மனதின் போர்களம்மாதிரி
இனியும் சாக்கு போக்குகள் இல்லை
“எனக்கு கெட்ட கோபம் வரும். நான் அப்படித்தான்”!
“நான் ஒளிவு மறைவு இல்லாமல், நேரடியாக பேசக்கூடியவன். நான் அப்படித்தான், மற்றவர்கள் என்னை அப்படித்தான் ஏற்றுக்கொள்ள வேண்டும்”.
“நான் எதைப் பார்க்கிறேனோ, அதை அப்படியே சொல்லி விடுவேன். என்னால் சோப்பு போட்டு பேச முடியாது”.
இந்தப்பட்டியல் ஒரு வேளை இப்படியே நீண்டுகொண்டு போகலாம். ஆனால், இவையெல்லாவற்றிலும் நாம் காண்கிற பொதுவான ஒன்று, அவரவர் தாங்கள் எப்படி இருக்கிறார்களோ, அப்படியேதான் இருக்க விரும்புகின்றனர். இது மாற்றங்களை எதிர்ப்பதற்கு ஒரு வழியாகும்.
சாத்தானும் நம்முடைய மனதில் நுழையவும் இது ஒரு வழியாகும். நீங்கள் ஒன்றும் முரட்டுத்தனமானவர் அல்ல - நீங்கள் உண்மையானவர்கள் என்றும், அந்த குணத்தை மற்றவர்கள் மதிக்க அறிந்திருக்கவேண்டும் என்று இந்த பெரிய எத்தன் சொல்லுவான். நாம் காண்கின்ற காரியத்தை அப்படியே பேசுகிறோம் என்றும், நாம் கோழையோ அல்லது மாய்மாலக்காரரோ இல்லை என்று நாம் நினைக்கிறோம். இதினால், நாம் மாறவேண்டிய தில்லையென்று பிசாசு நம்மை நம்பச் செய்து விட்டால், அவன் நம்மை யுத்தத்தில் ஜெயித்து விட்டான் என்று அர்த்தமாகும்.
நாம் மாறாமல் இருக்கவேண்டும் என்பதற்கு பிசாசு நிறைய சாக்கு போக்குகளை கொடுக்கக்கூடும். மற்றவர்கள்தான் தவறு செய்கின்றனர். உண்மையைச் சொன்னால் எடுப்பதில்லை, உணர்ச்சி வசப்படுகிறார்கள், அவர்கள் நிஜத்தை சந்திக்க முடியாதவர்கள், இதற்கு நான் பொறுப்பில்லை. நான் சரியாகத்தான் இருக்கிறேன் என்று நினைக்கிறோம். இதுதான் நம்முடைய பிரச்சினை.
மற்றொரு காரியம் என்னவென்றால், நாம் எவ்வளவுதான் பிற்போக்கான சிந்தனை உள்ளவர்களாக இருந்தாலும், அதை “பிற்போக்கானது” என்று அழைக்கமாட்டோம். “நேர்மை, உண்மை, யதார்த்தம் போன்ற வார்த்தைகளால் அழைக்க விரும்புவோம். நம்மைக் குறித்த உண்மையை நாம் சந்திக்காமல் இருக்கசெய்வதே பிசாசின் தந்திரமான வேலை.
நானும் இப்படிப்பட்டக்கடுமையான பிற்போக்குவாதியாக இருந்தபோது, நான் அப்படிப்பட்ட ஒரு நபர் என்பதை நினைத்துகூட பார்த்தது இல்லை. நான் நேர்மையாக இருக்கிறேன். ஏதாவது தவறு நடந்தால், உடனே அதை கண்டித்து பேசிவிடுவேன். எப்படி மற்ற மக்கள் மாறவேண்டும் என்று ஆலோசனைக் கொடுப்பேன். மற்றவர்களுடைய பிரச்சினைகளையும், பலவீனங்களையும் என்னால் நன்றாக பார்க்க முடிந்தது. அவர்கள் எப்படி அதை மேற்கொள்ள முடியும் என்று காட்டுவதில் எனக்கு சந்தோஷம். என்னுடைய மோசமான நாட்களில், என் நண்பர்கள் அனைவருமே தவறுகிறவர்களாகவும், அவர்கள் செய்தது எல்லாம் தவறாகவும் எனக்குத் தோன்றியது. அவர்களைக் குற்றம் சொல்லி, அவர்களிடம் குறைகளை கண்டுபிடிப்பது எனக்கு மிகவும் எளிதாக இருந்தது. இப்படிச் செய்வதை தவறாக கருதாமல், நான் அவர்களுக்கு உதவி செய்வதாக நினைத்தேன். அவர்களுக்கு என்னுடைய உதவி தேவையில்லை என்பதை உணரமுடியாத அளவுக்கு பெருமையான நிலையில் இருந்தேன். ஆனால் என் நண்பர்களோ, நான் அவர்களை ஏற்றுக்கொண்டு உற்சாகப்படுத்தவேண்டும் என்று எதிர்பார்த்தார்களே தவிர, அவர்களை அழிக்கவோ, குறைகூறி நியாயந்தீர்க்கவோ விரும்பவில்லை.
