YouVersion Logo
Search Icon

மனதின் போர்களம்Sample

மனதின் போர்களம்

DAY 18 OF 100

எனது உணர்வுகள்

“என் உணர்வுகளை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை”, என்று ஆன்ஜி புலம்பினாள்.

நாமும் இதை அநேக முறை கேட்டிருப்போம். இதன் பொருள் என்னவென்றால், ஒரு நபர் தன் மனதில் என்ன நினைக்கிறாரோ, 

அவருடைய நினைவு அல்லது உணர்வின் அடிப்படையில் தான் அவருடைய செயல்பாடும் இருக்கும். இது ஒரு மாற்றமுடியாத வாழ்க்கைத் தத்துவம்.

நம் அனைவருக்குமே உணர்வுகள் உண்டு. சில நேரங்களில் அவை நமக்குள் பலமாக இருக்கும், அதினால் நாம் குழம்பிவிடுவோம். நம்முடைய உணர்வுகள் நம்முடைய தீர்மானங்களை நிர்ணயிக்க இடம் கொடுக்கும் போது, அவை நம் முடிவையே நிர்ணயித்து விடுகின்றன. நம் மனதில், நாம் சோர்ந்து போய் இருப்பதாக உணர்ந்தால், உடனே நாம் சோர்வடைந்து விடுகிறோம். நாம் வெற்றி பெறுகிறோம் என்று உணர்ந்தால், நாம் வெற்றி பெற்றுவிடுகிறோம். நம்முடைய மனதில் சோர்வான உணர்வுகள் வந்தால், நாம் கட்டாயமாக சோர்வடைந்து தான் ஆக வேண்டும் என்று இது அர்த்தமாகிறது.

“என் உணர்வுகள் வெறும் மனக்கிளர்ச்சிகள். அவை நிஜமல்ல”. 

வேறு வார்த்தையில் சொல்ல வேண்டுமானால், நாம் ஒரு விதமாக உணருகிறோம் என்றாலும், அந்த உணர்வுகள் நிஜமல்ல. நாம் அப்படி உணர்ந்தாலும், நம் உணர்வுகளை அடக்கி அதற்கப்பால் கடந்து செல்ல நமக்குத் தெரிய வேண்டும்.

ஒருவேளை இந்த உதாரணம் நமக்கு மேலும் தெளிவை அளிக்கும். ஜானட் ஒரு ரியல் எஸ்டேட் விற்பனையாளர். முந்தின மாதம் ஐந்து வீடுகளை விற்றாள். அவளுக்கு நல்ல கமிஷன் கிடைத்தது. அவள் இப்படி விற்று பணம் வரும்போதெல்லாம், அவளுக்குள், மிகவும் அற்புதமான, ஒரு வெற்றிப்பெற்று விட்டோம் என்ற உணர்வு. ஆனால் இந்த மாதம் ஒரே ஒரு வீட்டைத்தான் விற்க முடிந்தது. அதனால் அவள் தோல்வியடைந்து விட்டது போல் உணர்ந்தாள். ஜானட் தோற்றுப்போய்விட்டாளா? இல்லை. இது ஒரு மந்தமான நாட்கள், அவ்வளவுதான். ஆனால், அவளோ, அப்படி தோற்றுப்போய்விட்டதாக உணர்ந்தாள். அதனால், அது உண்மையான நிலை என்று அர்த்தமாகாது.

ஒரு வேளை, இன்று என் வாழ்வில் தேவன் கிரியை செய்யவில்லை என்பதை போல் உணரலாம். அது தான் நான் நினைக்கும் விதமா? அநேகர், தேவன் தங்களை நேசிக்கவில்லை என்பதைப்போல் உணருகின்றனர் - இது அவர்களுடைய உணர்வு தானே தவிர, இது உண்மையல்ல.

பிசாசு பெரும்பாலும் இதில் வெற்றி பெறுகிறான். நாம் என்ன உணருகிறோமோ அது தான் உண்மை என்று நம்ப வைத்து, பிசாசு நம்மை தோற்கடித்து விடுவான். 

பல ஆண்டுகளுக்கு முன், நான் ஒரு சபையில் செய்திகொடுத்தேன். அநேகர் வந்து என் செய்தி நன்றாக இருந்தது என்று சொன்னார்கள். அது எனக்கு மிகவும் உற்சாகம் அளித்தது. எனக்கு ஒரே சந்தோஷம், ஏனென்றால் அது நான் ஊழியம் செய்ய ஆரம்பித்த நாட்கள் அவை. என்னை உற்சாகப்படுத்துவோர் அதிகம் தேவைப்பட்ட நாட்கள். ஒருவர் மட்டும் என்னிடம் வந்து இப்படி சொன்னார். “நீங்கள் சொன்ன எதையும் நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். உங்கள் உபதேசத்தை சரியாக மாற்றிக் கொள்ளுங்கள்”, என்று சொல்லிவிட்டு போய்விட்டார்.

