மனதின் போர்களம்மாதிரி
ஆவிக்குரிய ஜெபம்
நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையில், நம்முடைய மனதும் ஒரு பங்கை வகிக்கிறது என்று ஏற்கனவே பார்த்தோம். அநேகருக்கு இது ஒரு புரியாத புதிராக இருக்கிறது. பவுல் சொல்வதை என்னால் நன்றாக விளங்கிக்கொள்ள முடிகிறது. ஏனென்றால் என்னுடைய ஆவிக்குரிய வளர்ச்சிக்கு ஏதுவாக நான் இதைச் செயல்படுத்தியிருக்கிறேன்.
உதாரணத்திற்கு சொல்லவேண்டுமானால், ஒரு நாள் காலை வழக்கம் போல் ஜெபிப்பதற்காக நேரத்தை ஒதுக்கியிருந்தேன். ஜெபிக்க ஆரம்பித்தேன். ஏனோ, வெறும் வார்த்தைகளை நான் பேசுவது போல் என் ஜெபம் இருந்தது. எனக்குள் எதுவும் சத்துவத்தை அளிக்கவில்லை. என்னுடைய ஆவியிலிருந்து எனக்கு எந்த உதவியும் இல்லை. நான் இப்படி தடுமாறிக்கொண்டிருக்கும்போது; நான்தான் ஆண்டவருக்கென்று என்னை விட்டுக்கொடுத்திருக்கிறேனே, என்னை அவர் பயன்படுத்தி, அநேகருடைய வாழ்க்கையை மாற்றப்போகிறார் என்பதை நினைவில் கொண்டேன்.
நான் தொடர்ந்து ஜெபித்தேன். ஆனால், எதுவும் மாறியதாக தெரியவில்லை. ஏற்கனவே இப்படி நடந்திருப்பதால், நான் சோர்ந்து போகவில்லை. நான் எதைக் குறித்தெல்லாம் கரிசனையுள்ளவளாக இருக்கிறேன் என்பதை, ஆண்டவருக்கு வரிசையாக தெரியப்படுத்தினேன். ஒரு சில நிமிடங்களில், ஒரு வல்லமை என்னை ஆட்கொண்டது. பரிசுத்த ஆவியானவர் விரும்பும் எல்லையை, ஜெபத்தில் நான் தொட்டு விட்டதை உணர்ந்தேன். இது என்னுடைய கரிசனையாய் இருந்ததைவிட - கர்த்தரின் கரிசனையாக மாறியது.
என் மனதிலேயே யோசித்து, நானாகவே ஜெபிக்கவில்லை. என்னென்ன ஜெபக்குறிப்புகள், எதற்கெல்லாம் ஜெபம் தேவை என்று நானாகவே யோசித்து ஜெபிக்கவில்லை. நான் ஆங்கிலத்தில் ஜெபித்தேன். அதுவே என்னுடைய இயல்பான மொழியாக இருப்பதால், நான் ஜெபிப்பதும் எனக்கு புரிந்தது. எப்பொழுது கர்த்தருடைய வல்லமை என் மேல் இறங்கியதோ, நானாகவே ஞாபகத்தில் வைத்துக்கொண்டு ஜெபிக்கும் அந்த பாணி மறைந்து, ஆவியில் நிறைந்து என்னுடைய ஜெபத்தின் பாஷையான அந்நிய பாஷையில் ஆரம்பித்தேன்.
பவுல் நமக்கு ஒரு முன்மாதிரியாகவும், நமக்கு போதிக்கிறவராகவும் இருக்கிறார். நான் ஆவியோடும் ஜெபிப்பேன், கருத்தோடும், அர்த்தத்தை புரிந்தவனாகவும் ஜெபிப்பேன் என்று சொல்லுகிறார். இது ஒருவேளை அநேகருக்கு புரியாமல் இருக்கலாம். ஆரம்பத்தில் நம்மை குழப்பவும் செய்யலாம். ஆகிலும் இது தேவனுடைய ஒரு வரமாக இருக்கிறபடியால், உங்களுக்கு புரியாவிட்டாலும் இதை வேண்டாமென்று ஒதுக்கிவிடாதீர்கள். திறந்த உள்ளத்தோடு, நான் ஆவியில் நிறைந்து, அந்நிய பாஷையில் ஜெபம் செய்ய,எனக்கு உதவி செய்யும் என்று ஆண்டவரை கேட்போம்.
