பதாக இல்லாமல், உலகத்தின் இரட்சகராகிய இயேசுவின் வருகை அனைவருக்கும் நற்செய்தியாக இருக்கிறது! நாம் சந்திக்கும் ஒவ்வொருவருடனும் துணிச்சலுடனும், வெட்கமின்றியும், உற்சாகமாக பகிரக் கூடிய செய்தி இது. பாவிகளாகிய நாம் தேவனுடன் சரியான உறவில் மீண்டும் சேர்க்கப்பட்டு, அவருடைய குடும்பத்தில் பிள்ளைகளாக வரவேற்கப்பட அவர் வழி செய்தார் என்ற செய்தியை விட வேகமாக பரவ வேண்டிய செய்தி வேறு எதுவும் இல்லை.

இன்றைய பகுதிகளில், இயேசுவைப் பற்றிய நற்செய்தியை பகிர சென்ற மக்களைப் பற்றி இரண்டு சம்பவங்களைப் பார்க்கிறோம். முதலாவதாக, அற்புதமான காரியங்களை கேட்ட, கண்ட லூக்காவைப் பார்க்கிறோம். இந்தக் காரியங்களை அவர் தன்னால் முடிந்த அனைவருடனும் பகிர வேண்டும் என்று அறிந்திருந்தார்.  

லூக்கா என்ற கிரேக்க மனிதனுக்கு வேதாகம புத்தகங்களில் ஒன்றை எழிதிய ஒரே யூதரல்லாதவர் என்ற விசேஷித்த கௌரவம் உண்டு. அபோஸ்தலனாகிய பவுல் கூட "நமக்கு அன்பான மருத்துவர்" என்று அவரை அழைக்கிறார். இன்றைய உலகத்தின் மருத்துவர் என்று கேட்டவுடன், கவர்ச்சியான கௌரவமான சிந்தனைகள் நமக்கு தோன்றலாம், ஆனால் ஆதித் திருச்சபை காலத்தில் மருத்துவர்கள் வேலைக்காரர்களாக இருந்தனர். ஒரு ரோம அதிகாரியாக இருந்திருக்கக் கூடிய தியோபிலு, அவரை ஆதரித்த ஒருவராக இருந்திருக்கக் கூடும், ஏனென்றால், "மகா கனம் பொருந்திய" என்ற தலைப்பு வல்லமையுடைய பதவியில் இருப்பவர்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டது. ஆனாலும், ரோமாபுரியை விட பெரிய ராஜ்யத்தைப் பற்றிய செய்தியை, ராயரை விட பெரிய ராஜாவைப் பற்றி லூக்கா அவருடன் தைரியமாக பகிர்ந்துக் கொண்டார்.

தியோபிலுவும் பின்னர் லூக்கா மற்றும் அபோஸ்தலருடைய நடபடிகளைப் படிப்பவர்கள் எவரும் நம்பிக்கையின் செய்தியை புரிந்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக லூக்கா நேரில் பார்த்தவர்களின் சாட்சியிலிருந்து அவர் பெற்றுக் கொண்ட இயேசுவின் வாழ்க்கை மற்றும் ஊழியத்தைப் பற்றிய செய்தியை பகிர வேண்டியதாக இருந்தது என்று தன் முன்னுரையில் லூக்கா தியோபிலுவுக்கு எழுதுகிறார். மரியாள், பேதுரு, யோவான், மற்றும் கிறிஸ்துவுடன் நடந்த மற்றவர்களுடனும் லூக்கா பேசியிருப்பார் என்று நற்செய்தி நூல்களில் நாம் பார்க்கும் அளவு விவரங்களிலிருந்து நமக்கு விளங்குகிறது.

சில நாட்களுக்கு மின், ரட்சகர் பிறந்திருக்கிறார் என்ற ஆச்சரியமான செய்தியை முதலாவதாக பெற்ற மேய்ப்பர்களைப்பற்றி நாம் வாசித்தோம். ஆனால் இந்த செய்தியை அவர்கள் தங்களுக்குள் வைத்துக் கொள்ளவில்லை. மாறாக, "அந்தப் பிள்ளையைக்குறித்துத் தங்களுக்குச் சொல்லப்பட்ட சங்கதியைப் பிரசித்தம்பண்ணினார்கள். மேய்ப்பராலே தங்களுக்குச் சொல்லப்பட்டதைக் கேட்ட யாவரும் அவைகளைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள்." (லூக்கா 2:17,18).

நாம் இன்று கிறிஸ்துமஸ் கொண்டாடும் போது, நம் வாழ்க்கையில் தேவன் வைத்திருக்கும் மக்களிடம் இயேசுவின் மூலம் நமக்குண்டான ரட்சிப்பின் செய்தியை பகிர அழைக்கப் பட்டிருக்கிறோம் என்பதை நாம் அனைவரும் நினைவுக் கூற வேண்டும் என்று ஜெபிக்கிறேன். மேய்ப்பர்களைப் போலவும் லூக்காவைப் போலவும், இந்த உலகிற்கு சொல்ல வேண்டிய அற்புதமான செய்தி நம்மிடம் உள்ளது, அதை நாம் நம்மிடமே வைத்துக் கொள்ள முடியாது! 

இன்று, எல்லாரும் எல்லாவற்றையும் பகிர்கிறோம். புகைப்படங்கள், நம் உணர்வுகள், துணுக்குகள் போன்றவற்றை பகிர்கிறோம். நம் பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் பக்கங்களில் உள்ளடக்கத்திற்கு குறைச்சலே இல்லை. கிறிஸ்துவின் வல்லமை நம் இதயங்களை மாற்றி நமக்கு சமாதானம் தருவதை நாம் அனுபவித்திருக்கிறோம். . . .ஒரு நல்ல புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிரும் அதே உற்சாகத்துடன், மகிழ்ச்சியுடன் இந்த அற்புத செய்தியை நாம் பகிர வேண்டும்! இயேசு உங்கள் வாழ்க்கையில் செய்வதை படைப்பாற்றல் திறனுடன் பகிர கொஞ்ச நேரம் எடுத்துக்கொள்ளுங்கள்.

நாள் 11

இந்த திட்டத்தைப் பற்றி

Noel: Christmas Is For Everyone

அடுத்த 12 நாட்களில் நாம் கிறிஸ்துமஸ் கதையின் வழியாக பயணம் செய்யவிருக்கிறோம். இது வரை சொல்லப்பட்ட மிகப்பெரிய கதையாக இது இருப்பதோடு, கிறிஸ்துமஸ் எப்படி உண்மையாகவே எல்லாருக்காகவும் உண்டானது என்பதையும் கண்டறிய போகிறோம்!

More

இந்த திட்டத்தை வழங்கியதற்காக Calvary Chapel Ft. Lauderdale க்கு நன்றி தெரிவிக்கிறோம். மேலும் தகவல் அறிய http://CalvaryFTL.org க்கு செல்லவும்