மனதின் போர்களம்Sample
முற்போக்கான சிந்தனைகள்
சில நேரங்களில் நான் பிரசங்க பீடத்தின் பின்னால் நின்று, பேச தொடங்குவதற்கு முன், கொஞ்சம் நின்று எனக்கு முன் அமர்ந்திருக்கும் மக்களின் முகத்தைப் பார்ப்பதுண்டு. அநேகர் சிரித்த முகத்துடன், முகத்தில் சந்தோஷத்தை பிரதிபலிக்க அமர்ந்திருப்பதை பார்க்க எனக்கு ஆசை, ஆனால், ஒரு சிலர், எப்போதுமே முகத்தில் சோர்வோடு, வேதனையுடன் இருப்பதையும் பார்ப்பேன். நான் அவர்களைக் குறித்து எதுவும் நியாயந்தீர்க்கவில்லை. ஆனால், அவர்கள் முகங்கள் சோகத்துடன் காணப்படுகின்றன. நம்பிக்கை இழந்தவர்களை போலவும், தங்களுக்கு எதுவும் நடக்காது என்பது போல் எதிர்பார்த்து அமர்ந்து இருந்தனர். அவர்கள் எதை எதிர்பார்த்து அமர்ந்திருக்கின்றனரோ, சரியாக அதையே பெற்றுக் கொள்ளுகின்றனர்.
சோர்வுற்று, அதைரியப்பட்டிருக்கும் அந்த மக்களை, நான் நன்கு புரிந்து வைத்திருக்கிறேன். ஏனென்றால், நானும் ஒரு காலத்தில் அவர்களில் ஒருத்தியாக இருந்தேன்.
நான் கற்ற ஓர் எளிய உண்மை என்னவென்றால், முற்போக்கான சிந்தனைகள், முற்போக்கான வாழ்வை பிறப்பிக்கும். ஆனால், பிற்போக்கான சிந்தனைகளோ, பிற்போக்கான வாழ்வைத்தான் பிறப்பிக்கும். புதிய ஏற்பாட்டிலே ஒரு ரோம நூற்றுக்கு அதிபதியின் சம்பவத்தில் நாம் இதைக்காணலாம். அந்த நூற்றுக்கு அதிபதியின் வேலைக்காரன் வியாதியாயிருந்தான். நூற்றுக்கு அதிபதி, இயேசு தன் வேலைக்காரனை சுகப்படுத்த வேண்டும் என்று விரும்பினான். அநேகர் இயேசுவிடம் சுகத்திற்காக ஓடி வந்தனர். அதனால், இது ஒன்றும் புதிதல்ல. ஆனால் இந்த நூற்றுக்கு அதிபதியோ, இயேசு வந்து வேலைக்காரனை சுகப்படுத்த வேண்டும் என்று சொல்லாமல், “ஒரு வார்த்தை மாத்திரம் சொல்லும், என்னுடைய வேலைக்காரன் சொஸ்தமாவான்”, என்று சொன்னான் (மத்தேயு 8:8). இயேசு இதைக் கேட்டு, ஆச்சரியப்பட்டு, தமக்கு பின் செல்லுகிறவர்களை நோக்கி: இஸ்ரவேலருக்குள்ளும் நான் இப்படிப்ப்பட்ட விசுவாசத்தை காணவில்லை என்று, மெய்யாகவே உங்களுக்கு சொல்லுகிறேன் என்றார். அந்த நூற்றுக்கு அதிபதியின் முற்போக்கான சிந்தனை - அவன் விசுவாசம் - நல்ல பதிலை கொண்டு வந்தது. அவன் தன் வேலைக்காரன் சுகம் பெறுவான் என்று எதிர்பார்த்தான். அப்படியே நடந்தது.
நாமும், நிறைய நேரங்களில் இயேசு நம்மை சுகமாக்க வேண்டும்,
நம்முடைய பொருளாதார தேவைகளை பொறுப்பேற்க வேண்டும், நம்முடைய பிரச்சனைகளிலிருந்து நம்மை விடுவிக்க வேண்டும் என்று விரும்புவோம். ஆனால், அவை சம்பவிக்க வேண்டும் என்று முழு மனதோடு எதிர்பார்ப்பதில்லை. நம்முடைய சிந்தனை, பிற்போக்கான எண்ணங்களை எண்ணுவதற்கு நாம் விட்டுவிடுகிறோம். சந்தேகமும், அவிசுவாசமும், ஒன்றொடொன்று போட்டியிட்டு, நாம் இவைகளை அனுமதிப்பதின் விளைவாக, நம் விசுவாசத்தை திருடிவிடும்.
“மனதின் போர்களம்” என்ற என்னுடைய புத்தகத்தில் நான் எழுதியபடியே, அநேக ஆண்டுகளுக்கு முன், நான் ஒரு தீவிர பிற்போக்கு சிந்தனையுடையவளாய் இருந்தேன். இரண்டு முற்போக்கு எண்ணங்கள் அடுத்தடுத்து என் மனதில் வந்தால், மிகவும் நெரிசலாகி விடும் என்று சொல்லுவேன். அது நான் மிகைப்படுத்தி கூறும் ஒன்றாகும். ஆனால், அப்படித்தான் நான் என்னைப் பார்த்தேன். மற்றவர்கள் எப்படிப்பட்ட வேதாந்தத்துடன் வாழுகிறார்களோ, நானும் அப்படியேதான் வாழ்ந்தேன். நல்லது நடக்கும் என்று நாம் எதிர்பார்க்காவிட்டால், அது நடக்காத பட்சத்தில் நாம் ஏமாந்து போகமாட்டோம்.
