மனதின் போர்களம்மாதிரி
நிங்கள் எதை சிந்திக்கிறீர்கள் என்பதை குறித்து எச்சரிக்கையாயிருங்கள்
கம்ப்யூட்டர்கள் வர ஆரம்பித்த நாட்களில், “Garbage in Garbage out”, என்று சொல்வார்கள் (குப்பையைப் போட்டால், குப்பைதான் வெளியே வரும்... என்பது இதன் அர்த்தம்). அதாவது, எந்தத் தகவல்களை உள்ளே போடுகிறோமோ, அதற்கேற்ற பதிலைத்தான் கம்ப்யூட்டர் கொடுக்கமுடியும். வித்தியாசமான பதில்கள் வேண்டுமென்றால், அதற்கு ஏற்ப வித்தியாசமான தகவல்களை நாம் அதற்குள் செலுத்தியாக வேண்டும்.
கம்ப்யூட்டரை பொறுத்தவரையில், அநேகர் இதைப் புரிந்துகொள்ள கஷ்டப்படுவதில்லை. ஆனால், நம்முடைய மனதின் சிந்தனைகளைக் குறித்து சொன்னால் அதை அவர்கள் கிரகித்துக்கொள்வதில்லை. அல்லது, புரிந்துகொள்ள விருப்பம் இருப்பதில்லை. அநேக காரியங்களில் அவர்கள் நோக்க வேண்டியதாய் இருப்பதால், அவர்கள் கவனத்தை அவைகளிலேயே செலுத்துகின்றனர். அவை பாவமான காரியங்கள் அல்ல. அப்போஸ்தலனாகிய பவுல் அதைத்தான் சொல்லுகிறார். “எல்லாவற்றையும் அனுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் எல்லாம் தகுதியாயிராது” (1 கொரி 6:12).
உங்கள் மனதின் போராட்டத்தில், எதிரியானவனை நீங்கள் தோற்கடிக்க வேண்டுமானால்; உங்கள் கவனத்தை குறிப்பாக எதன்மேல் வைக்கிறீர்கள் என்ற முடிவை எடுக்கவேண்டும். கர்த்தருடைய வார்த்தையை எவ்வளவுக்கதிகமாக தியானிக்கிறீர்களோ, அவ்வளவு பெலசாலிகளாய் மாறி, அதிகமான வெற்றிகளை எளிதில் எடுப்பீர்கள்.
நிறைய விசுவாசிகளுக்கு வேதத்தை “வாசிப்பது”, மற்றும் வேதத்தை “தியானிப்பது”, ஆகிய இவ்விரண்டிற்கும் வித்தியாசம் தெரிவதில்லை. எப்பொழுதெல்லாம் கர்த்தருடைய வார்த்தையை “வாசிக்கிறார்களோ”; அப்பொழுதெல்லாம், ஆழமாக வார்த்தைகளை தங்களுக்குள் பதித்து கொள்வதாக நினைக்கிறார்கள். அடிக்கடி நாம் அனுபவிக்கும் ஒரு காரியம், ஒரு அதிகாரத்தை “வாசிக்க” ஆரம்பித்து, அதை முடிக்கும் முன்பு, என்ன வாசித்தோம் என்பதை மறந்துவிடுவோம். கர்த்தருடைய வார்த்தையை “தியானிப்பது” என்றால், அதை மறுபடியும், மறுபடியுமாக யோசித்து, தீவிரமாக சிந்தித்து, எதை நாம் வாசித்தோமோ அதையே அசைபோடவேண்டும்.
இப்படியெல்லாம் செய்யாமல், “ஆண்டவரே, என்னோடு பேசும், உம்முடைய வார்த்தையை நான் வாசிக்கும்போது எனக்கு கற்றுத்தாரும், உம்முடைய ஆழங்களை எனக்கு வெளிப்படுத்தும்”, என்று சும்மா சொல்லக்கூடாது.
இதற்கு முந்தின பக்கத்தில், நான் முதலாம் சங்கீதத்தை குறிப்பிட்டிருந்தேன். யார் பாக்கியவான் என்றும், அப்படிப்பட்ட மனுஷனுடைய சரியான செய்கையைக் குறித்தும் அது நமக்கு விவரிக்கிறது. கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அதை தியானிக்கிற மனுஷன்- எப்படி இலையுதிராதிருக்கிற, கனிதருகிற மரத்தைப்போலிருப்பான் - அவன் செய்வதெல்லாம் வாய்க்கும், என்று சங்கீதக்காரன் சொல்லுகிறான்.
