மனதின் போர்களம்மாதிரி
நம்முடைய சிந்தனைகளின் நிலை
விமான நிலையத்திற்கு முன்பக்கத்திலுள்ள இடத்திற்கு நான் சென்றேன். அங்குதான், என் சிநேகிதி எனக்காக காத்திருப்பதாக சொன்னாள். நான் நிதானமாக நடந்துக்கொண்டே, என் சிநேகிதியைக் கண்டவுடன் அவளுடன் பேசப்போகும் காரியங்களை நினைத்தவாறு இருந்தேன். அவள் எங்குமே, எதற்குமே தாமதமாக செல்லமாட்டாள், எப்படி இன்னும் இங்கு வரவில்லை என்று வியந்து, நான் அமைதியாக இருந்தேன். அவள் காரை தூரத்தில் கண்டுபிடித்தேன். அவள் கார்தான் வருகிறது என்று நினைத்து ஒரு அடிக்கூட முன்னால் எடுத்து வைத்தேன், ஆனால் அந்த கார் என்னைத் தாண்டிச் சென்றது, உள்ளே வேறு யாரோ இருந்தார்கள்.
மூன்று நிமிடங்கள் கூட ஆகியிருக்கவில்லை; நான் கவலையுடனும், ஆர்வமுடனும் இருந்தேன். அவளுக்கு என்ன ஆயிற்று? அவளுக்கு ஏதாவது விபத்து நேர்ந்து விட்டதா? என்னை மறந்து விட்டாளா? அமைதியாய் இருந்த நான், மூன்று நிமிடங்களுக்குள் அப்படி ஒரு கவலைக்குள்ளானேன். என் மனநிலைதான் மாறியதே தவிர, அந்த மூன்று நிமிடங்களில் என்னை சுற்றிலும் வேறு எதுவும் மாறவில்லை. கவலையான எண்ணங்கள் எனக்குள்ளாக போராடின.
என்னுடைய செல்போனை எடுத்து, நம்பரை அழுத்த ஆரம்பித்தேன். திடீரென்று என் பக்கத்தில் காரின் `ஹார்ன்’ சத்தம். வந்து விட்டாள் என் சிநேகிதி, அவளைப் பார்த்த அடுத்த நிமிடமே, என் மனம் அமைதலாகவும் மகிழ்ச்சி நிறைந்ததாகவும் மாறியது. அந்த குறுகிய நேரத்தில் என்னுடைய உணர்ச்சிகள் எப்படியெல்லாம் மாறிப்போனது!
என் சூழ்நிலைக்கு ஏற்ப, என் மனம் அவ்வளவு வேகமாக மாறுகிறது. சில நேரங்களில் ஆண்டவர் என்னுடன் பேசுவதை எளிதில் கேட்டு கிரகித்துக் கொள்ள முடிகிறது...அவர் சொல்வதை விசுவாசிப்பதும் கடினமாக இல்லை. மற்ற நேரங்களில், கவலை, பதற்றம் மனதில் நிறைந்திருக்கிறது. நாம் தரிசித்து நடவாமல், விசுவாசித்து நடக்கவேண்டும் என்று வேதம் சொல்லுகிறது. ஆனால், அன்று விமான நிலையத்தில், நான் பார்த்த காரியங்களின் அடிப்படையில்தான் நான் நடத்தப்பட்டேன் என்று நிச்சயமாக சொல்லுவேன். நாம் கவலைப்படும்போது, கர்த்தர்மேல் நம்முடைய நம்பிக்கையை வைப்பதும் இல்லை, நாம் விசுவாசத்தில் நடப்பதுமில்லை.
என்னுடைய வாழ்வின் பெரும்பகுதி, குற்றம் கண்டுபிடிக்கும், தீர்ப்பு செய்யும், சந்தேகிக்கும் மனம் தான் எனக்கிருந்தது. அவிசுவாசிகளுக்கு இது ஒருவேளை சாதாரணக்காரியமாக இருக்கலாம். ஆனால், நான் ஒரு விசுவாசி. அதே மனநிலை, சிந்தனைகளுடன் வருடக்கணக்காக வாழ்ந்து வந்திருக்கிறேன். இதுதான் என்னுடைய வாழ்க்கை முறை. எத்தனையோ ஆண்டுகளாக, என்னுடைய தவறான சிந்தனைதான் எனக்கு பிரச்சனைகளை ஏற்படுத்திக்கொண்டிருந்தன என்பதை அறியாதவளாக இருந்தேன்.
ஒருவரும் எனக்கு கற்றும் தரவில்லை. நானும், ஏதாவது விதத்தில் என்னுடைய சிந்தனைகளை மாற்றிக்கொள்ளவேண்டும் என்று நினைக்கவும் இல்லை. அது எனக்கு தோன்றவுமில்லை. ஒரு சரியான விசுவாசியின் மனநிலை எப்படி இருக்கவேண்டும் என்று எனக்கு ஒருவரும் போதிக்கவில்லை.
