YouVersion Logo
Search Icon

மனதின் போர்களம்Sample

மனதின் போர்களம்

DAY 16 OF 100

ஆக்கினைத் தீர்ப்பில்லை

“அவன் எந்த விதத்திலும் எனக்கு ஏற்றவன் இல்லை என்று எனக்கு தெரியாமல் போய்விட்டதே,” என்று புலம்பினாள், சிண்டி. திருமணமாகி இரண்டு ஆண்டுகள் முழுவதும் அடித்து, இழிவான வார்த்தைகளைப் பேசி, அவளை விட்டு விட்டு, வேறொருத்தியுடன் சென்று விட்டான் அவள் கணவன். அவளுக்கு இப்போது இரண்டு மடங்கு - குற்றம் செய்தது போன்ற உணர்வு. அவனைத் திருமணம் செய்தது ஒன்று, அந்தத் திருமண வாழ்க்கையை காப்பாற்றிக்கொள்ள முடியாத அவளுடைய நிலை, மற்றொன்று.

“நான் மட்டும் ஒரு நல்ல கிறிஸ்தவனாக இருந்திருந்தால், அவனை மாற்றி இருப்பேனே,” என்று துக்கத்துடன் சொன்னாள்.

நான் உடனே, “ஆமாம், உனக்குத்தான் வெளிப்படையாகத் தெரிந்ததே அவன் ஏற்றவன் இல்லை என்று, பின்பு ஏன் அதை அலட்சியப்படுத்தினாய்? நீயே தான் இப்படிப்பட்ட நிலைமைக்கு உன்னைத் தள்ளிவிட்டாய்” என்று நான் சொல்லியிருக்கலாம். ஆனால் சொல்லவில்லை. ஏனெனில், அந்த வார்த்தைகள் அவளுக்கு உதவியாயிருக்க முடியாது.

அவளுக்கு அந்த நேரத்தில் தேவைப்பட்டது, என்னுடைய கரத்தை நீட்டி, அவளை அரவணைத்து ஆறுதல் சொல்வது தான். அவள் அதிக குற்ற உணர்வினால் தாக்கப்பட்டவளாக “என்னை ஆண்டவர் மன்னிப்பாரா?” என்று என்னைப் பார்த்துக் கேட்டாள்.

முதலில் அவள் கேள்வி என்னை வேதனைப்படுத்தியது. தேவன் எந்த பாவத்தையும் மன்னிக்கிறவர் என்று வேதம் கூறுகிறது. சிண்டி, வேதாகமத்தை நன்கு அறிந்தவள்; அவளுடைய கேள்வி வேதவசனத்தை அறியாததினால் எழுந்ததல்ல; அன்பான, கரிசனையுள்ள தேவன் பேரில் உள்ள விசுவாசக் குறைவினால் ஏற்பட்ட கேள்வியாகும். அவள் மிகவும் விரக்தியடைந்திருந்தாள். தன்னை மன்னிக்கும் அளவுக்கு தேவன் தன்னை நேசிக்கிறாரா என்று அவளுக்குத் தெரியவில்லை.

தேவன் உன்னை மன்னிப்பார் என்று உறுதியாக அவளுக்குக் கூறினேன். சிண்டிக்கு அதுவல்ல பிரச்சனை. அவள் வேண்டுமென்றே ஆண்டவருக்குக் கீழ்ப்படியாமல், அவரை விட்டுக்கொடுத்துவிட்டாள் என்றும் ; அதனால் தான் தேவன் அவள்மேல் கோபமாயிருக்கிறார் என்றும் பிசாசானவன் தொடர்ந்து அவள் மனதில் சொல்லிக்கொண்டிருந்தான்.

சமயம் கிடைக்கும்போதெல்லாம், பிசாசு நம்மை நிறுத்த முயற்சிப்பான். ஒரு குழந்தை நடக்க முயற்சிக்கும் உதாரணத்தை, நான் அடிக்கடி சொல்லுவதுண்டு. குழந்தை பிறந்த முதல் நாளே அது நிற்க வேண்டும். நின்றவுடன், குறுக்கும் நெடுக்குமாக ஒரு அறையில் பெரியவர்களைப் போல் நடக்க வேண்டும் என்று நாம் எதிர்பார்க்க முடியாது. சிறிய குழந்தைகள் அடிக்கடி கீழே விழும். சில நேரங்களில் அழும், ஆனால் மறுபடியும் எழுந்து விடும். அது அப்படிச் செய்வது, ஒருவேளை பிறக்கும் போதே இயல்பாக உள்ள சுபாவமாக இருந்தாலும், நான் என்ன நினைக்கிறேன் என்றால், ஒருவேளை அதன் பெற்றோர் “உன்னால் முடியும்: வா, எழுந்து நட,” என்று சொல்லியிருக்கலாம்.

ஆவிக்குரிய உலகிலும் இதே காட்சி தான். நாம் அனைவரும் விழுகிறோம், நாம் உற்சாகப்படுகிறோம், உடனே எழுந்து நடக்க முயற்சிக்கிறோம். நாம் உற்சாகப்படுத்திக்கொள்ளவில்லையென்றால், கீழேயே கிடக்க வாய்ப்பு உண்டு. அல்லது திரும்பி எழும்புவதற்கு, ஒருவேளை நிறைய நாட்களாகலாம்.

