மனதின் போர்களம்மாதிரி
விரும்பியதை அடைவது
மற்ற சராசரி மனிதர்களைப் போலவே, பொதுவாக, நான் எனக்கு என்ன வேண்டும் என நினைக்கிறேனோ, அதை உடனே பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் விரும்புவேன். நமக்கு எது தேவையோ, அது கிடைக்காவிட்டால், உடனே பிற்போக்கான உணர்வுகள் தலைதூக்கும் (அந்த உணர்வுகள் முதலில் சிந்தனையாக ஆரம்பித்தது என்பதை நினைவில் கொள்ளுங்கள்).
“அந்த குறிப்பிட்ட உடையை வாங்குவதற்காக காரை ஓட்டிச் சென்றேன். ஆனால் என் அளவு இல்லையா?”
“என்ன சொல்றீங்க, எச்டி- டிவியே இல்லையா? பின்னே ஏன் பேப்பரில் விளம்பரம் செய்தீர்கள்?”
நம்மில் அநேகர் இப்படித்தான், நாம் விரும்பியது நமக்கு கிடைக்கா விட்டால், மற்றவர்களையும் கஷ்டப்படுத்திவிடுவோம். இதை நாம் பள்ளியிலே கற்றுக்கொள்ளவில்லை. இது நம் கூடவே பிறந்து வந்த சுபாவம்!
இதை நான் எழுதும்போது, எனக்கு ஒரு காட்சி ஞாபகத்திற்கு வருகிறது. ஒரு மளிகைக்கடையில் ஒரு அம்மா பொருட்களை வாங்கிக் கொண்டிருந்தாள். அவளுடைய குழந்தை திடீரென்று ஒரு பெட்டியை எடுத்து “எனக்கு வேண்டும், எனக்கு வேண்டும்” என்றது. “வேண்டாம் வீட்டிலே நிறைய இருக்கு” என்று அந்த தாயார் சொல்லிக்கொண்டே வேறு பொருட்களை எடுத்த வண்ணம் நகர்ந்தாள். அந்த குழந்தையோ, “வேண்டும், அது வேண்டும்” என்று சொல்லிக்கொண்டேயிருந்தது. தாய் எந்த பதிலையும் சொல்லாததைக் கண்டு உதைத்துக்கொண்டு அழ ஆரம்பித்தது. அந்த தாயும் அவள் பங்கிற்கு எவ்வளவோ அந்தக் குழந்தையின் கவனத்தைத் திருப்ப முயன்றாள். அந்த குழந்தை செய்வதை பார்த்துக்கொண்டே, இதைப் போலத்தான் நாமெல்லோரும் அநேக வேளைகளில் நடந்துகொள்கிறோம், என்று நான் நினைத்தேன். நமக்கு என்ன வேண்டும் என்பதை, நாமே தீர்மானம் பண்ணிக்கொள்கிறோம். நாம் விரும்பினது கிடைக்காவிட்டால், உடனே கோபமடைகிறோம்.
“ஜாக்கும், நானும் ஒரே வேலை உயர்வுக்காக காத்திருந்தோம். நான் அவரைவிட இந்த அலுவலகத்தில் அதிக ஆண்டுகள் இருக்கிறேன். அவரைவிட அதிக வருமானம் ஈட்டியிருக்கிறேன். எனக்குத்தான் தகுதி இருக்கிறது. ஆனால், ஜாக்குக்கு கிடைத்துவிட்டது அந்த உயர்வு.”
“என்னுடைய இறுதி தேர்வில் 98 மதிப்பெண்களை நான் எடுத்தேன். நான் 100 மதிப்பெண் எடுத்திருந்தால், வகுப்பில் முதல் மாணவியாக வந்திருப்பேன். ஆனால் நான் 83 மதிப்பெண்களை எடுத்து வகுப்பில் 5ஆவது மாணவியாகி விட்டேன். எனக்கு 100 மதிப்பெண்கள் பெற தகுதி இருந்தது, ஆனால், என் ஆசிரியருக்கு என்னைப் பிடிக்கவில்லை”.
மேற்கூறிய அந்த இரண்டு பிரச்சனைகளையும் இன்னும் நெருக்கமாக கவனிப்போம். மேலே சொன்ன நபர்கள் இருவருமே, தாங்கள் விரும்பியதை அவர்கள் பெறவில்லை. ஆனால், ஒரு பொதுவான வாக்கியத்தைக் கூறினார்கள். “எனக்குத் தகுதியிருக்கிறது, ஆனால், எனக்கு அது கிடைக்கவில்லை.”
