மனதின் போர்களம்மாதிரி

ஏன் இந்த பிற்போக்கான மனநிலை?
அநேக ஆண்டுகளுக்கு முன்பு, தேவ ஊழியர்கள் ஆறு பேருடன் ஒரு மேஜையில் நானும் அமர்ந்திருந்தேன். என்னைவிட அவர்கள் ஊழியத்தில் அதிகமான அனுபவம் உள்ளவர்கள்தான். ஆனால், கர்த்தர் கிருபையாக அவர்களைவிட, வெளிப்படையாக என்னை அதிகம் உபயோகித்து வந்தார்.
அவர்களுடன் சம்பாஷித்துக்கொண்டிருந்தபோது, நான்தான் அதிகமாக பேசினேன் - ஒன்றன் பின் ஒன்றாக கதைகளை சொல்லிக்கொண்டிருந்தேன். அவர்கள் அனைவருமே சிரித்த வண்ணம் கவனித்துக்கொண்டிருந்தனர். ஒருவராவது ஏன் நானே பேசிக் கொண்டிருக்கிறேன் என்பதை ஆட்சேபிக்கும் விதத்தில், தங்கள் முகத்தில் கூட எந்த ஒரு சிறிய கோபத்தையும் காட்டவில்லை.
அதன்பிறகு, நான் நடந்துகொண்ட விதத்தை நினைத்துப்பார்த்தேன். நான் தவறு ஒன்றும் செய்துவிடவில்லை. ஆனால், நான் அந்த சம்பாஷனைகளில் முழுவதுமாக மற்றவர்களை எனக்கு கீழாக அடக்கியதுபோல் உணர்ந்தேன். அவர்களோடு பேசும் நேரத்தில் அதை அறியாவிட்டாலும், பிறகு நான் அதைக் குறித்து சிந்தித்தபோது, சுயநலத்தோடு, குருட்டுத்தனமாக சம்பாஷனை முழுவதையும் என் வசப்படுத்தியிருக்கிறேன் என்று பரிசுத்த ஆவியானவர் என்னை உணர்த்தினார். அந்த தேவ ஊழியர்கள் என்னைவிட அனுபவமிக்கவர்களாயிருந்ததினால், அவர்கள் எதிரில் என்னுடைய தாழ்வு மனப்பான்மையை வெளியே காட்டாமல், நான் தைரியமும், திறமையும் உள்ளவள் என்று காட்ட விரும்பினேன். பயத்தினால் அவர்களை நேருக்கு நேர் பார்க்காமல், ஏதோ நிறைய பேசினேன். ஒருவேளை நான் அப்படி நடந்ததின் காரணம், என் நினைவுகளெல்லாம் என்னைச் சுற்றியே இருந்தபடியால், நான் என்னைப் பற்றியே பேசினேன். ஆனால், உண்மையான அன்புள்ள ஒரு மனிதர், மற்றவர்கள்மேல் அக்கறை உள்ளவராக, முதலில் அவர்களைப் பற்றி விசாரித்து, அவர்களைப் பேசவைப்பார். இப்பொழுதுதான், நான் எவ்வளவு அன்பே இல்லாமல், அந்த நாட்களில் நான் நடந்துகொண்டேன் என்று யோசித்துப் பார்க்கிறேன்.
நான் என்னைக் குறித்தும், என் ஊழியத்தைக் குறித்தும் பேசுவதிலேயே அதிகமாக நேரம் செலவழித்ததால், என்னிடம் இருக்கும் தவறுகளை நான் ஒருபோதும் நேரிடையாக சந்தித்ததே இல்லை. பரிசுத்த ஆவியானவர் அவ்வப்பொழுது என்னை உணர்த்துவார். ஆனால், நான் அதற்கு அவ்வளவாக கவனம் செலுத்தவில்லை.
நம்முடைய குறைகளையும், தவறுகளையும், தோல்விகளையும் நாம் சரி செய்வதை விட்டு விட்டு; மற்றவர்களுடைய தவறுகளையே பார்த்துக் கொண்டும், சிந்தித்துக்கொண்டும் இருக்கிறோம். அது ஒன்றும் நமக்கு வேதனையளிப்பதோ, நம்மை பாதிப்பதோ இல்லை. மற்றவர்களையே எப்பொழுதும் பார்த்துக்கொண்டிருக்கிற நமக்கு, நம்முடைய இருதயத்தை பரிசோதித்து பார்க்க அவசியமிருப்பதும் இல்லை.
இதை நாம் சிந்திக்காமல் இருக்கிறபடியால், ஏன் இப்படி பிற்போக்காக நடந்துகொள்கிறோம் என்பதை நாம் புரிந்துகொள்வதில்லை. “ஆண்டவரே, என்னுடைய வாழ்க்கையில் நன்மையாக எதுவுமே நடக்காது என்று நினைக்கிறேன்”, என்று சொல்லும் அந்த நேரமே, பிசாசு நம் மனதில் அவனுடைய அரண்களை நிலைநாட்ட ஆரம்பித்து விடுவான். நாம் அவனை ஒருபோதும் குறைவாக எடைபோடக்கூடாது.
