மனதின் போர்களம்மாதிரி
பரிபூரணமானத் திட்டம்
“தேவன் உங்கள் வாழ்க்கைக்கு என்று ஒரு திட்டத்தை வைத்திருக்கிறார்”, என்று பிரசங்கியார்கள் சொல்வதை, நம்மில் எத்தனையோ பேர் கேட்டிருக்கிறோம். கேட்ட உடனே, நாம் தலையை ஆட்டி, சிரித்துவிட்டு போய் விடுவோம். ஆனால், அதை நாம் நம்முடைய வாழ்வில் எந்த அளவு பிரதிபலிக்கிறோம் என்பது சந்தேகம்.
தேவன் நமக்கு என்று ஒரு பரிபூரணமானத் திட்டத்தை வைத்திருக்கிறார் என்பதின் அர்த்தம் தான் என்ன? “பரிபூரணமான” என்ற இந்த வார்த்தை, ஒருவேளை நம்மை சற்று யோசிக்கவைக்கக்கூடும். நாமே நிறையத் தவறு செய்கிறவர்கள், பலவீனமானவர்கள்; நம் வாழ்க்கையில் ஏதாவது, எப்படி பூரணமாக இருக்க முடியும்? நம்மைக் குறித்து நாம் நன்கு அறிந்திருக்கிறபடியால், நம்முடைய குறைகளைத்தான், நாம் உடனே நினைக்க ஆரம்பித்துவிடுகிறோம்.
அதுதான் சாத்தானின் தந்திரம்! நாம் பூரணமானவர்கள் என்பதினால், நமக்கு கர்த்தர் வைத்திருக்கும் திட்டம் பூரணமாகாது. தேவன் பூரணமானவர், அதனால்தான், அவர் கொடுக்கும் திட்டம் பூரணமானதாய் இருக்கிறது. தேவன், நம் ஒவ்வொருவருக்கும் ஒரு விசேஷித்த திட்டத்தை வைத்திருக்கிறார் எனறு நாம் சொல்லலாம்.
நாம் இந்த திட்டத்தைக் குறித்து கொஞ்சம் யோசிப்போம். முந்தின வசனத்திலே: தேவன் நம்மை இரட்சித்து, நற்கிரியையை நம்மில் தொடங்கியிருக்கிறார் என்று அப்போஸ்தலனாகிய பவுல் சொல்லுகிறார். ஆவியானவர் நம்முடனே இருந்து, நம்மை முன்னேற்றிக்கொண்டிருக்கிறார். மேலும், நாம் அவருடைய கரத்தின் செய்கையாயிருக்கிறோம் என்றும் பவுல் கூறுகிறார். 8ம் வசனத்தில் நாம் பார்த்தால், கிருபையினால் நாம் இரட்சிக்கப்பட்டிருக்கிறோம் என்று எழுதப்பட்டிருக்கிறது. இரட்சிக்கப்படுவதற்காக நாம் கிரியை செய்யவேண்டியதில்லை. நாம் அதை சம்பாதிக்கவோ, அதற்கு பாத்திரவான்களோ அல்ல, தேவனுடைய இராஜ்யத்தில் நாம் மறுபடியும் பிறந்திருப்பது ஒரு ஈவு. தேவன்தான் அதை செய்தார். நாம் அதைப் பெற்றுக்கொள்கிறோம். நாம் விசுவாசித்தது உண்மையென்றாலும், நம்முடைய இரட்சிப்பை சம்பாதிக்கும் அளவுக்கு நாம் எதையும் செய்துவிடவில்லை.
தேவன் நமக்குள் கிரியை செய்வதை நினைக்கும்போது, நாம் எவ்வளவு குறைவுள்ளவர்கள் என்பதை உணருகிறோம். ஏனென்றால், தேவன் பூரணமானவர். தேவனுடைய பரிபூரணத்தை திருப்திபடுத்தும் அளவுக்கு நாம் எந்த நன்மையும் செய்துவிட முடியாது. இயேசுவே அந்த பூரணத்திற்கு ஏற்றவர். நம்முடைய விசுவாசத்தை அல்லாமல், வேறொன்றும் நம்மை தேவனிடத்தில் தகுதிப்படுத்த முடியாது.