கர்த்தருடைய வார்த்தையை தியானித்து, நினைத்துக்கொண்டிருப்பது, நல்ல விளைவைக் கொண்டுவரும் என்பதை சங்கீதக்காரன் நமக்கு தெளிவுப் படுத்தியிருக்கிறான். தேவன் யார் என்றும், அவர் என்ன சொல்லுகிறார் என்றும் அதையே சிந்தித்துக்கொண்டிருக்கும்போது, நாம் வளருவோம். அது மிகவும் சுலபமான ஒன்று. வேறு விதமாக சொல்லவேண்டுமானால், நாம் எதின்மேல் நம்முடைய முழு கவனத்தையும் செலுத்துகிறோமோ, நாம் அப்படிப்பட்டவர்களாகவே மாறிவிடுவோம். நாம் கர்த்தருடைய வார்த்தையை வாசித்து, அவருடைய அன்பையும், வல்லமையையும், தியானித்துக்கொண்டேயிருந்தால், அதுதான் நம் வாழ்க்கையில் கிரியைச் செய்யும்.
அப்போஸ்தலனாகிய பவுல் இதை மிகவும் அழகாக பிலிப்பியர் 4:8ல் கூறுகிறார்; “உண்மையுள்ளவைகளெவைகளோ, ஒழுக்கமுள்ளவை களெவைகளோ, கற்புள்ளவைகளெவைகளோ, அன்புள்ளவை களெவைகளோ, நற்கீர்த்தியுள்ளவைகளெவைகளோ, புண்ணியம் எதுவோ, புகழ் எதுவோ, அவைகளையே சிந்தித்துக்கொண்டிருங்கள் (அதாவது, அவைகளிலேயே உங்கள் மனம், சிந்தனை பதிந்திருக்கட்டும்).
வருந்தத்தக்க விஷயம் என்னவென்றால், அநேக விசுவாசிகள் கர்த்தருடைய வார்த்தையை மேலோட்டமாக வாசிக்கிறார்களே ஒழிய, கருத்தாய், முயற்சியெடுத்து படிப்பதில்லை. கூட்டங்களுக்கு சென்று மற்றவர் போதிப்பதை, பிரசங்கிப்பதைக் கேட்பார்கள். வேதத்தை எப்போதாவது, சமயம் கிடைக்கும்போது வாசிப்பார்கள். இப்படிப் பட்டவர்கள், தேவனுடைய வார்த்தையைத் தங்கள் வாழ்க்கையின் ஒரு முக்கிய பகுதியாக கருதி, ஒரு அர்ப்பணிப்புக்குள் வருவதேயில்லை.
உங்கள் சிந்தனைகளைக் குறித்து மிகுந்த எச்சரிக்கையாயிருங்கள். நன்மையான காரியங்களை அதிகமாக சிந்தித்தீர்களேயானால், உங்கள் வாழ்க்கை நன்மையானதாக இருக்கும். இயேசு கிறிஸ்துவைக் குறித்தும் அவர் நமக்கு கற்றுக்கொடுத்த வழிமுறைகளைக் குறித்தும் அதிகமாக நாம் சிந்தித்தால், நாம் பலசாலிகளாக அவரைப்போல, அவர் சாயலில் வளருவோம். அப்படியாக நீங்கள் வளரும்போது, உங்கள் மனதின் போராட்டத்தை நிச்சயமாக ஜெயிப்பீர்கள்.
ஆண்டவரே, உம்மை கனப்படுத்தும் காரியங்களை நான் சிந்திக்க எனக்கு உதவியருளும். நான் எல்லாவற்றிலும் செழித்திருக்க, உம்மிலும், உம்முடைய வார்த்தையிலும் எனக்கு ஒரு பசி தாகத்தைத் தாரும். இயேசு கிறிஸ்துவின் மூலம் இதைக் கேட்கிறேன். ஆமென்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
ஜாய்ஸ் மரின் நகடமுகற மவதபாட மபாதகனயுடன் உங்கள் நாகைத் ததாடங்குங்கள் .இப்படிப்பட்ட தினசரி பக்திக்கான மவத பாடங்கள் உங்களுக்கு நம்பிக்கககத் தரும், உங்கள் னகதப் புதுப்பிக்க உதவுகிறது ற்றும் ஒவ்தவாரு நாளும் நீங்கள் மநாக்கத்துடனும் ஆர்வத்துடனும் வாழ முடியும் ன்பகதக் கண்டறி உதவுகிறது!
More
இந்த திட்டத்தை வழங்குவதற்காக ஜாய்ஸ் மேயர் அமைச்சுக்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, செல்க: https://jmmindia.org/