நாம் ஒரு புதிய வாழ்க்கையை வாழவும், புதிய விதத்தில் நம்முடைய சிந்தனை இருக்கவும் தேவன் நமக்கு வழி திறக்கிறார்.
நம்முடைய மனதை புதுப்பிக்க,தேவன் நம்மை அழைக்கிறார் (ரோமர் 12:2). நம்மில் அநேகருக்கு, ஏதோ ஒருவிசை நாம் நம்முடைய சிந்தனைகளை புதுப்பித்தால் போதாது, அது நாம் தொடர்ந்து செய்யவேண்டிய ஒன்றாகும்.
ஒரு நாள், 1 கொரிந்தியர் 2:16, “எங்களுக்கோ கிறிஸ்துவின் சிந்தை உண்டாயிருக்கிறது” என்று பவுல் சொல்லுகிறதை வாசித்தேன். அவர் என்ன அர்த்தத்தில் அதை சொல்லியிருப்பார்? அநேக நாட்கள் மிகவும் ஆழமாக இந்த வசனத்தை தியானித்தேன். கிறிஸ்துவின் சிந்தை என்று சொல்லும்போது, நாம் பாவமே இல்லாத பரிபூரண சிந்தனை உள்ளவர்கள் என்று அர்த்தமல்ல. கிறிஸ்து எப்படி சிந்திப்பாரோ, நாமும் அப்படியே சிந்திக்க தொடங்குகிறோம் என்று அர்த்தம். நமக்கு அவருடைய சிந்தை உண்டு என்றால், அன்பான, நல்ல, கனப்படுத்துகிற சிந்தனைகளைத்தான் நாம் சிந்திப்போம்.
எத்தனை முறை என்னுடைய மனதை அசிங்கமான, கொடூரமான, கெட்ட சிந்தனைகளுக்கு நேராக செலுத்தியிருக்கிறேன் என்பதை ஆண்டவருக்கு முன்பாக அறிக்கையிட்டேன்.
1 கொரிந்தியர் 2:14ல் பவுல் இப்படியாக எழுதுகிறார், “ஜென்ம சுபாவமான மனுஷனோ, தேவனுடைய ஆவிக்குரியவைகளை ஏற்றுக்கொள்ளான்; அவைகள் அவனுக்கு பைத்தியமாக தோன்றும்; அவைகள் ஆவிக்கேற்ற பிரகாரமாய் ஆராய்ந்து நிதானிக்கப் படுகிறவைகளானதால், அவைகளை அறியவுமாட்டான்.” இது சரியாக வேலை செய்கிறது, என்று நான் நினைத்தேன். பிசாசினால் குறுக்கிடப்பட்ட ஒரு விசுவாசியின் மனதும், அவிசுவாசியின் மனதைப்போல இருக்கிறபடியால், ஆண்டவர் செய்யும் காரியங்களை கிரகித்துக்கொள்ள முடிவதில்லை. அவர்களுக்கு, கர்த்தருடைய ஆவிக்குரிய காரியங்கள் பைத்தியமாக தோன்றும்.
நாம் கிறிஸ்துவின் சிந்தையுடையவர்கள். நம்மால் அன்பான, கரிசனையான சிந்தனைகளை சிந்திக்கமுடியும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். அப்பொழுது பிசாசானவனுடைய தாக்குதல்களை முறியடிக்க முடியும்.
பரிசுத்தமுள்ள தேவனே, கிறிஸ்துவினுடைய சிந்தையோடு நான் வாழ விரும்புகிறேன். நான் முற்போக்கான, அன்பாக, கரிசனையுள்ள சிந்தனைகளை; என்னைக் குறித்தும், மற்றவர்களை குறித்தும், சிந்திக்க எனக்கு உதவி செய்யும்படி உம்மைக் கேட்கிறேன். கெட்டவைகளை அல்ல, நல்லவைகளையே வாழ்வில், நான் நினைக்க எனக்கு உதவி செய்யும். இயேசுவின் நாமத்தில் இதைக் கேட்கிறேன். ஆமென்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
ஜாய்ஸ் மரின் நகடமுகற மவதபாட மபாதகனயுடன் உங்கள் நாகைத் ததாடங்குங்கள் .இப்படிப்பட்ட தினசரி பக்திக்கான மவத பாடங்கள் உங்களுக்கு நம்பிக்கககத் தரும், உங்கள் னகதப் புதுப்பிக்க உதவுகிறது ற்றும் ஒவ்தவாரு நாளும் நீங்கள் மநாக்கத்துடனும் ஆர்வத்துடனும் வாழ முடியும் ன்பகதக் கண்டறி உதவுகிறது!
More
இந்த திட்டத்தை வழங்குவதற்காக ஜாய்ஸ் மேயர் அமைச்சுக்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, செல்க: https://jmmindia.org/