மனதின் போர்களம்Sample
கொஞ்சம் கொஞ்சமாக
இயேசுவைப் பின்பற்ற ஆரம்பித்த நாளிலிருந்து, இந்நாள் வரைக்கும் நான் வாழ்ந்த வாழ்க்கையை, சமீபத்தில் கொஞ்சம் யோசித்துப் பார்த்தேன். கர்த்தர் என்னை கடந்துவரப் பண்ணின பாதைகளை, இந்த பிரயாணத்தின் ஆரம்பத்திலேயே நான் அறிந்திருந்தேனேயானால், ஒரு வேளை இந்த பிரயாணத்தை துவங்கவே பயந்திருப்பேன்.
ஆனாலும், தேவன் அவருடைய கரத்தினால் “கொஞ்சம் கொஞ்சமாக” என்னை முன்னேற்றி இருக்கிறார் என்று இப்பொழுது உணருகிறேன். எல்லோரையும் போல நானும் சோர்ந்து போனதுண்டு. என்னுடைய தோல்விகளுக்காக மனமுடைந்து கண்ணீர் வடித்த நேரங்களுமுண்டு. ஆனாலும், கர்த்தர் என்னை ஊக்குவித்தார்.
“கொஞ்சம் கொஞ்சமாக” முன்னேறுவதே, வெற்றியுள்ள கிறிஸ்தவ வாழ்க்கையின் இரகசியமாக இருக்கிறது. அதாவது, மாதக்கணக்கில், வருஷக்கணக்கில், அங்குலம் அங்குலமாக, முன்னேறுவது. நம்மில் பலருக்கு இது புரியும். மனதின் போராட்டத்தில் இது உண்மையாக இருக்கிறது. சாத்தானை ஒரே அடியில் விழத்தள்ளி, நிரந்தர வெற்றியுடன் நாம் வாழ்வதில்லை. “கொஞ்சம் கொஞ்சமாக”, சிறிய அளவில் அவனை மேற்கொண்டு, பெரிய யுத்தத்தில் அவனை சந்திக்க ஆயத்தமாகிறோம். இதை தினமும் செய்து நாம் முன்னேற வேண்டும்.
முதல் தடவை, இதை நினைத்துப் பார்த்தபோது, நான் கொஞ்சம் சோர்வடைந்தேன். அதன் பின், தேவஞானம் எனக்கு விளங்கினது. இஸ்ரவேலருக்கு தேசத்தைக் கர்த்தர் வாக்களித்தபோது, அது விசேஷித்த, செழிப்பான, அழகான இடம் என்று முன்னறிவித்தார். ஆனால் யாக்கோபும், அவனுடைய புத்திரரும் அத்தேசத்தை விட்டு புறப்பட்டபின் 400 ஆண்டுகளாக மற்றவர்கள் அதை ஆக்கிரமித்து வந்தனர்.
அந்த இடம் இஸ்ரவேலரின் சுதந்திரமாக இருந்தாலும், அதில் சும்மா எளிதாகப் போய் தங்கி விடும் விஷயமாக இல்லாமல், அவர்கள் அதை போராடி அடைய வேண்டியதாயிருந்தது.
ஆவிக்குரிய ரீதியிலும் இப்படித்தான். தேவன் ஆசீர்வாதங்களோடு நமக்காக காத்திருந்தாலும், நாம் தான் போய் சுதந்தரிக்க வேண்டும்.
தலைப்பு வசனத்தில் தேவன், காட்டுமிருகங்களைக் குறித்து சொல்லுகிறார். அவைகள் ஆபத்தானவைகள். அவைகளை “பெருமை” என்று வைத்துக்கொள்வோம். ஒரு வேளை தேவன் முழு வெற்றியையும், ஒரே விசையாக கொடுத்து விட்டால், பெருமை தலைதூக்கியிருக்கக்கூடும்.
மற்றவர்களை நாம் அசட்டை செய்ய ஆரம்பிப்போம். ஆனால், உண்மை என்னவென்றால், அவர்கள் நாம் அடைந்த நிலையை இன்னும் வந்து சேரவில்லை. அவ்வளவு தான்.
கர்த்தர் நம் ஒவ்வொருவருக்கும் அருமையான திட்டத்தை வைத்திருக்கிறார். ஆனால், நாம் இனி என்றைக்கும் போராட அவசியமே இல்லாதபடி அப்படிப்பட்ட ஒரே விசையான வெற்றியாய் இருக்காது. மாறாக சாத்தானை தொடர்ந்து தாக்கும், விழிப்புள்ள ஒரு யுத்தத்தை நாம் தொடர வேண்டும்.
மேலும், “கொஞ்சம் கொஞ்சமாக” ஜெயிப்பது, ருசியுள்ளதாகவும் அமையும். ஒவ்வொரு முறை சாத்தானின் அரண்களை மேற்கொள்ளும் போது நாம் மகிழுகிறோம். இதன் விளைவாக தொடர்ந்து தேவனைத் துதிக்கிறோம். இதற்கு பதிலாக; முப்பது வருஷத்திற்கு முன்னால், ஒரே ஒரு வெற்றியை நாம் பெற்றிருந்தால், நம்முடைய வாழ்க்கை எவ்வளவு சுவாரஸ்யமற்றதாக இருக்கும்? நம்முடைய வாழ்க்கையில் “கொஞ்சம் கொஞ்சமாக” நம்மை நடத்தி, உற்சாகப்படுத்துகின்ற இப்படிப்பட்ட தேவனுக்கு ஊழியம் செய்வது, எவ்வளவு சிலாக்கியமான காரியம்? எனவே, நாம் எப்பொழுதும் புதிய எல்லைகளை அடையவேண்டும்; தேவனோடு செய்யும் நம்முடைய பிரயாணத்தை, இதுதான் பரவசமாக்குகிறது.
தேவனே, எல்லா வெற்றியும் எனக்கு இப்பொழுதே வேண்டும் என்று நினைத்ததற்காக என்னை மன்னியும். என்னுடைய நெருக்கத்தில் நான் உம்மை அழைத்த போது, உம்முடைய அருமையான, அன்புள்ள, அரவணைக்கும் கரத்தினால் என்னை “கொஞ்சம் கொஞ்சமாக” முன்னேற்றினீர். உமக்கு நன்றி. ஆமென்.
Scripture
About this Plan
ஜாய்ஸ் மரின் நகடமுகற மவதபாட மபாதகனயுடன் உங்கள் நாகைத் ததாடங்குங்கள் .இப்படிப்பட்ட தினசரி பக்திக்கான மவத பாடங்கள் உங்களுக்கு நம்பிக்கககத் தரும், உங்கள் னகதப் புதுப்பிக்க உதவுகிறது ற்றும் ஒவ்தவாரு நாளும் நீங்கள் மநாக்கத்துடனும் ஆர்வத்துடனும் வாழ முடியும் ன்பகதக் கண்டறி உதவுகிறது!
More