மனதின் போர்களம்மாதிரி
ஒரு மறுரூபமான மனது
மிகவும் சுவாரஸ்யமான இரண்டு வார்த்தைகளை, பவுல், ரோமர் 12:2ல் உபயோகப்படுத்தியிருக்கிறார். கிரேக்க அறிஞரான என் நண்பர் ஒருவரிடம் இந்த இரண்டு வார்த்தைகளுக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்று கேட்டேன். “ஒத்திருத்தல்” (conformation), மற்றும் “உருமாற்றம் செய்தல்”, “மறுரூபமாகுதல்” (transformation).
அவர் சொன்ன காரியம் “ஒத்திருத்தல்” என்ற வார்த்தை - வெளித் தோற்றத்தைக் குறிக்கிறது. உதாரணத்திற்கு சொல்லவேண்டுமானால், நான் இருபது வயது பெண்ணாக இருந்தபோது இருந்த தோற்றம், எழுபது வயதாகும் எனக்கு இல்லை. அப்படி ஒரு வித்தியாசம். நம்முடைய சரீரத்தில் மாறுதல்கள். ஆனால், அவர் சொன்னது அதைவிட அதிகம். அந்த கிரேக்க வார்த்தையின் பொருள், நாகரீகத்திற்கு ஏற்றாற்போல் நாம் மாறுதல்களை செய்துகொள்வதாகும். அதாவது - அந்தந்த காலத்திற்கேற்ற நாகரீக பாணி, நம்முடைய கலாச்சாரத்தின் பின்ணணியில் நம்முடைய பழக்கம். ஒரு வருடம், பாவாடையை கணுக்காலுக்கு மேலே அணிவது நாகரீகம், அடுத்த முறை முழங்காலுக்கு மேல் அணிவது அடுத்த காலத்திற்குரிய நாகரீகம். அவை தொடர்ந்து மாறிக்கொண்டேதான் இருக்கும்.
உலகத்திலிருந்து “மறுரூபமாக்கப்படுதல்” என்று பவுல் கூறுவது, எளிதில் மாறாத தன்மையுள்ள, நம்முடைய “மனம் மாற்றப்படுவதையே” குறிக்கிறது. நாம் தேவனை ஆராதித்து அவருக்கு ஊழியம் செய்ய வேண்டுமானால், நாம் கட்டாயமாக இந்த மாறுதலுக்குள்ளாக கடந்து செல்லவேண்டும். நம்முடைய வெளித்தோற்றத்தில் மட்டுமல்ல, மாறுதலானது நமக்குள்ளாக, உள்ளத்திலும் வரவேண்டும். இது நம்முடைய ஆள்தத்துவம், நம் மனது, நம்முடைய உள்ளான பகுதியைக் குறிக்கிற ஒன்றாகும்.
இந்த அதிகாரம் (ரோமர் 12:1) துவங்கும் போது, நம்முடைய சரீரங்களை பரிசுத்தமும், தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்க வேண்டுமென்று நமக்கு உற்சாகமளித்து கூறுகிறது. இது விசுவாசிகளுக்கு தான் பொருந்தும். இந்த வசனத்திலே, நாம் “விசுவாசிகளாவதைப்பற்றி” பார்க்கவில்லை. அதற்கு மாறாக, விசுவாசிகளானவர்கள் எப்படி “விசுவாசிகளாக வாழ்வது” என்பதை பற்றினதாகும். இந்த அதிகாரம், நாம் நம்முடைய சரீர அவயவங்களை எப்படி தேவனுக்கென்று, ஜீவபலியாக ஒப்புக்கொடுப்பது என்று ஒரு சவாலாக கூறுகிறது. அதன் அர்த்தம் என்னவென்றால், நம்முடைய மனம், வாய், சித்தம், உணர்ச்சிகள், கண்கள், காதுகள், கைகள், கால்கள் மற்றும் உடல் முழுவதும் ஒப்புக்கொடுக்க வேண்டும்.
அநேக ஆண்டுகள் சபையிலே ஒரு நல்ல விசுவாசியாக இருந்தேன் என்பதை நான் ஒத்துக்கொள்ளவேண்டும். இயேசு கிறிஸ்துவை என் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டிருக்கிறேன். நான் பரலோகத்திற்கு போவேன் என்றும் எனக்குத் தெரியும். ஆனால், என்னுடைய அன்றாட, தனிப்பட்ட வாழ்க்கை எந்த ஒரு நபரையும் இயேசு கிறிஸ்துவிற்கு அர்ப்பணிக்கும் அளவு அமைந்ததாக தெரியவில்லை. எனக்கு வெற்றி இல்லை. எனக்கு வெற்றி தேவை என்பதையே நீண்ட நாட்களாக அறியாதவளாக இருந்தேன். நான் என்ன நினைத்தேன் என்றால், வாரம் முழுவதும் வாழ்க்கை கஷ்டம் நிறைந்ததாக இருக்கும். ஞாயிறு தோறும் ஆலயத்திற்கு செல்லும்போது, நான் நல்லவளாக இல்லாமல் இருப்பதை ஆண்டவர் மன்னிப்பார் என்ற ஒரு நம்பிக்கை.