நான் என்னுடைய ஏமாற்றங்களினால் தான், இப்படி பிற்போக்கு சிந்தனைகள் நிறைந்தவளாக இருக்கிறேன் என்று மற்றவர்களிடம் சாக்கு சொல்லியிருக்க முடியும். எனக்கு ஏமாற்றங்கள் நிறைய இருந்தன. நான் அவற்றை எதிர்பார்க்காததால் அல்ல, அதற்கும் மேலாக நான் பிற்போக்காக எப்பொழுதும் பேசினேன், சிந்தித்தேன். மற்றவர்கள், அவர்களுடைய ஆவிக்குரிய வாழ்க்கையின் வெற்றிகளைக் குறித்து சொல்லும் போது; அது நிலைக்காது என்று நான் நினைப்பேன். விசுவாசத்தைக் குறித்து மற்றவர்கள் என்னிடம் பேசும் போது, வெளியே அவர்களைப் பார்த்து சிரிப்பேன். ஆனால், அவர்கள் என்னை ஏமாற்றுகிறார்கள் என்று எனக்குள்ளாக நான் நினைப்பேன். நான் எப்பொழுதும் என் திட்டங்கள் எப்படி தவறிப்போகும், மற்றவர்கள் என்னை எப்படி ஏமாற்றுவார்கள் என்பதையே நினைத்துப் பார்த்துக்கொண்டிருப்பேன்.
நான் சந்தோஷமாக இருந்தேனா? இல்லை. இப்படி பிற்போக்கு சிந்தனைகளை உடையவர்கள் சந்தோஷமாக இருக்கவே முடியாது.
நான் இவையெல்லாவற்றையும் விட்டு எப்படி ஒரு உண்மையான மனுஷியாக மாறினேன் என்று சொல்ல வேண்டுமானால், அது ஒரு பெரிய கதை. ஆனால் நான் எப்படிப்பட்ட பிற்போக்கான மனுஷி என்பதை உணர்ந்து, அறிந்த மாத்திரத்திலேயே, கர்த்தாவே எனக்கு உதவி செய்யும் என்று கதறினேன்.
கர்த்தருடைய வார்த்தையை நான் படித்துக்கொண்டேயிருந்ததால், பிற்போக்கான சிந்தனைகளை, எப்படி தள்ளலாம் என்று கற்றுக்கொண்டேன். கர்த்தருடைய வார்த்தை, முற்போக்கானதும், நம்மை உயர்த்துகிறதுமாய் இருக்கிறது. என்னுடைய சிந்தனையினாலும், செயலினாலும் தேவனை கனப்படுத்தும், ஒரு விசுவாசியாக இருப்பது தான் என்னுடைய பொறுப்பு.
சங்கீதம் 51ஆம் அதிகாரத்தை எழுதும் போது, தாவீது தன் தவறுகளுக்காக வருந்தி எழுதியிருக்கிறார் என்று உணர்ந்தேன். “தேவனே, உமது கிருபையின்படி எனக்கு இரங்கும், உமது மிகுந்த இரக்கங்களின்படி... இப்படித்தான் தொடங்குகிறார். 9ஆம் வசனத்தை நான் குறிப்பாக தியானித்தேன். என் பாவங்களை பாராதபடிக்கு நீர் உமது முகத்தை மறைத்து, என் அக்கிரமங்களையெல்லாம் நீக்கியருளும்”. நான் தாவீது செய்தது போல ஒருவேளை பாவம் செய்யவில்லை. ஆனால், என்னுடைய பிற்போக்கான சிந்தனைகளும், அதன் அடிப்படையில் தவறாக செயல்பட்டதுமே பாவமாகும். அது ஏதோ ஒரு பெலவீனம், அல்லது கெட்ட பழக்கம் அல்ல. என்னுடைய மனதை பிற்போக்காக சிந்திக்க அனுமதித்தபோது, தேவனுக்கு எதிர்த்து போராடுவது போல இருந்தது.
தேவன் என் மேல் இரக்கம் காண்பித்தார். வேதத்தை வாசித்து,
தொடர்ந்து நான் ஜெபித்தபோது, பிசாசின் அரண்களிலிருந்து என்னை விடுவித்தார்.
விடுதலை என்பது, நாம் அனைவருக்கும் பெறக்கூடிய ஒன்றாக இருக்கிறது.
கிருபையுள்ள தேவனே, என்னுடைய வாழ்க்கையில் ஒவ்வொரு விடுதலைக்காகவும் உமக்கு நன்றி. பிற்போக்கான தவறான சிந்தனைகளிலிருந்து என்னை விடுவித்ததற்காக உமக்கு நன்றி. என்னுடைய வாழ்க்கையின் இந்தப் பகுதியில், பிசாசை நீர் தோற்கடித்ததற்காக உமக்கு நன்றி. ஆமென்.
Scripture
About this Plan
ஜாய்ஸ் மரின் நகடமுகற மவதபாட மபாதகனயுடன் உங்கள் நாகைத் ததாடங்குங்கள் .இப்படிப்பட்ட தினசரி பக்திக்கான மவத பாடங்கள் உங்களுக்கு நம்பிக்கககத் தரும், உங்கள் னகதப் புதுப்பிக்க உதவுகிறது ற்றும் ஒவ்தவாரு நாளும் நீங்கள் மநாக்கத்துடனும் ஆர்வத்துடனும் வாழ முடியும் ன்பகதக் கண்டறி உதவுகிறது!
More