வருகை: கிறிஸ்துமஸ் பயணம்மாதிரி
தெய்வீக நோக்கத்தின் சமாதானம்
பயத்தால் உங்களை நிறுத்திவிட முடியும். உங்களை ஓடி ஒழியச் செய்ய முடியும். தேவனின் திசையிலுள்ளப் பாதுகாப்பைப் பார்ப்பதிலிருந்து நம்மைத் திசைத்திருப்புவதை சாத்தான் விரும்புகிறான். கிறிஸ்துமஸ் நிறைவேறுவதைக் கூட பயம் பல முறை நிறுத்த முயற்சித்தது, தேவன் தன் கதையின் முக்கிய பாத்திரங்களுக்கு “பயப்படாதே” என்று மீண்டும் மீண்டும் நினைவுப்படுத்துவதில் கவனமாக இருந்தார்.
மத்தேயு 1:18-21 கிறிஸ்துமஸ் கதையில் யோசேப்பின் பக்கத்தை நமக்கு கூறுகிறது. மரியாளுக்கும் யோசேப்புக்கும் திருமணம் ஆகும் முன்னே மரியாள் கருவுற்றாள். யோசேப்பு நீதியுள்ள மனிதனாய் இருத்ததால், அவளை அவமானப்படுத்த விரும்பாமல், ரகசியமாக அவளைத் தள்ளிவிட நினைத்தார். ஆனால், தேவனிடத்திலிருந்து வந்த தூதன் அவருக்கு ஒரு கனவில் தோன்றி, தேவனின் மகனை உலகத்தில் வளர்க்க அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்று அவருக்கு உறுதிப்படுத்தினார்.
மரியாள் கருவுற்றிருப்பது பற்றிய செய்தியை கேட்டதும், பின்விளைவுகளுக்குப் பயந்து, யோசேப்பு முதலில் தன் பெயரையும் மரியாளின் பெயரையும் காப்பாற்றிக்கொள்ளும் முயற்சியுடன் பதிலளித்தார். மரியாள் கற்புள்ளவள் என்று அறிந்துக்கொள்ள அவருக்கு வழியே இல்லை, எனவே, தங்கள் செய்துக்கொண்ட நிச்சயத்தை நிறுத்தவிருந்தார். யோசேப்புக்கு வேதனையான, குழப்பமான நேரத்தின் மத்தியில், தேவன் அவருக்கு ஒரு கனவில் வந்து, அவரது பயங்களுக்கு சவாலாக தெய்வீக நோக்கத்தின் சமாதானத்தைக் கொடுத்து, உலகம் அறிந்த மிகப்பெரிய மனிதனின் உலகப்பிரகாரமான தந்தை ஆவதற்கான பாதையில் நடத்துகிறார்.
நமக்கு பயமான நேரங்களில், தேவன் நம்மிடம் உண்மையைப் பேசி, நம்மைப் பிடித்து வைத்திருக்கும் பொய்யின் வல்லமையை உடைக்க விரும்புகிறார். அவரது சமாதானத்தை நாம் தேடும் போது, நம் பயங்களை அவரது அன்பால் மேற்கொள்வார். என்னென்ன பொய்கள் உங்களை இன்று வியாகுலப்படுத்துகின்றனவோ, அவற்றிடம் தேவன் வந்து உண்மையை பேச அவரிடம் கேளுங்கள். அவர் உங்களுக்கு பதில் கொடுக்கவும், அவர் உங்களுக்காக வைத்திருக்கிற அதிசயமான நோக்கத்திற்குள் முன் செல்ல உங்களை வலுவூட்டவும் அவர் உண்மை உள்ளவராக இருக்கிறார்.
ஜெபம்: பிதாவே, எங்களுக்கு பயத்தின் ஆவியை கொடாமல் வல்லமை, அன்பு, மற்றும் தெளிந்த புத்தியும் உள்ள ஆவியை எங்களுக்கு கொடுத்திருக்கிறீர் என்று உம் வார்த்தை சொல்லுகிறது. எதிரிப் பிடித்து வைக்க முயற்சிக்கையில், நான் முன் செல்ல தேவையான அனைத்தையும் எனக்குக் கொடுப்பதற்காக நன்றி. இயேசு என்ற நாமத்திற்கு பயம் அடிப்பணிய வேண்டும் என்பதால் உம்மைப் போற்றுகிறேன். இந்த கிறிஸ்துமஸ் காலத்திலும் எப்போதும், என் அச்ச சிந்தனைகளை சிறைப்பிடித்து, உடனடியாக உம்மிடம் கொண்டு வர உதவும். அதன் மூலம், உம் சமாதானம் என் வாழ்க்கையில் ஆளுகை செய்வதாக.
இன்றையப் படத்தை பதிவிறக்கம் செய்யுங்கள்here.
இந்த திட்டத்தைப் பற்றி
உண்மையிலேயே கிறிஸ்துமஸ் கதையே இதுவரை சொல்லப்பட்டத்தில் மிக சிறந்த கதை: தேவனின் உண்மை, வல்லமை, இரட்சிப்பு, மாறாத அன்பு பற்றியது. உலகத்தை பாவத்திலிருந்து காப்பாற்றுவதற்கான தேவனின் திட்டத்தையும் அவருடைய குமாரின் பிறப்பில் நிறைவேற்றப்பட்ட வாக்குத்தத்தம் கண்டறிய அடுத்த 25 நாட்களில் ஒரு பயணத்தை மேற்கொள்வோம்.
More