தேவன் என்னுடைய வாழ்க்கையை மாற்றினார். அவர் தம்முடைய குமாரனை அனுப்பி, நமக்காக அவர் மரித்தது, நாம் பரலோகம் செல்வதற்காக மட்டுமல்ல; நாம் வாழும் இந்த உலகத்திலும், வெற்றியோடு வாழமுடியும் என்பதை நான் புரிந்துகொள்ள எனக்கு உதவி செய்தார். நாம் முற்றிலும் ஜெயங்கொள்ளு கிறவர்களாயிருக்கிறோம் (ரோமர் 8:37ஐ காண்க). நம்முடைய வாழ்க்கையானது, நீதியும், சமாதானமும், பரிசுத்த ஆவியினால் உண்டாகும் சந்தோஷம் உடையதாக இருக்கவேண்டும் (ரோமர் 14:17).
தேவனுடைய பரிபூரண சித்தம் நம் வாழ்க்கையில் முழுவதுமாக நிறைவேறுவதை நாம் காணவேண்டுமானால், நம்முடைய மனம் நிச்சயமாக மறுரூபமாக்கப்பட்டிருக்கவேண்டும். நாம் மாறினதற்கு அடையாளமாக, வித்தியாசமாக சிந்திக்கவேண்டும். வாழ்க்கையை வேறு கோணத்தில் பார்க்க வேண்டும். நம்முடைய மனம் ஒரு ஒழுங்கிற்குள் கொண்டு வரப்படவேண்டும். தேவனுடைய வார்த்தைக்கு ஒத்ததாக நம்முடைய சிந்தனை இருக்கவேண்டும், பிசாசின் பொய்களை சார்ந்ததாக இருக்கக்கூடாது.
தேவன் நம் ஒவ்வொருவருடைய வாழ்க்கைக்கும், வெவ்வேறு திட்டங்களை வைத்திருக்கலாம்; ஆனால், ஒன்று மட்டும் எல்லோருக்கும் பொதுவானது. நம்முடைய உள்ளான மனுஷனில், மனதில் மறுரூபமாக்கப்படவேண்டும். பரிசுத்த ஆவியானவரால் நம்முடைய மனம் புதிதாக்கப்பட்டிருக்குமானால், நாம் நிச்சயமாக வித்தியாசமானவர்களாக நடந்துகொள்வோம். நான் அப்படி மாறியிருக்கிறேன் என்று எனக்குத் தெரியும். சபையானது, எனக்கு கொண்டாட்டத்தின் இடமாகவும், கிறிஸ்துவுக்குள் என் சகோதர சகோதரிகளுடன் விசுவாசத்துடன் கற்றுக்கொள்ளும் இடமாகவும் மாறிவிட்டது. நான் “ஆராதனை” என்றால் என்ன என்பதை புரிந்துகொள்ள ஆரம்பித்தேன். ஏதோ வெறுமனே உணர்ச்சிவசப்பட்டு செயல்படும் ஒன்றாக இல்லாமல், என்னையே ஈடுபடுத்திக்கொள்ளும் ஒன்றாக மாறியது.
உங்கள் மனம் மறுரூபப்பட அவசியமா? சரியாக சிந்திக்க ஆரம்பியுங்கள். அப்பொழுது நீங்களே உங்களிலுள்ள மாற்றத்தைக் காண்பீர்கள். அதுமட்டுமல்ல, உங்களை சுற்றியுள்ள மற்றவர்களும் காண்பார்கள்.
பரிசுத்த பிதாவே, என்னுடைய மனம் புதிதாகிறதினாலே மறுரூபமடைந்த வாழ்க்கையை நான் வாழ எனக்கு உதவி செய்யும். உம்முடைய பரிபூரண சித்தம் என் வாழ்க்கையில் நிறைவேறுவதை நான் மட்டுமல்ல, உலகத்திலுள்ள மற்றவரும் காண உதவிசெய்யும். உம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் கேட்கிறேன். ஆமென்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
ஜாய்ஸ் மரின் நகடமுகற மவதபாட மபாதகனயுடன் உங்கள் நாகைத் ததாடங்குங்கள் .இப்படிப்பட்ட தினசரி பக்திக்கான மவத பாடங்கள் உங்களுக்கு நம்பிக்கககத் தரும், உங்கள் னகதப் புதுப்பிக்க உதவுகிறது ற்றும் ஒவ்தவாரு நாளும் நீங்கள் மநாக்கத்துடனும் ஆர்வத்துடனும் வாழ முடியும் ன்பகதக் கண்டறி உதவுகிறது!
More
இந்த திட்டத்தை வழங்குவதற்காக ஜாய்ஸ் மேயர் அமைச்சுக்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, செல்க: https://jmmindia.org/