தேவன் நம்மை ஜெபிக்க அழைக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அது நமக்கு மகிழ்ச்சி அளிக்கிறதும், அதே நேரத்தில் அது நம்முடைய பொறுப்பாகவும் இருக்கிறது. சில நேரங்களில் நாம் தேவனோடு பேசும்போது, என்ன பேசுகிறோம், சொல்லுகிறோம் என்று நமக்கே தெரிவதில்லை. நாம் ஜெபிக்கிறோம், ஆனால், நம்முடைய வார்த்தைகள் நமக்கு போதவில்லை. நாம் உபயோகிக்கும் வார்த்தைகளை விட நம்முடைய பாரம் அதிகமாக இருப்பது போல் இருக்கும். நமக்குள் ஏதோ ஒன்று பலமாக கிரியை செய்கிறது - அது அப்படியே பொங்கி எழுவது போல் இருந்தாலும்- பேச நமக்கு வார்த்தைகள் கிடைப்பதில்லை. ஆங்கிலத்தில் ஜெபிக்கலாம் என்றால், அது உபயோகமற்றதைப்போல உணருகிறோம். நாம் புரிந்த பாஷையில் ஆண்டவரிடம் எதைச் சொன்னாலும், நாம் எல்லாத் தடைகளையும் தகர்த்தெறிந்து வெற்றி பெற்ற உணர்வு, நமக்கு இருப்பதில்லை.
நான் ஆவியில் நிறைந்து, அந்நிய பாஷையில் ஜெபம் செய்யும்போது, எனக்கு அறியாத வார்த்தைகளை நான் பேசுகிறேன். என் மனித மூளையால் கிரகிக்க முடியாத வார்த்தைகள் - ஆகிலும், என்னுடைய ஆவி, அதை “புரிந்துகொள்ளுகிறது” அல்லது, என்னுடைய ஜெபம் சரிதான், சரியான பதில் வரும் என்று “சாட்சி கொடுக்கிறது”. அதன்பிறகுதான் ஒரு விடுதலை வருகிறது.
இதற்கு நான் கொடுக்க விரும்பும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு, அப்போஸ்தலர் 2ல், பெந்தகோஸ்தே நாளில் நடந்த சம்பவம். மேல் வீட்டறையிலே சீஷர்கள் கூடி ஜெபித்தார்கள். அந்த சமயம், எருசலேமிலே யூதர்கள் உலகமெங்கும் இருந்து, அங்கு வந்திருந்தார்கள். மேல் வீட்டறையிலே கூடியிருந்த 120 பேரின் மேல், பரிசுத்த ஆவியானவர் பலமாயிறங்கியதும், அவர்கள் அந்நிய பாஷைகளில் பேசினார்கள். அவர்கள் பேசிய மொழி, அவர்களுக்கே அறியாத மொழியாக இருந்தது. அங்கு வந்திருந்த யூதர்கள் இதைக்கேட்டார்கள். “அந்தச் சத்தம் உண்டானபோது, திரளான ஜனங்கள் கூடிவந்து, தங்கள் தங்கள் பாஷையிலே அவர்கள் பேசுகிறதை அவரவர்கள் கேட்டபடியினாலே கலக்கமடைந்தார்கள்” (அப்போஸ்தலர் 2:6).
