வருகை: கிறிஸ்துமஸ் பயணம்மாதிரி
தேவன் தூரத்தில் இல்லை
இயேசுவின் பிறப்பானது பல நூற்றாண்டுகள் பழமையான தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றும் என்றும் மற்றும் ஏதேன் தோட்டத்தின் முதல் பாவத்திலிருந்து தேவனுக்கும் மனிதனுக்கும் இடையில் இருந்த பிரிவினையையும் முடிவுக்குக் கொண்டுவரும் என்றும் யோசேப்பின் கனவில் தேவ தூதன் வெளிப்படுத்தினார். இயேசு "இம்மானுவேல்" என்று யோசேப்பு கற்றுக்கொண்டார். இந்த உண்மையை மறப்பது எவ்வளவு எளிது!
இயேசு பிறப்பதற்கு வெகு காலத்திற்கு முன்பே, யாத்திராகமத்தில், ஒரு மலை உச்சியில் அல்லது எரியும் புதர் வழியாக தேவன் பேசுவதற்கு மோசே காத்திருக்க வேண்டியதாயிருந்தது என்பதை நாம் வாசிக்கிறோம். அந்த நேரத்தில், தேவனுடன் நெருங்கிய உறவை மனிதகுலத்திற்கு தொடர்ந்து அணுக முடியவில்லை. சில நேரங்களில், தேவனுடன் தொடர்புகொள்வதற்கான இந்த பழைய மனநிலையை நழுவச் செய்வது எளிது. அவரிடமிருந்து ஒரு தெளிவான வார்த்தையை விரும்பும் நாம் வெளிப்படையான, உறுதியான அடையாளம் அல்லது எரியும் முட்புதரையோ எத்தனை முறை கேட்கிறோம்? கிறிஸ்தவர்களாக இருந்தாலும், நாம் காத்திருக்கிறோம், அவரின் பதிலுக்கு காத்திருக்கும் சமயத்தில் தேவன் வெகு தொலைவில் இருப்பதாகவும் நம்ப ஆரம்பிக்கிறோம்.
நமக்கும் தேவனுக்கும் இடையிலான இடைவெளியை இயேசு நீக்கி விட்டார் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். எரியும் முட்புதரையோ அல்லது அவருடன் ஒரு மலை உச்சி உரையாடலுக்கான நமது விருப்பத்திற்கு இயேசுவே தேவனுடைய பதில். நம்முடன் பேச விரும்பாத தொலைதூர தேவனை நாம் வணங்குவதில்லை. இயேசு அவருடனான நமது உறவை மீட்டெடுத்தார், தைரியத்துடன் தினமும் அவருடைய சிம்மாசனத்தை அணுகுவதற்கான வழியையும் ஏற்படுத்தியுள்ளார்.
இந்த கிறிஸ்துமஸ் பருவத்தில், தேவன் உங்களுடன் இருக்கிறார் என்பதை அறிந்து ஆறுதலடையுங்கள். அவர் உங்கள் ஜெபங்களைக் கேட்கிறார், அவர் உங்களுக்காக இருக்கிறார். அவருடனான நமது உடைந்த உறவை அவரால் சரிசெய்ய முடிந்தால், நம் வாழ்க்கையிலும் நம் சார்பிலும் அவரால் என்னென்ன செய்ய முடியும் என்று சிந்தியுங்கள்!
ஜெபம்:அப்பா பிதாவே, இயேசுவை எங்களுக்கு தந்தமைக்கு நன்றி, அவர் மீண்டும் உம்மோடு நெருக்கமாக உறவாட எனக்கு ஒரு வழி செய்தார். என்னுடய உறவை விரும்பியதற்கு நன்றி, உமது ஒரே மகனை எனக்காக எனக்கான இடத்தில் சிலுவையில் அறையப்பட அனுப்பினீர்கள். பிதாவே, இயேசுவின் மூலமாக நான் உம்மை மீண்டும் அணுகுவதை அறிந்து, ஜெபத்திலும் வழிபாட்டிலும் உம்மைத் தேட எனக்கு தைரியம் கொடுங்கள். நீர் எப்போதும் என்னுடன் இருப்பீர் என்றும், நான் ஒருபோதும் தனியாக இல்லை என்றும் எனக்கு நம்பிக்கை அளித்ததற்கு நன்றி.
இன்றைய வசனப்படத்தினை பதிவிறக்கம் செய்யஇங்கே.
இந்த திட்டத்தைப் பற்றி
உண்மையிலேயே கிறிஸ்துமஸ் கதையே இதுவரை சொல்லப்பட்டத்தில் மிக சிறந்த கதை: தேவனின் உண்மை, வல்லமை, இரட்சிப்பு, மாறாத அன்பு பற்றியது. உலகத்தை பாவத்திலிருந்து காப்பாற்றுவதற்கான தேவனின் திட்டத்தையும் அவருடைய குமாரின் பிறப்பில் நிறைவேற்றப்பட்ட வாக்குத்தத்தம் கண்டறிய அடுத்த 25 நாட்களில் ஒரு பயணத்தை மேற்கொள்வோம்.
More