நாம் நற்கிரியைகளை செய்யும்படிக்கு, இயேசு கிறிஸ்துவின் மூலமாய் இரட்சிக்கப்படுகிறோம் என்று பவுல் கூறுகிறார். கர்த்தருக்கு பிரியமான வாழ்க்கையை நாம் வாழும்படிக்கு அவர் நம்மை தகுதிப்படுத்துகிறார். அந்த வாழ்க்கை எப்படிப்பட்டது என்று வேதவசனங்கள் தெளிவாய் காட்டுகின்றன.
நாம் பூரணர் ஆகிவிட்டோம் என்றோ, அல்லது இவ்வுலக வாழ்க்கையில் முற்றிலும் பரிபூரண நிலையை அடைவோமென்றோ சொல்ல முடியாது. காரியம் என்னவென்றால், தேவன் பரிபூரணமானவர், நமக்கென்று ஒரு திட்டத்தை வைத்திருப்பவர். அவரிடம் இருந்து வரும் திட்டம் பரிபூரணமானது. ஏனென்றால், அவர் பரிபூரணமானவர். உண்மையுள்ள இருதயத்தோடு, அவருக்கு கீழ்ப்படிந்து, அவர் வேலையை செய்வதே, தேவனின் திட்டமாகும்.
நிறைவுள்ள, திருப்தியான வாழ்க்கைக்கு வழிகாட்ட நம்முடைய தேவனால் முடியும். நம்முடைய பங்கு, அவர் திட்டத்தோடு இணைந்து செயல்படுவதுதான். நம்முடைய இயலாமையில் கவனம் செலுத்தாமல், தேவனால் எல்லாம் முடியும் என்பதிலேயே நம்முடைய பார்வை இருக்கவேண்டும்.
நம்முடைய அன்புள்ள தேவன், நம்முடைய இருதயங்களையும், சிந்தனைகளையும், முழுமையாக அவர் மேல் செலுத்தவேண்டும் என்று ஏங்குகிறார். நாம் எந்த அளவிற்கு இதை முழுமையாக செய்கிறோமோ,அந்த அளவிற்கு, தேவனுடைய நன்மையும், பரிபூரணமுமான திட்டத்தின்படி, நாம் நிறைவோடு வாழுவோம்.
“இந்த நியாயப்பிரமாண புஸ்தகம் உன் வாயைவிட்டுப் பிரியாதிருப்பதாக; இதில் எழுதியிருக்கிறவைகளின்படியெல்லாம் நீ செய்யக் கவனமாயிருக்கும்படி, இரவும் பகலும் அதைத் தியானித்துக்கொண்டிருப்பாயாக; அப்பொழுது நீ உன் வழியை வாய்க்கப்பண்ணுவாய், அப்பொழுது புத்திமானாயும் நடந்துகொள்வாய்”, என்று தேவன் யோசுவாவிடம் சொன்னார் (யோசுவா 1:8). நாமும் யோசுவாவைப்போல் இருக்கவேண்டும்.
பூரணமுள்ள தேவனே, என்னுடைய மனதின் போராட் டத்தில் எனக்கு உதவி செய்யும், என்னுடைய பலவீனங்களையும் குறைவுகளையுமே சாத்தான் தொடர்ந்து நினைப்பூட்டுகிறான். நான் எப்போதும் வெற்றியில நடக்க உம்முடைய அன்பையும், நீர் என் பக்கத்தில் இருப்பதை எனக்கு நினைவுப்படுத்தும். இவைகளை இயேசு கிறிஸ்துவின் மூலம் கேட்கிறேன். ஆமென்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
ஜாய்ஸ் மரின் நகடமுகற மவதபாட மபாதகனயுடன் உங்கள் நாகைத் ததாடங்குங்கள் .இப்படிப்பட்ட தினசரி பக்திக்கான மவத பாடங்கள் உங்களுக்கு நம்பிக்கககத் தரும், உங்கள் னகதப் புதுப்பிக்க உதவுகிறது ற்றும் ஒவ்தவாரு நாளும் நீங்கள் மநாக்கத்துடனும் ஆர்வத்துடனும் வாழ முடியும் ன்பகதக் கண்டறி உதவுகிறது!
More
இந்த திட்டத்தை வழங்குவதற்காக ஜாய்ஸ் மேயர் அமைச்சுக்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, செல்க: https://jmmindia.org/