நான் ஏற்கனவே சொன்னது போல; தேவன் என்னை உணர்த்தி, கண்டிக்கும் வரை, என்னுடைய போக்கு தவறாகவே தெரியவில்லை.
பிற்போக்கானவர்களை நான் நியாயந்தீர்க்கவில்லை. நீங்கள் குறைகூறுபவர்களாகவோ, மற்றவர்களை நியாயம்தீர்க்கிறவர் களாகவோ இருந்தால், அதுவே பிற்போக்கான காரியம். அதற்கு பதிலாக, விசுவாசிகள், தங்கள் செயல்பாடுகளில் உள்ள குறைகளை, பிரச்சினைகளை சரிசெய்துகொள்ள உதவவே நான் விரும்புகிறேன். தேவன் உங்களை அப்படிப்பட்ட போக்கிலிருந்து விடுவிக்க வல்லவராக இருக்கிறார்.
நம்முடைய கிறிஸ்தவ வாழ்க்கையை, நாம் புதுசிருஷ்டிகளாக துவங்குகிறோம். பழையவைகள் எல்லாம் அழிக்கப்பட்டுவிட்டது. கிறிஸ்தவ வாழ்க்கை மாற்றக்கூடியது. அது வளரச்செய்யும் ஒன்று - நம்மை முன்னேறிச் செல்ல வைக்கும்.
நம்முடைய பிரச்சினைகளை, சாக்குபோக்குகள் சொல்லாமல், நேரடியாக சந்திக்கும்போதுதான், நம்முடைய வெற்றி ஆரம்பமாகிறது. “ஆம், நான் பிற்போக்கானவன்தான் - ஆனால் நீங்கள் அப்படிப்பட்ட குடும்பத்திலிருந்து வந்திருந்தால், உங்களுக்கு...”
நிறுத்துங்கள்! சாக்கு போக்கு கிடையாது. நாம் கடந்த காலத்தில் எப்படி இருந்தோம் என்று நமக்குத் தெரியும். ஆனால், நாம் அப்படியே இப்பொழுதும், எதிர்காலத்திலும் இருக்கவேண்டும் என்பது அவசியமில்லை. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் உதவியோடு, நம் மனம், சிந்தனை வேத வசனத்திற்கு ஏற்ப புதிதாக்கப்பட வேண்டும்.
“நான் ஒரு பிற்போக்கான மனிதன், நான் மாற விரும்புகிறேன்”, என்று தேவனிடம் சொல்வது ஒருவேளை கடினமாக தோன்றலாம். பிற்போக்கான சிந்தனை, பிற்போக்கான வாழ்க்கையை தரும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். கடந்த காலத்தில், உங்களை மாற்றிக்கொள்ள ஒருவேளை எவ்வளவோ முயற்சி செய்து, முடியாமல் போயிருக்கலாம். ஆனால், உங்கள் நிலையை ஆண்டவருக்கு அர்ப்பணித்து, அவரால்தான் உங்களை மாற்ற முடியும் என்று ஏற்றுக்கொண்டு, பிசாசின் அரண்களை ஜெயிக்க, போராட்டங்களை ஒழிக்க முடிவு செய்வோம்.
பரிசுத்தமுள்ள, முற்போக்கான தேவனே, என்னுடைய எல்லா பிற்போக்கான சிந்தனைகளுக்காக என்னை மன்னியும். நான் அன்புடன், உம்முடைய சந்தோஷத்தினால் நிறைந்திருக்க நீர் விரும்புகிறீர். பிசாசானவன் என் மனதின்மேல் எந்த ஆதிக்கமும் செலுத்தாதபடிக்கு, எனக்கு உதவி செய்யும். என்னுடைய சிந்தனையிலுள்ள எந்த பிற்போக்கான காரியத்தை அழித்துவிடும். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன். ஆமென்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
ஜாய்ஸ் மரின் நகடமுகற மவதபாட மபாதகனயுடன் உங்கள் நாகைத் ததாடங்குங்கள் .இப்படிப்பட்ட தினசரி பக்திக்கான மவத பாடங்கள் உங்களுக்கு நம்பிக்கககத் தரும், உங்கள் னகதப் புதுப்பிக்க உதவுகிறது ற்றும் ஒவ்தவாரு நாளும் நீங்கள் மநாக்கத்துடனும் ஆர்வத்துடனும் வாழ முடியும் ன்பகதக் கண்டறி உதவுகிறது!
More
இந்த திட்டத்தை வழங்குவதற்காக ஜாய்ஸ் மேயர் அமைச்சுக்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, செல்க: https://jmmindia.org/