கிரெக் லாரியின் கிறிஸ்துமஸ் ஊக்குவிப்புமாதிரி

Christmas Encouragement By Greg Laurie

25 ல் 11 நாள்

இயேசு ஏன் வந்தார்?

இது ஏறக்குறைய அனைவருக்கும் ஆண்டின் மிக மும்முரமான நேரம். கிறிஸ்தவர்களாகிய நமக்கு, இது இயேசுவின் பிறப்பை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் காலமாகும். இறை மைந்தன் தன்னைத் தாழ்த்தி மாட்டுத் தொழுவத்தில் பிறந்த உண்மையை அறிந்து வியப்படைகிறோம். ஆனால் அவர் ஏன் இவ்வுலகிற்கு வந்தார்?

முதலாவதாக, ஆவிக்குரிய வாழ்க்கையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நற்செய்தியை அறிவிக்க இயேசு கிறிஸ்து வந்தார். நமக்கும் நற்செய்தியைப் பிரசங்கித்தார்.

உள்ளம் உடைந்து இதயம் மனம் கசந்தவர்களைக் குணப்படுத்த வந்தார். மருத்துவ விஞ்ஞானம் வலியைக் குறைப்பதற்கும், அதை உணராமல் இருப்பதற்கும் கூட வழிகளைக் கண்டறிந்துள்ளது. ஆனால் உடைந்த இதயத்திற்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப் படவில்லை.

பாவ சேற்றில் வீழ்ந்து கிடந்த மக்களை விடுவிக்க இயேசு வந்தார். நம்முடைய ஆவிக்குரிய தேவைகள் சந்திக்கப்பட, நமது ஆவிக்குரிய கண்கள் திறக்கப்பட இயேசு வந்தார்.

வாழ்வின் துயரங்களால் நசுக்கப்பட்டவர்களை விடுவித்து, அவர்களை உயர்த்த வந்தார். நமக்கு நிறைவான வாழ்வைக் கொடுக்க வந்தார். நமது பௌதிக புலன் உணர்வு நிலையைக் கடந்து, ஆவிக்குரிய உன்னத நிலைக்கு உயர்த்தி, வாழ்வின் மறைவான இரகசியங்களை வெளிப்படுத்திக் காண்பிக்க வந்தார்.

அவர் நமக்காக தமது உயிரையும் கொடுக்க வந்தார். “மனுஷகுமாரன் ஊழியம் பெறுவதற்காக வரவில்லை, ஊழியம் செய்யவும், அநேகரை மீட்கும் பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார்” (மாற்கு 10:45) என்று இயேசு கூறினார். அவர் பலியாக மரிப்பதற்காக வந்தார். ஒரு மேய்ப்பன் காணாமற்போன ஆட்டைத் தேடுவது போல, காணாமல் போன நம்மைத் தேடிக் காப்பாற்றுவதற்காகவே இயேசு கிறிஸ்து இந்த பூமிக்கு வந்தார்.

எனவே வண்ண காகித அலங்காரங்கள், நட்சத்திரம், பிரகாசமான வண்ண விளக்குகள், இவற்றைக் கடந்து உண்மையான கிறிஸ்மஸ் பொருளை உணர்வோம். கிறிஸ்மஸ் என்பது கர்த்தர் தனது குமாரனைச் சிலுவையில் மரிப்பதற்காக அனுப்புவதைப் பற்றியது. அவர் இறப்பதற்காகப் பிறந்தார். நமக்கு நித்திய வாழ்வைக் கொடுப்பதற்காகப் பிறந்தார். அவர் நமக்கு அளிக்கும் வாழ்க்கை, மதிப்புமிக்க வாழ்க்கை.

பதிப்புரிமை © 2011 அறுவடை ஊழியங்கள் < em> அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. புதிய கிங் ஜேம்ஸ் பதிப்பில் இருந்து வேத வசனங்கள் எடுத்துப் பயன்படுத்தப்பட்டுள்ளது. காப்புரிமை © 1982 தாமஸ் நெல்சன், இன்க். அனுமதி பெற்று பயன்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

வேதவசனங்கள்

நாள் 10நாள் 12

இந்த திட்டத்தைப் பற்றி

Christmas Encouragement By Greg Laurie

இந்த விடுமுறைக் காலத்தின் வேலைப்பளுவும், அழுத்தமும், நமது இரட்சகராகிய இயேசு கிறிஸதுவின் பிறப்பின் மகிழ்ச்சி நிறைந்த, டிசம்பர் மாதத்தின் உண்மையான கொண்டாட்டத்தைப் பறித்துவிட அனுமதிக்காதீர்கள்! பாஸ்டர் கிரெக் லாரியின் சிறப்புக் கிறிஸ்மஸ் தியான வழிகாட்டுதலின் வழியாகத் தினசரி ஊக்கத்தைப் பெறுங்கள். ஓர் ஆண்டில் மிகவும் கொண்டாடப்படும் இந்த நேரத்தின் உண்மையான அர்த்தத்தை, அவர் மன ஆழத்திலிருந்து வெளிப்படுத்துகிறார். கிரெக் லாரி அவர்களது அறுவடை ஊழியங்கள்

More

இந்த திட்டத்தை வழங்கியதற்காக க்ரெக் லாரியுடன் கூடிய அறுவடை அமைச்சகங்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: www.harvest.org

சம்பந்தப்பட்ட திட்டங்கள்