மனதின் போர்களம்மாதிரி

மனதின் போர்களம்

100 ல் 31 நாள்

விசுவாசிக்கத் தீர்மானியுங்கள்

நீங்கள் “விசுவாசிக்கத் தீர்மானியுங்கள்” என்று நான் ஜனங்களிடத்தில் அடிக்கடி சொல்லுவேன். உடனே, ஏதோ அவர்கள் முடியாத காரியத்தை நான் சொல்வதுபோல், முகத்தில் எந்தவித உணர்ச்சியும் இல்லாமல் என்னை வெறித்துப் பார்ப்பார்கள். விசுவாசம், தேவனுடைய வார்த்தையை கேட்பதினால் வரும் (ரோமர் 10:17); ஆனால், ஒரு “தீர்மானத்தையும்” அது உடையதாக இருக்கிறது.

இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பதின் மூலமாக, நாம் தேவனோடு ஒரு உறவை ஏற்படுத்திக்கொள்ளுகிறோம். ஆனால், அது வெறும் ஆரம்பம்தான்.

நாம் தேவனிடத்தில் விசுவாசம் வைப்பது, அதோடு முடிந்து விடுவது இல்லை. நம்முடைய ஆவிக்குறிய வாழ்க்கையில், நாம் கர்த்தரை பின்தொடர்ந்து செல்லும்போது, நாம் ஒரு வளரும் விசுவாசத்தோடு பின்பற்றுகிறோம். அதன் பொருள் என்னவென்றால், நாம் பெரிய காரியங்களை விசுவாசிக்கக் கற்றுக்கொள்ளுகிறோம். நாம் ஆரம்ப நாட்களில் விசுவாசியாக மாறின பொது, நாம் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு; நாளடைவில், நாம் தேவனை விசுவாசிக்க கற்றுக் கொள்ளுகிறோம்.

நாம் விசுவாசிகளாகும்போது, தேவனுடைய குடும்பத்திற்குள்ளாக வந்து விடுகிறோம். “...அப்பா பிதாவே, என்று கூப்பிடப்பண்ணுகிற புத்திர சுவிகாரத்தின் ஆவியைப் பெற்றீர்கள் (ரோமர் 8:15). 

அதுதான் ஆரம்பம். அதோடு நிறைய விசுவாசிகள் நின்று விடுகின்றனர். ஆவியானவர் எப்பொழுதும் உங்கள் கரத்தைப் பிடித்து முன்னால் இழுக்கிறார். அந்த இடத்தில்தான், நீங்கள் தொடர்ந்து அவரோடு முன்னேறி செல்ல வேண்டும். மாறாக, இரட்சிக்கப்பட்ட அந்த நிலையிலேயே, அங்கேயே நிற்கத் தீர்மானிக்கக்கூடாது.

ஆரம்ப வசனத்தை வாசித்துப் பாருங்கள். உங்கள் விசுவாசம் பரீட்சிக்கப்படும். ஆனால், நீங்களோ அதை உறுதியாய் பற்றிக்கொண்டு முன்னேறிச் செல்லவேண்டும். தேவன் கொடுத்த வாக்குத்தத்தங்களை நீங்கள் முழுவதுமாக விசுவாசிக்காமல் சந்தேகப்படும்போது, பிசாசு உங்கள் விசுவாசத்தை சோதிக்க முற்படுவான்.

நம் விசுவாச வாழ்க்கையின் வளர்ச்சிக்கு, ஒரு முடிவு என்பதே கிடையாது. தேவன் நம்மை முன்னோக்கிக் கொண்டுசெல்ல விரும்புகிறார். ஆனால், நாம் தான் அவரோடு முன்னேறி செல்ல முடிவெடுக்க வேண்டும். சில நேரங்களில் நமக்குத் தைரியம் தேவைப்படுகிறது. ஆனால், விசுவாச வாழ்க்கை என்பது, அப்படித்தான் செயல்படுகிறது. விசுவாசத்தில் அடியெடுத்து வைப்பதன் மூலம்தான், நாம் வளருகிறோம்.