இதன் பிறகு நாம் கதறி, பரிசுத்த ஆவியானவரை நம் இருதயத்தை பரிசோதிக்கச் சொல்லுவோம். இயேசு, ஆவியானவரைக் குறித்து இப்படி சொன்னார், “...அவர் வந்து, பாவத்தைக் குறித்தும், நீதியைக் குறித்தும், நியாயத்தீர்ப்பைக் குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார்” (யோவான் 16:8). அடிக்கடி நாம் “உலகம்” என்ற வார்த்தையைப் படித்துவிட்டு; ஆம், அது இயேசு கிறிஸ்துவை அறியாத, பாவிகளாகிய மக்களுக்குத்தான் என்று நினைத்துவிடுகிறோம். அது உண்மைதான். ஆனால், முழுவதும் அல்ல. ஏனென்றால், நாமும் இந்த உலகத்தில்தான் வாழுகிறோம்.
தேவனுடைய பிள்ளைகளாகிய - நமக்கும் - இப்படிப்பட்ட பரிசுத்த ஆவியானவரின் கண்டித்து உணர்த்தும் கிரியைத் தேவை. பரிசுத்த ஆவியானவர் நமக்குள்ளாக ஆழமான கிரியையை நடப்பித்து, எதினால் நாம் துன்பப்படுகிறோம், எதினால் இந்த பிற்போக்கான சிந்தனை என்பதை நமக்குக் காட்ட வேண்டும்.
கர்த்தரை அறியாதவர்களில், மிகவும் தன்னம்பிக்கையுடன், சாத்தியகூரோடு, மற்றவர்களைக் குறித்து தவறாக பேசாதவர்களை; ஒருவேளை நாம் அறிந்திருக்கலாம். சாத்தான் ஏற்கனவே அவர்கள் மனதை வசப்படுத்தி இருப்பதால், அவர்களுக்கு பிற்போக்கான எண்ணங்களை கொடுத்து தொல்லை செய்ய அவசியமில்லை.
நாம் இப்படி யோசித்துப் பார்ப்போம். நாம் எந்த இடத்தில் பெலவீனமாக இருக்கிறோமோ, அங்குதான் பிசாசு நம்மைத் தாக்குவான். வில்லியம் ஷெல்டன் என்பவர், 100 ஆண்டுகளுக்கு முன்பு, மனித சரீரத்தைக் குறித்து ஆய்வு ஒன்றை நடத்தினார். அவருடைய ஆய்வின்படி, மனிதர்கள் அவர்களுடைய சரீர அமைப்பின்படி, ஒரு சில வியாதிகளால் தாக்கப் படுகிறார்கள் என்று அறிந்தார். குண்டாக இருப்பவர்கள், அதிகமாக இருதய நோய், மற்றும் இரத்த அழுத்த நோய் அடைய வாய்ப்பு உண்டு. எனக்கு ஒரு ஒல்லியான ஒரு பெண்மணி தெரியும். என்னுடைய தோழி அவள். எழுபது வயதிருக்கும். நல்ல பலமான இருதயம் உண்டு. ஆனால், எப்பொழுது ஜூரம் வந்தாலும், அவளுக்கு நுரையீரலில் பிரச்சனை வரும். அவளுக்கு பலவீனமான நுரையீரல்.
இதே போலத்தான், ஆவிக்குரிய ரீதியிலும் நாம் காண்கிறோம். நம் அனைவருக்குமே பெலவீனங்கள் உண்டு. சிலர் எப்பவும் நன்மையே இல்லை என்று சொல்லுவோம், சிலர் பொய் சொல்வது, வம்பு பேசுவது, வேறுசிலர் இயற்கையாகவே மற்றவர்களை ஏமாற்றுவது. இதில் யார் மோசம் என்பதல்ல, நம்மெல்லாருமே, நமக்குரிய பெலவீனங்களோடுதான் இருக்கிறோம். இவைகளை நமக்கு உணர்த்திகாட்ட, பரிசுத்த ஆவியானவர் நமக்குத் தேவை. இவையெல்லாம் பிசாசு நம்மைத் தாக்கும் இடங்கள், நாம் செய்ய ஒன்றும் இல்லை என்று நாம் சொல்ல முடியாது. நம்மை பரிசுத்த ஆவியானவருக்கு விட்டுக்கொடுக்கவேண்டும். ஆவியானவர் மட்டுமே நம்மை கண்டித்து, உணர்த்தி, நம்மை அவர் இப்படிப்பட்ட பிசாசின் தாக்குதல்கலிருந்து விடுவிக்கமுடியும். அதனால்தான், இயேசுவானவர் பரிசுத்த ஆவியானவராகிய தேற்றரவாளனை அனுப்பினார். ஏனென்றால், அவர்தான் நம்முடைய பெலவீனமான இடங்களில் நமக்கு உதவி செய்கிறார்.
பரிசுத்த தேவனே, என்னால் என்னை விடுவித்துக்கொள்ள முடியும் என்று எண்ணியதற்கு என்னை மன்னியும். என்னுடைய புண்பட்ட நிலையை சாத்தான் உபயோகித்து, என்னை மேற்கொண்டுவிடாதபடி, எனக்கு உதவி செய்யும். நான் என்னை முழுவதுமாக உமக்குக் கொடுக்கவும், உம்மால் நான் பயன்படுத்தப்படவும், என்னை விடுதலையாக்கும். இரட்சகராகிய இயேசுவின் மூலம் கேட்கிறேன். ஆமென்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

