மனதின் போர்களம்மாதிரி
அமர்ந்த, மெல்லிய குரல்
மூன்று கதாபாத்திரங்களைக் கொண்ட ஒரு நாடகத்தைக் குறித்து யாரோ என்னிடம் சொன்னார்கள். அதில் ஒரு தகப்பன், ஒரு தாய், வியட்நாமிலிருந்து திரும்பிய ஒரு மகன்; ஒரு மேஜையை சுற்றி அமர்ந்துள்ளனர். அது ஒரு முப்பது நிமிட நாடகம், ஒவ்வொருவருக்கும் பேசுவதற்கு தருணம் கொடுக்கப்படுகின்றது. ஒரே ஒரு பிரச்சனை என்னவென்றால்; ஒருவரும் மற்றவர் சொல்வதை கவனிப்பதில்லை.
தந்தை, வேலையை இழக்கும் தருவாயில் இருக்கிறார். தாயாருக்கு, ஆலயத்தில் எல்லா பொறுப்புகளையும் கவனித்து, தற்போது அவர்களுக்கு வயதாகி விட்டதால், அந்த பொறுப்புகளை இளம் பெண்கள் அவர்களுக்கு பதிலாக எடுத்துக்கொள்ளும் நிலை. மகனை குறித்து சொல்லவேண்டுமானால், அவன் ஒரு போர் வீரன். போருக்கு சென்று யுத்தம், சண்டை, மரணம் என்று பார்த்து அதிர்ச்சி யுற்றவனாக தன்னுடைய விசுவாசத்தில் தடுமாறுகிறான்.
நாடகத்தின் இறுதிக் காட்சியில், மகன் எழுந்து கதவுக்கு நேராக சென்றுகொண்டே, “நான் சொன்னதில் ஒரு வார்த்தை கூட நீங்கள் கேட்வில்லை” என்றவாறு அறையை விட்டு வெளியே செல்கிறான்.
பெற்றோருக்கு அவன் சொன்னது புரியாவிட்டாலும், நாடகத்தை பார்த்தவர்களுக்கு நன்கு புரிந்துவிட்டது. அன்பும், கரிசனையுமுள்ள தேவனை விசுவாதிப்பதில் அந்த மகனுக்கு தடுமாற்றம். ஒவ்வொரு முறையும் அவன் எதையாவது சொல்ல ஆரம்பித்தால், உடனே அவன் தாய் அல்லது தந்தை நடுவில் பேச ஆரம்பித்து விடுவார்கள். அந்தப் போர் வீரனுக்கு, ஆண்டவர் பேசுவதைக் கேட்பது அவசியமானதாக இருந்தது. அவனுடைய தாய் அல்லது தந்தை, கர்த்தர் பேசும் கருவிகளாக இருக்க வேண்டும் என்று விரும்பி அவர்களிடம் சென்றான். அவர்களோ எப்பொழுதும் பேசிக்கொண்டிருந்தார்களே தவிர, அமைதியாக இருந்து கர்த்தருடைய குரலை கேட்பது இல்லை. மூன்று பேருமே மிகவும் குழம்பினவர்களாக, சத்தம் போட்டுக்கொண்ட வண்ணமாக வெளி யேறினார்கள். மூன்று பேரும் ஒருவர் சொல்வதை ஒருவர் கேட்டு, கர்த்தருடைய சமூகத்தில் ஜெபித்து, கர்த்தருக்காக காத்திருந்தால் எப்படி இருந்திருக்கும்? நிச்சயமாகவே வித்தியாசமான, பலனளிக்கும் விளைவை அடைந்திருப்பார்கள்.
ஆரம்ப வசனத்தில், எலியாவைக் குறித்து சொன்ன ஒரு பகுதியைக்கூறி, இந்த சம்பவத்தை விளக்க விரும்புகிறேன். ஆழமான அர்ப்பணிப்பை செய்திருந்த தீர்க்கதரிசி; ஆரம்பத்திலிருந்தே ஆகாப் ராஜா, மற்றும் ராணியாகிய யேசபேலுடைய கெட்ட செய்கைகளையும் அநேக ஆண்டுகளாக எதிர்த்து வந்தான். கர்மேல் பர்வதத்தில், பாகாலின் 450 தீர்க்கதரிசிகளை எலியா கொன்றுபோட்டான். பின்பு யேசபேல் எலியாவை கொல்வதாக பயமுறுத்தியபோது, பயத்தில் ஓடிப்போனான்.