தேவன் உங்களுடைய இருதயத்தில், உங்களுடைய உள்ளான மனுஷனில் பேசும்போது, நீங்கள் சற்றும் தயக்கமின்றி, “அப்படியே ஆகட்டும் ஆண்டவரே,” என்று சொல்லவேண்டும். பரிசுத்த ஆவியானவர் உங்களிடம் சொல்லும் காரியத்தில், அவருக்கு இசைந்து கொடுக்க கற்றுக் கொள்ளவேண்டும்.

அதற்கு பதிலாக, அநேகர் எதிர்த்து நிற்பார்கள். அவர்கள் “முடியாது” என்று சொல்லி விடுவதுமில்லை; சாத்தான் அப்படிச் சொல்ல அவர்களை நச்சரிப்பதுமில்லை. மாறாக, “அது எப்படி ஆகும்?” என்று அவர்கள் மனதில் கேள்விகளைப் போடுவான். அதைப் புரிந்துகொள்ள எங்களுக்கு உதவி செய்யும் என்று ஆண்டவரைக் கேட்க ஆரம்பிப்பார்கள். உங்கள் மேல் அதிகாரி ஒரு வேலையை செய்யச் சொன்னால், நீங்கள் ஒருவேளை “ஏன்” என்று கேட்கலாம் அல்லது அதைக்குறித்து விவரங்களைக் கேட்கலாம்.

ஆனால், பரிசுத்த ஆவியானவர் அப்படி கிரியை செய்கிறதில்லை. நீங்கள் அவரிடம், “ஆண்டவரே, நீர் சொல்லும் காரியத்தை எனக்கு கொஞ்சம் விளக்கி சொல்லும், அதை நான் விசுவாசித்து அல்லது நம்பி அதன் பிறகு கீழ்ப்படிகிறேன்”, என்று சொன்னால், தேவன் என்ன சொல்லுவார் தெரியுமா? “கீழ்ப்படி. நீ புரிந்துகொள்ளவேண்டும் என்று நான் விரும்பினால், அதை உனக்கு தெளிவுப்படுத்துவேன்.”தேவன் எதையும், அல்லது எல்லாவற்றையும், நமக்கு விவரமாக சொல்லவேண்டும் என்று அவசியமில்லை!

அடிக்கடி விசுவாசிகளின் வாழ்க்கையில் இப்படித்தான்; அவர்களுடைய இருதயத்தின் ஆழத்தில், உள்ளான மனுஷனில், கர்த்தர் ஒரு காரியத்தை சொல்லியிருப்பார். ஆனால், அவர்கள் மனதில் ஒரு போராட்டம் நடந்துகொண்டிருக்கும். அவர்கள் தங்களைத் தாங்களே “தகுதியில்லாதவர்கள்” என்று யோசிப்பார்கள். அல்லது, “மக்களின் வாழ்க்கையை மாற்றுவதற்கு, என்னை போய் நீர் பயன்படுத்துவதற்கு நான் யார்” என்று கேட்பார்கள். 

கர்த்தர் சொல்லும் காரியத்தை, “ஏன்” அவர்களால் செய்யமுடியாது என்பதை அவரிடம் சொல்வதிலேயே அவர்கள் பெலத்தையெல்லாம் வீணடிப்பார்கள். ஆண்டவருக்கு ஏற்கனவே நம் குறைபாடுகள் என்ன, எவைகளில் நாம் தவறுவோம் என்பது நன்றாகத் தெரியும். தெரிந்தும், நம்மோடு சேர்ந்து கிரியை செய்ய அவர் ஆயத்தமாயிருக்கிறார். கர்த்தர் நம்முடைய திறமையை அல்ல, நம்மைத்தான் எதிர்பார்க்கிறார்.