தான் அந்நியபாஷையை பேசுகிறதற்காக, அப்போஸ்தலனாகிய பவுல் தேவனுக்கு “நன்றி” கூறுவதோடு மட்டுமல்லாமல், ஒருவரும் மற்றவரை பேசாதபடிக்கு “தடை செய்யக்கூடாது” என்றும் கூறுகிறார். இதைக்குறித்து சபையிலே அநேக பிரிவினைகள் காணப்பட்டாலும், நீங்கள் நேரடியாக வேதத்தை எடுத்து, கர்த்தருடைய வார்த்தை இதைக்குறித்து என்ன சொல்லுகிறது என்று பார்க்க உங்களுக்கு ஆலோசனைக் கூறுகிறேன். ஆவியானவருடைய விலையேறப்பெற்ற ஈவாகிய இந்த வரத்தை, பெற்றுக்கொள்ளாதபடிக்கு, உங்கள் மனதை திசை திருப்பாதீர்கள். நம்முடைய வாழ்க்கையை வெற்றியோடு வாழ, நமக்கு இயற்கைக்கு அப்பாற்பட்ட ரீதியில் எல்லா உதவியும் தேவை.
ஆதி சபையோடு இந்த ஆவியின் வரமாகிய அந்நியபாஷை நின்று போய்விட்டது என்று ஒரு சிலர் தவறாக போதிக்கிறார்கள். ஆனால், உலகமெங்கும் கோடிக்கணக்கான மக்கள் இன்றும் அந்நிய பாஷைகளைப் பேசுகிறார்கள். அந்நிய பாஷைகளை பேசுவதினால், பேசாதவர்கள் இவர்களை விட ஆவிக்குரிய வாழ்வில் கீழானவர்கள் என்று நான் சொல்லவில்லை. உங்களுடைய ஜெபம் வல்லமையுள்ளதாக இருக்க, கர்த்தருடைய இந்த உதவியை நாடுங்கள் என்று மறுபடியும் உங்களை உற்சாகப்படுத்த விரும்புகிறேன்.
நாம் ஆவியில் நிறைந்து ஜெபிக்கும்போது, நம்முடைய மனமும், ஆவியும் இணைந்து செயல்படுகின்றன. நம்முடைய மனம், நம்முடைய ஆவிக்கு விட்டுக்கொடுக்கிறது. அதன் மூலம்; ஆவியாகிய தேவன், அவருடைய சித்தம்போல், நம்மை ஒரு பூரணமான ஜெபத்தை ஜெபிக்க வழி நடத்துகிறார்.
பிதாவாகிய தேவனே, எனக்கென்று நீர் வைத்திருக்கும் எல்லா இயற்கைக்கப்பாற்பட்ட வரங்களையும் நான் வாஞ்சிக்கிறேன். நான் வெற்றியோடு வாழ உம்மிடத் திலிருந்து எல்லா உதவியையும் பெற விரும்புகிறேன். பரிசுத்த ஆவியானவரால் வழிநடத்தப்பட்டு, வல்லமையாய் ஜெபிக்க நான் விரும்புகிறேன். நான் என்னுடைய சொந்த மொழியில் ஜெபிக்கும் ஜெபத்தை நீர் கேட்டு பதிலளிக்கிறீர் என்று அறிவேன். ஆனாலும், உம்முடைய பரிசுத்த ஆவியின் அந்நிய பாஷையாகிய வரத்தை பெற்று, உம்மிடம் இரகசியங்களை பேச, நான் திறந்த உள்ளத்தோடு இருக்கிறேன். தேவனே, நீர் என்னை சரியான பாதையில் நடத்துவீர் என்று உம்மை விசுவாசிக்கிறேன். ஆமென்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
ஜாய்ஸ் மரின் நகடமுகற மவதபாட மபாதகனயுடன் உங்கள் நாகைத் ததாடங்குங்கள் .இப்படிப்பட்ட தினசரி பக்திக்கான மவத பாடங்கள் உங்களுக்கு நம்பிக்கககத் தரும், உங்கள் னகதப் புதுப்பிக்க உதவுகிறது ற்றும் ஒவ்தவாரு நாளும் நீங்கள் மநாக்கத்துடனும் ஆர்வத்துடனும் வாழ முடியும் ன்பகதக் கண்டறி உதவுகிறது!
More
இந்த திட்டத்தை வழங்குவதற்காக ஜாய்ஸ் மேயர் அமைச்சுக்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, செல்க: https://jmmindia.org/