வல்லமையான செயல்களை புரிந்த தீர்க்கதரிசி சோர்ந்து போனான். திடீரென்று தனியாக விடப்பட்டான். கர்மேல் பர்வதத்தில் இருந்ததுபோல மக்கள் கூட்டம் தன்னைச் சுற்றிலும் இல்லை, இங்கு அவனைக் கொல்ல ஒருவரும் இல்லை, பேசுவதற்கு கூட ஒருவரும் இல்லை. ஆரம்பத்தில் சொல்லியிருக்கும் இரண்டு வசனப்பகுதிக்கு முன்னால் நடந்த சம்பவம் இது; எலியா ஒளிந்துக்கொள்ள ஒரு குகைக்குள் சென்றான். தேவன் அவனைப் பார்த்து இங்கு என்ன செய்கிறாய் என்று கேட்டபோது, அவன் தேவனுக்காக பக்திவைராக்கியமாயிருந்ததைக் குறித்து சொன்னான். மேலும் அவன், இஸ்ரவேல் மக்கள் சோரம் போய், பட்டயத்தினால் கர்த்தருடைய தீர்க்கதரிசிகளைக் கொன்று போட்டார்கள், “நான் ஒருவன் மாத்திரம் மீதியாயிருக்கிறேன்; என் பிராணனையும் வாங்கத் தேடுகிறார்கள்” (வ.14) என்றான்.
கர்த்தர், பெருங்காற்று, பூமி அதிர்ச்சி, அக்கினியையும் அனுப்பினார். தேவன் வல்லமையாய், அற்புதவிதமாய், இப்படியெல்லாம் தோன்ற வேண்டும் என்று எலியா விரும்பினான் என்று நான் நினைக்கிறேன். ஆனால் நாம் என்ன வாசிக்கிறோம் என்றால், கர்த்தர் இவைகளெல்லா வற்றிலும் இருக்கவில்லை.
இதுவே, தேவன் செயல்படும் ஒரு ஆவிக்குரிய சட்டமாகும். பெரும் சத்தம், குழப்பங்களில் நாம் பிசாசானவனைக் காணலாம். பெரிய கவர்ச்சிகளில் நம்மை திசை திருப்பக்கூடியவன் அவன். ஆனால், தேவன் - “அமர்ந்த மெல்லிய குரலில்” - மற்றவர்கள் யாரும் கேட்க முடியாத குரலில் - அர்ப்பணிக்கப்பட்ட கர்த்தருடைய பிள்ளைகள் மட்டும், கேட்கக்கூடிய விதத்தில் பேச விரும்புகிறார்.
எலியா, நாடகப்பாணியில் தேவன் பேசுவார் என்று எதிர்பார்த்த வரையிலும், அவர் அவனோடு பேசவில்லை. எப்பொழுது அமைதியாக தனக்குள் பரிசுத்த ஆவியானவரின் சத்தத்தைக் கேட்கும் அளவுக்கு, கவனித்தானோ, அப்பொழுதுதான் எலியாவினால் தேவனோடு சம்பாஷிக்க முடிந்தது.
தேவன் உங்களோடு எப்படிப்பட்ட சத்தத்தோடு பேசவேண்டும் என்ற எதிர்பார்க்கிறீர்கள்? அமர்ந்த, மெல்லிய சத்தத்தைக் கேட்கும்போது அதை உங்களால் அறிந்துகொள்ளமுடியுமா? இதற்காக நீங்கள் தேவனிடத்தில் அமைதியாக நேரம் செலவழிக்கிறீர்களா? இல்லையென்றால், இதை செய்ய ஆரம்பிக்க, இதைவிட வேறு நல்ல தருணம் கிடைக்காது.
ஞானமுள்ள தேவனே, எலியாவையும், அவனைப் போன்ற மற்றவர்களையும் போல நானும் அடிக்கடி சத்தமான, உணர்ச்சி வசப்படக்கூடிய நாடகப் பாணியில் நீர் பேச விரும்புகிறேன். நீர் அற்புதங்களையும், அதிசயங்களையும் செய்கிறவர் என்று எனக்கு தெரியும். ஆனாலும் உம்முடைய மெல்லிய, அமர்ந்த, குரலினால் உம்முடைய மென்மையான விதத்தில் என்னோடு பேசும். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன். ஆமென்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
ஜாய்ஸ் மரின் நகடமுகற மவதபாட மபாதகனயுடன் உங்கள் நாகைத் ததாடங்குங்கள் .இப்படிப்பட்ட தினசரி பக்திக்கான மவத பாடங்கள் உங்களுக்கு நம்பிக்கககத் தரும், உங்கள் னகதப் புதுப்பிக்க உதவுகிறது ற்றும் ஒவ்தவாரு நாளும் நீங்கள் மநாக்கத்துடனும் ஆர்வத்துடனும் வாழ முடியும் ன்பகதக் கண்டறி உதவுகிறது!
More
இந்த திட்டத்தை வழங்குவதற்காக ஜாய்ஸ் மேயர் அமைச்சுக்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, செல்க: https://jmmindia.org/