ஜாய்ஸ் மரின் நகடமுகற மவதபாட மபாதகனயுடன் உங்கள் நாகைத் ததாடங்குங்கள் .இப்படிப்பட்ட தினசரி பக்திக்கான மவத பாடங்கள் உங்களுக்கு நம்பிக்கககத் தரும், உங்கள் னகதப் புதுப்பிக்க உதவுகிறது ற்றும் ஒவ்தவாரு நாளும் நீங்கள் மநாக்கத்துடனும் ஆர்வத்துடனும் வாழ முடியும் ன்பகதக் கண்டறி உதவுகிறது!
More
இந்த திட்டத்தை வழங்குவதற்காக ஜாய்ஸ் மேயர் அமைச்சுக்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, செல்க: https://jmmindia.org/
சம்பந்தப்பட்ட திட்டங்கள்

“பலங்கொண்டு திடமனதோடு வாழுங்கள்!

உங்கள் வாழ்வின் மிகப் பெரிதான தீர்மானம்!

குறிக்கோள் நிறைந்த வாழ்க்கையை வாழுங்கள்!

1 தெசலோனிக்கேயர்

பொறுப்பு (கணக்கு ஒப்புவித்தல்)

Walk With Jesus - வாழ்க்கையில் மகிழ்ச்சி

கவலையை அதன் குகையிலேயே தோற்கடித்தல்

கசப்பு உன்னைக்கொல்ல விடாதே!

கவலைகளை மேற்க்கொள்ளுதல்
