கிரெக் லாரியின் கிறிஸ்துமஸ் ஊக்குவிப்புமாதிரி
தூய்மையற்ற இடத்தில் ஒரு தூய வாழ்க்கை
தேவதூதன் அவளைப் பார்த்து, “மரியாளே, பயப்படாதே; நீ தேவனிடத்தில் கிருபை பெற்றாய்" (லூக்கா 1:30).
இன்று இயேசு பிறப்பார் என்றால், அவர் எந்த ஊரிலிருந்து வருவார் என்று நினைக்கிறீர்கள்? ஒருவேளை எருசலேம், ரோம், லண்டன், பாரிஸ் அல்லது நியூயார்க் நினைவுக்கு வரும். ஆண்டிபட்டி அல்லது வாடிப்பட்டியிலிருந்து இயேசு வருவார் என்று நாம் எதிர்பார்க்க மாட்டோம். அல்லது இது எப்படி இருக்கிறது? சாத்தான் குளத்திலிருந்து இயேசு. இது எதிர்மறையான அர்த்தத்தைத் தருகிறது இல்லையா?
இயேசுவின் காலத்தில் வாழ்ந்த மக்கள் அவரை "நாசரேத்தின் இயேசு" என்று அழைத்த போது, அது அப்படித்தான் புரிந்து கொள்ளப் பட்டது. அதற்கு எதிர்மறையான அர்த்தம் இருந்தது. அந்த சிறுமையாக எண்ணப்பட்ட இடத்தில் தான் மரியாள் என்ற தெய்வீக இளம் பெண் வாழ்ந்தார். அந்த புனிதமற்ற இடத்திலும், தூய்மையான வாழ்க்கை வாழ முடியும் என்பதை அவர் நிரூபித்துக் காண்பித்தார்.
பேதுரு தனது இரண்டாவது நிருபத்தில், இரண்டு விசுவாசிகள் மீது உலகம் ஏற்படுத்தும் தாக்கத்தை விவரித்தார். இருவரும் தீய கலாச்சாரங்களில் வாழ்ந்தனர், ஆனால் ஒருவர் செழித்து வளர்ந்தார், மற்றவரால் இயலவில்லை.
முதலில் நோவா. அவர் வாழ்ந்த காலத்தில், உலகம் மிகவும் கறைபட்டுச் சிதைந்து காணப்பட்டது. கர்த்தர் மனிதனைப் படைத்ததற்காக மிகவும் மனம் வருந்தினார். அவர் பூமியை நியாயந்தீர்க்க தயாராக இருந்தார். ஆனாலும், அந்த இருண்ட காலத்தின் மத்தியிலும் நோவாவிற்ககு "கர்த்தருடைய கண்களில் கிருபை கிடைத்தது (ஆதியாகமம் 6:8), ஏனெனில், அவர் கர்த்தருக்கு கீழ்ப்படிந்து தேவ வழியில் நடந்தார். அவர் நீதிமானும் உத்தமனுமாயிருந்தார். அவர் தெய்வ பயமற்ற இடத்தில் வாழ்ந்தார், ஆனால் ஒருபோதும் உலக அசுத்தங்களுடன் சமரசம் செய்து கொள்ளவில்லை.
லோத்து சோதோம் கொமோராவில் வாழ்ந்தார். ஆனால், நோவாவிற்கு நேர்மாறாக செயல்பட்டார். லோத்து ஒருவித சோர்வுற்றவராகக் காணப்பட்டார். அங்கு வசித்த மக்களின் தீய செயல்களை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை, ஆனால் அதை எதிர்த்து வாழ்வதற்கு, அவர் எந்த முயற்சியும் செய்யவில்லை. அவர் அவர்களிடையே வாழ்ந்து, அவர்களின் தேவனுக்கு விரோதமான பொல்லாத பாவச் செயல்களைக் குறித்துக்
கேட்டதாலும், அவற்றைப் பார்த்ததாலும், ஒவ்வொரு நாளும் தனது ஆத்துமாவில் வாதிக்கப்பட்டார் என்று வேதம் கூறுகிறது. ஆனாலும், அவர் பாவத்தோடு சமரசம் செய்து கொண்டதொரு வாழ்க்கை வாழ்ந்தார். கர்த்தருடைய தூதன் சோதோமிலிருந்து அவரை விடுவிக்க வந்தபோது, அவர் மனமில்லாமல், தயக்கத்தோடு அந்த இடத்திலிருந்து வெளியேறினார்.
இந்த இருவரில் யாரைப் போல நீங்கள் வாழ விரும்புகிறீர்கள்: நோவா அல்லது லோத்து? அல்லது வேறு விதமாகச் சொல்வதானால், நீங்கள் கலாச்சாரத்தை எதிர்த்து வாழ்கிறீர்களா? அல்லது கலாச்சாரம் உங்களை மாற்றுகிறதா?
சுருக்கமான கேள்வி: நீங்கள் பாவம் நிறைந்த இடத்திலும், புனிதமான தூய வாழ்க்கை வாழ்கிறீர்களா?
பதிப்புரிமை © 2011அறுவடை ஊழியங்கள் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. வேத வசனங்கள், புதிய கிங் ஜேம்ஸ் பதிப்பிலிருந்து எடுத்துப் பயன்படுத்தப்பட்டுள்ளது. காப்புரிமை © 1982 தாமஸ் நெல்சன், இன்க். அனுமதி பெற்றுப் பயன்படுத்தப்பட்டது. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
இந்த விடுமுறைக் காலத்தின் வேலைப்பளுவும், அழுத்தமும், நமது இரட்சகராகிய இயேசு கிறிஸதுவின் பிறப்பின் மகிழ்ச்சி நிறைந்த, டிசம்பர் மாதத்தின் உண்மையான கொண்டாட்டத்தைப் பறித்துவிட அனுமதிக்காதீர்கள்! பாஸ்டர் கிரெக் லாரியின் சிறப்புக் கிறிஸ்மஸ் தியான வழிகாட்டுதலின் வழியாகத் தினசரி ஊக்கத்தைப் பெறுங்கள். ஓர் ஆண்டில் மிகவும் கொண்டாடப்படும் இந்த நேரத்தின் உண்மையான அர்த்தத்தை, அவர் மன ஆழத்திலிருந்து வெளிப்படுத்துகிறார். கிரெக் லாரி அவர்களது அறுவடை ஊழியங்கள்
More