உடனடியாக சோர்வு, அதைரியம் என்னை மேற்கொண்டன. தேவனுடைய கரத்தில், மக்களுக்கு ஒரு கருவியாக இருக்க, நான் எவ்வளவு கடினமாக முயன்றேன். ஆனால் தோல்வியடைந்து விட்டேன். நான் அந்த ஆலயத்தை விட்டு வெளியே வரும் போது, யோசித்துக்கொண்டே வந்தேன். ஏறக்குறைய ஐம்பது பேராவது என்னுடைய செய்தி அவர்களுக்கு ஆசீர்வாதமாக இருந்தது என்று சொன்னார்கள். ஆனால், ஒரே ஒரு மனிதர் மட்டும் பிற்போக்கான காரியத்தை என்னிடம் வந்து சொன்னார். நான் அதற்கு எவ்வாறு செயல்பட்டேன்? நான் இந்த ஒரே ஒரு மனிதர் சொன்ன வார்த்தைகளை மட்டும் தான் நம்பினேன். என்னுடைய சிந்தனையையே அது மாற்றிற்று. உடனே நான் தோல்வியடைந்து விட்டேன் என்று நம்பினேன்.

நான் தோல்வியடையவில்லை. ஒரு தவறான குரலை கேட்டு, 

அந்த வார்த்தைகள் என் உணர்வுகளை பாதிக்க இடமளித்து விட்டேன். இனிமேல் எந்த ஒரு பிற்போக்கான காரியமும் என்னை சோர்ந்து போக தோல்வி உணர்வுக்குள்ளாக்க நான் அனுமதிக்க மாட்டேன் என்று தீர்மானம் பண்ணினேன். ஒருவேளை, அந்த மனிதனுக்கு நான் உதவி செய்ய தவறியிருக்கலாம் - அதைக் குறித்தும் என்னால் ஒன்றும் செய்யமுடியாது. ஆனால், என்னுடைய போதனைகள் மற்ற அநேகரைத் தொட்டது. “எனக்கு தேவையான சரியான வார்த்தைகளை கொடுத்தீர்கள்” என்று ஒரு பெண், கண்ணீரோடு என்னிடம் சொன்னாள்.

அன்றிரவே, நான் ஒன்றை ஞாபகப்படுத்திக் கொண்டேன். 

நான் அனுபவித்தது ஒரு பிற்போக்கான உணர்வு மட்டுமே, அது ஒரு உண்மையான காரியமல்ல. நிறைய வேத வசனங்களை எனக்குள்ளாகச் சொல்ல ஆரம்பித்தேன். நாம் எங்கு பலவீனமாக, புண்பட்டவர்களாக இருக்கிறோம் என்பதை அறிந்து, சாத்தான் நம்மை, வாழ்க்கையின் அந்த பகுதியில்தான் தாக்க வருவான். மேடையேறி பேசுவது எனக்கு ஒரு புது அனுபவம். அதை அந்த மனிதர் அறிந்திருந்தார். 

ரோமர் 10:9,10 ஆகிய வசனங்களை நினைவு கூர்ந்தேன். 

இரட்சிப்பைக் குறித்து பேசும் போது உபயோகிக்கும் வசனமாக இது இருந்தாலும், அதன் கருத்து என்ன என்று பவுல் கூறுகிறார். இருதயத்தில் நாம் எதை விசுவாசிக்கிறோமோ அதை வாயினால் அறிக்கை செய்யவேண்டும். நான் நிறுத்தி, அதே வேளையில் சத்தமாக சொன்னேன். “தேவனே, நான் உம்முடைய ஊழியத்தை செய்கிறேன் என்று விசுவாசிக்கிறேன். உமக்காக நான் சிறந்த முறையில் வேலை செய்கிறேன் என்று நம்புகிறேன். நீர் என் வாயிலிருந்து வந்த உம்முடைய வார்த்தையினால் அநேகரை ஆசீர்வதித்தீர் என்றும் விசுவாசிக்கிறேன். அந்த ஒரு மனிதனின் பிற்போக்கான குரலை நான் கேட்க வேண்டிய அவசியமில்லை என்று நினைக்கிறேன்”. 

ஒரு சில நிமிடங்களில், நான் எனக்குள் மாற்றத்தை அனுபவித்தேன். (நம்முடைய உணர்வுகளில் எப்படி ஒரு மாற்றம் பாருங்கள்?) நிஜமான காரியம் மாறவில்லை, நான் தான் தவறான, பிற்போக்கான எண்ணங்களை மாற்றிக்கொண்டு விட்டேன்.


அன்பும், கரிசனையுமுள்ள தேவனே, நான் தவறான எண்ணங்களுக்கு இடம் கொடுத்து, தவறான உணர்வுகளை உணர்ந்து, அந்த உணர்வு என் செய்கையை தீர்மானிக்க அனுமதித்ததற்கு என்னை மன்னியும். உம்முடைய வார்த்தையை மட்டும் நான் விசுவாசித்து, சரியான முற்போக்கான எண்ணங்களை மட்டும் என் மனதில் அனுமதிக்க உதவி செய்யும் என்று இயேசுவின் நாமத்தில் கேட்கிறேன். ஆமென்.

Day 17Day 19

About this Plan

மனதின் போர்களம்

ஜாய்ஸ் ம஫஬ரின் நகடமுகற மவதபாட மபாதகனயுடன் உங்கள் நாகைத் ததாடங்குங்கள் .இப்படிப்பட்ட தினசரி பக்திக்கான மவத பாடங்கள் உங்களுக்கு நம்பிக்ககக஬த் தரும், உங்கள் ஫னகதப் புதுப்பிக்க உதவுகிறது ஫ற்றும் ஒவ்தவாரு நாளும் நீங்கள் மநாக்கத்துடனும் ஆர்வத்துடனும் வாழ முடியும் ஋ன்பகதக் கண்டறி஬ உதவுகிறது!

More