கர்த்தர் மிகவும் சுலபமான ஒன்றைத்தான் உங்களைச் செய்யச் சொல்லுவார். விசுவாசியுங்கள். அவ்வளவுதான். கர்த்தர் உங்களிடத்தில் ஒரு காரியத்தை சொல்வாரானால், “எனக்கு நீர் சொல்வது புரியாவிட்டாலும், அதை நான் அப்படியே செய்வேன்”, என்று சொல்லுங்கள். வேதத்தில் இதற்கு ஒரு நல்ல உதாரணம்; பவுலாக மாறின சவுல், குருடனாக ஒரு வீட்டில் இருக்கிறான் என்பதை கர்த்தர் தமஸ்குவில் வசித்த அனனியாவுக்கு சொன்னார். அனனியா போய் சவுலின் மேல் கரங்களை வைக்கவேண்டும், கர்த்தர் அவனை சுகமாக்குவேன் என்று சொன்னார் (அப் 9:10-19).

அனனியாவுக்கு பயம். ஏனென்றால், சவுல் விசுவாசிகளை பயங்கரமாக உபத்திரவப்படுத்துகிறான். ஆனால் கர்த்தர் சொன்னக் காரியம், அந்த மனுஷன் பார்வை இழந்தவனாக இருக்கிறான். அதனால், அனனியா போய் ஜெபித்து அவனை பார்வை அடைய செய்யவேண்டும். ஏனென்றால், அவன் கர்த்தரால் தெரிந்துகொள்ளப்பட்ட பாத்திரம். இதைக்கேட்ட அனனியாவின் மனதில் பயமும்; அதே நேரத்தில், விசுவாசிகளைத் துன்புறுத்தும் மனிதனை, எப்படி தேவன் தெரிந்து கொண்டார் என்ற கலக்கமும் இருந்தாலும்; அனனியா போய் ஜெபித்தான். கர்த்தர் சவுலை பார்வையடையச் செய்தார்.

இப்படித்தான் நாமும் நடந்துகொள்ளவேண்டும் என்று கர்த்தர் எதிர்பார்க்கிறார். அவர் சொல்லும் காரியம், ஒருவேளை நாம் சிந்தித்துக்கூட பார்க்க முடியாத ஒன்றாக இருக்கலாம். இருந்தாலும், நாம் அவருடைய வார்த்தைக்கு அப்படியே கீழ்ப்படியவேண்டும் என்றுதான் கர்த்தர் எதிர்பார்க்கிறார்.


பரிசுத்த ஆவியானவராகிய தேவனே, உம்முடைய நோக்கத்தை என்னால் புரிந்துகொள்ள முடியாவிட்டாலும், உம்முடைய வார்த்தைகளை அப்படியே விசுவாசித்து ஏற்றுக்கொள்ள எனக்கு உதவி செய்யும். நான் என்னுடைய விசுவாச வாழ்க்கையில் நீர் சொல்லும் காரியங்களை செய்துமுடித்து, முன்னேறி செல்ல, உம்மை அதிகமாக விசுவாசிக்க விரும்புகிறேன். நான் எப்பொழுதும் இதில் தீர்மானமாய் இருக்க எனக்கு உதவிசெய்யும். ஆமென்.

வேதவசனங்கள்

நாள் 30நாள் 32

இந்த திட்டத்தைப் பற்றி

மனதின் போர்களம்

ஜாய்ஸ் ம஫஬ரின் நகடமுகற மவதபாட மபாதகனயுடன் உங்கள் நாகைத் ததாடங்குங்கள் .இப்படிப்பட்ட தினசரி பக்திக்கான மவத பாடங்கள் உங்களுக்கு நம்பிக்ககக஬த் தரும், உங்கள் ஫னகதப் புதுப்பிக்க உதவுகிறது ஫ற்றும் ஒவ்தவாரு நாளும் நீங்கள் மநாக்கத்துடனும் ஆர்வத்துடனும் வாழ முடியும் ஋ன்பகதக் கண்டறி஬ உதவுகிறது!

More

இந்த திட்டத்தை வழங்குவதற்காக ஜாய்ஸ் மேயர் அமைச்சுக்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, செல்க: https://jmmindia.org/