விசுவாசிகளாகிய நாம், நம்முடைய வாழ்க்கையில் எல்லாம் நிறைவாகவும், சுலபமாகவும், இருக்கவேண்டும் என்று அடிக்கடி நாம் எதிர்பார்க்கிறோம். வெற்றி, சந்தோஷம், சமாதானம், மகிழ்ச்சி, இன்னும் எல்லாம் வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். இதற்கு தடை ஏதும் வந்தால், உடனே புகார் சொல்ல ஆரம்பித்து விடுகிறோம்.
நாம் நல்ல வாழ்க்கையை வாழ வேண்டும் என்று தேவன் விரும்பினாலும், சில நேரங்களில் பொறுமையோடு நாம் சகிப்பதை விட்டு விட்டு, “என் வழியிலேயே தான் போவேன்,” என்று போகக்கூடாது. இந்த ஏமாற்றங்கள் நம்முடைய குணத்தையும், ஆவிக்குரிய வளர்ச்சியையும் சோதிக்கின்றன. நாம் உயர்வுக்கு ஆயத்தமா, இல்லையா என்பதை அவை காட்டிவிடும்.
ஏன், எப்பொழுதும் நாம்தான் முதலில் இருக்கவேண்டும் என்றும், மற்றவர்கள் நமக்கு கீழேயுள்ள நிலையில்தான் இருக்கவேண்டும்? நாம் மட்டும்தான் நிறைவான வாழ்க்கையை வாழ தகுதியுள்ளவர்கள் என்று ஏன் நினைக்கவேண்டும்? ஒருவேளை, நம்மைப்பற்றி நினைக்க வேண்டியதற்கு மிஞ்சி அதிகமாக நினைக்கிறோம் போல் இருக்கு. ஒரு தாழ்மையான சிந்தனை எனப்படுவது, நாம் கடைசி இருக்கையில் அமர்ந்து, தேவன் என்னை முன்னே கொண்டுசெல்லட்டும் என்பதே ஆகும். நாம் பொறுமையினாலும், விசுவாசத்தினாலும் தேவனுடைய வாக்குத்தத்தங்களைச் சுதந்தரித்துக்கொள்கிறோம் என்று தேவனுடைய வார்த்தை கூறுகிறது. தேவனை விசுவாசிப்பது சிறந்தது, ஆனால், நம் வாழ்க்கையில் எல்லாம் அநியாயாக சம்பவிக்கிறது என்று அறிந்தும், அவரைத் தொடர்ந்து விசுவாசிப்பது இன்னும் சிறந்ததாகும்.
அநேக நேரங்களில் பிசாசு, நம்முடைய மனதில் தீய, பிற்போக்கான காரியங்களைக் கொண்டு வருவான். இது அவனுக்கு ஒரு விளையாட்டு; “உனக்கு அதை பெற்றுக்கொள்ளத் தகுதியில்லை; உனக்கு எந்த மதிப்பும் கிடையாது, நீ ஒரு மதியற்றவன்...”, “நீ எவ்வளவு கடினமாக உழைக்கிறாய், ஆனால் உனக்கு அதற்கேற்ற உரிமை, உயர்வு கொடுக்கப்படவில்லை,” எனத் தந்திரமாக சொல்லுவான். அவன் சொல்லும் இந்தப் பொய்களை நாம் கேட்டு, அதை நம்பினால், நாம் தோற்றுப்போய்விட்டோம் என்ற உணர்வுதான் நமக்கு வரும். அல்லது மற்றவர்கள் நம்மைத் தவறாக பயன்படுத்துவதுபோல் நம்ப ஆரம்பித்து விடுவோம்.
நாம் விரும்பியது நமக்கு கிடைக்காவிட்டால், அந்நேரமே, “அதைப் பெற்றுக்கொள்ள எனக்குத் தகுதி இருக்கிறது” என்று நாம் சொல்லி, உடனே நம்முடைய உயர் அதிகாரி, பள்ளியிலுள்ள ஆசிரியர் அல்லது வேறு யார் மீதாவது நம்முடைய கோபம் திரும்பும். சில நேரங்களில், ஆண்டவர் மேலும் கோபப்படுவோம். எனக்குத் தகுதி இருந்தும், நான் விரும்பியதை அவர் கொடுக்கவில்லையே, என்று.