சாத்தானின் குறையாத சீற்றத்தை ஒரு போதும் நாம் தவறாக எடைபோட்டு விடக்கூடாது. நீங்கள் திரும்பவும் எழும்ப முடியாத அளவுக்கு உங்களைத் தடுக்கி விழச்செய்து, உங்களைக் குற்ற உணர்வுக்குள்ளாக்க, எதை வேண்டுமானாலும் அவன் செய்வான். தவறான சிந்தனைகளை தள்ளிவிட்டு, நீங்கள் சரியாக சிந்திக்க ஆரம்பித்தவுடனேயே, அவனுடைய ஆதிக்கம் முடிந்தது என்று அறிந்துகொள்வான். தெளிவாக நீங்கள் சிந்திப்பதை தடுப்பான். சோர்வு, குற்ற உணர்வு ஆகியவைகளினால் உங்களைத் தோற்கடிக்க முயற்சி செய்வான்.

சிண்டி என்ன செய்தாள் என்று நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். ரோமர் 8:1 ஆம் வசனத்தை 3 ஒ 5 பெரிய அட்டைகளில் எழுதி, தன் முகம் பார்க்கும் கண்ணாடி, தன்னுடைய கம்ப்யூட்டர், தன்னுடைய காரின் முன்பகுதி என இப்படிப்பட்ட இடங்களில் ஒட்டினாள். அவளுக்கு முன் அந்த வசனத்தைப் பார்க்கும் போதெல்லாம், அதை சத்தமாக மறுபடியும், மறுபடியும் சொல்லுவாள். “ஆனபடியால், கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத் தீர்ப்பில்லை”.

ரோமர் 8:1,2ஐ ஒரு ஆங்கில மொழிபெயர்ப்பு இப்படியாகக் கூறுகிறது: “மேசியாவாகிய, இயேசுவின் வருகையினால் இந்தக் குழப்பத்திற்கு ஒரு முடிவு கட்டப்பட்டு விட்டாயிற்று. இயேசு கிறிஸ்து நமக்காக வந்திருக்கிற படியால் நாம் தொடர்ந்து கார்மேகம் போன்ற சூழ்நிலையில் இருக்க வேண்டிய அவசியமில்லை. ஒரு புதிய வல்லமை நமக்காகக் கிரியை செய்கிறது. கிறிஸ்து இயேசுவினாலே, ஜீவனுடைய ஆவியின் பிரமாணம், ஒரு பலத்த பெருங்காற்றைப்போல, பாவம், மரணம் என்பவைகளின் கொடூரமான கைகளிலிருந்து விடுவித்து, அற்புதமாக தெளிவுக்குள் நம்மை நடத்தியிருக்கிறது.

கிறிஸ்துவுக்குள் நாம் விடுதலையடைந்த வர்களாயிருக்கிறபடியால், பிசாசினுடைய ஆக்கினைத்தீர்ப்பை நாம் இனிமேலும் கவனிக்கவேண்டிய அவசியமில்லை. நாம் தவறும் போது - நாம் தவறு செய்துவிட்டாலும், நாம் தோற்றுப்போனவர்கள் என்று அர்த்தமாகாது. நாம் ஒரு முறை ஒரு காரியத்தில் தவறினோம் என்பது தான் அதின் பொருள். எல்லாவற்றையும் நாம் சரியாகச் செய்யவில்லை என்று தான் அர்த்தம். அது நம்மைத் தோற்றவர்களாக்கிவிட முடியாது.

“உங்கள் பெலவீனத்தில் கிறிஸ்து உங்கள் பெலமாக இருக்க அனுமதியுங்கள். உங்கள் பெலவீன நாட்களில், அவரே உங்கள் பெலனாக விளங்கட்டும்.”


ஆண்டவராகிய என் தேவனே, உம்முடைய நாமத்தில் வெற்றிக்காக ஜெபிக்கிறேன். நான் தவறும் போது, நீர் என்னை மன்னிக்கிறவர் மட்டுமல்ல. என்னுடைய தவறுகளையும், குற்ற உணர்வுகளையும் அழித்து, மறந்து விட்டீர் என்பதை எனக்கு நினைவுப்படுத்தும். என்னுடைய நன்றியை ஏற்றுக்கொள்ளும். ஆமென்.

Scripture

Day 15Day 17

About this Plan

மனதின் போர்களம்

ஜாய்ஸ் ம஫஬ரின் நகடமுகற மவதபாட மபாதகனயுடன் உங்கள் நாகைத் ததாடங்குங்கள் .இப்படிப்பட்ட தினசரி பக்திக்கான மவத பாடங்கள் உங்களுக்கு நம்பிக்ககக஬த் தரும், உங்கள் ஫னகதப் புதுப்பிக்க உதவுகிறது ஫ற்றும் ஒவ்தவாரு நாளும் நீங்கள் மநாக்கத்துடனும் ஆர்வத்துடனும் வாழ முடியும் ஋ன்பகதக் கண்டறி஬ உதவுகிறது!

More