அதைப் பெற நமக்குத் தகுதி இருக்கிறது என்று நாம் சொல்வதுதான், நாம் செய்யும் மிகப்பெரிய தவறாகும். சுயபரிதாபம் நமக்குள் தலைதூக்கும். நாம் விரும்பியதை அடையாத பட்சத்தில்; நாம் சுயபரிதாபத்தோடும் அப்படியே இருக்கலாம், அல்லது, எனக்கு தரப்பட்டுள்ள இந்த வாழ்க்கையை நான் அப்படியே ஏற்றுக்கொண்டு, அதில் திருப்தியடையலாம். அல்லது அதில் நிறைவு இல்லை என்று புகார்களைக் கூறிக் கொண்டிருக்கலாம்.
எனக்கு யோனாவின் கதை நினைவுக்கு வருகிறது. மீனின் கதை அல்ல, ஆனால், அதன் பிறகு நடந்த சம்பவம். நாற்பது நாளில் தேவன், நினிவேயை அழிக்கப்போகிறார் என்று அறிவித்தான். ஆனால், அங்கிருந்த மக்கள் உடனே மனம் திரும்பினார்கள். ஏனென்றால், தேவன் அவர்கள் கூக்குரலைக் கேட்டார். யோனாவோ கோபமடைந்தான். “இப்போதும் கர்த்தாவே, என் பிராணனை என்னை விட்டு எடுத்துக் கொள்ளும்; நான் உயிரோடிருக்கிறதைப் பார்க்கிலும், சாகிறது நலமா யிருக்கும் என்றான் (யோனா 4:3).
1,20,000 மக்கள் இரட்சிக்கப்பட்டதை கண்டு மகிழ்வதைப் பார்க்கிலும், யோனா எரிச்சலடைந்தான் என்பது பரிதாபமாக இல்லையா? நமக்கு இப்படிப்பட்ட சூழ்நிலை இல்லாவிட்டாலும், அத்தனை ஆயிரக்கணக்கான மக்கள், அமர்ந்து, தங்களைக் குறித்து தாங்களே சுயபரிதாபப்பட்டு, பிசாசு முணுமுணுக்கிற காரியங்களைக் கேட்டு, கர்த்தர் வைத்திருப்பதை தவற விட்டு விடாமல், அதைவிட ஒவ்வொரு சூழ்நிலையிலும் தேவனை விசுவாசிப்பதையே தெரிந்து கொண்டனர்.
நம்மை முழுவதுமாக தேவனுக்கென்று அர்ப்பணிப்பதே, கிறிஸ்தவ வாழ்க்கையின் இரகசியமாகும். நம்முடைய சுயசித்தத்தை, தேவனுடைய சித்தத்திற்கு முழுவதும் விட்டுக்கொடுத்தால், நம்முடைய வாழ்க்கையில் எது நடந்தாலும், அது நம்மை கோபப்படுத்தவோ, விரக்தியடையவோ செய்யாது. நாம் விரும்புவதை அல்லது கேட்பதை தேவன் கொடுக்காவிட்டால், “என்னுடைய விருப்பமல்ல, உம்முடைய சித்தம் எனக்கு வேண்டும்” என்று சொல்லும் அளவுக்கு, நம்முடைய விசுவாசம் உறுதியாக இருக்கவேண்டும்.
தேவனே எனக்கு உதவி செய்யும். எனக்கு அடிக்கடி நிறைய விருப்பங்கள் வருகிறது. அது கிடைக்காவிட்டால், நான் சோர்ந்து விடுகிறேன். என்னை மன்னியும். இயேசுவானவர் சிலுவையில் மரிக்க விரும்பவில்லை. ஆனாலும், உம்முடைய சித்தத்திற்குத் தன்னை முழுவதுமாக அர்ப்பணித்துள்ளார் என்பதை எனக்கு நினைவுபடுத்தும். உமக்கு என்னை முழுவதுமாக அர்ப்பணிக்கவும், நீர் தருபவற்றில் திருப்தியடையவும் எனக்கு உதவி செய்யும். இயேசுவின் நாமத்தில் கேட்கிறேன். ஆமென்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
ஜாய்ஸ் மரின் நகடமுகற மவதபாட மபாதகனயுடன் உங்கள் நாகைத் ததாடங்குங்கள் .இப்படிப்பட்ட தினசரி பக்திக்கான மவத பாடங்கள் உங்களுக்கு நம்பிக்கககத் தரும், உங்கள் னகதப் புதுப்பிக்க உதவுகிறது ற்றும் ஒவ்தவாரு நாளும் நீங்கள் மநாக்கத்துடனும் ஆர்வத்துடனும் வாழ முடியும் ன்பகதக் கண்டறி உதவுகிறது!
More
இந்த திட்டத்தை வழங்குவதற்காக ஜாய்ஸ் மேயர் அமைச்சுக்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, செல்க: https://jmmindia.org/