மனதின் போர்களம்Sample
சகலமும் நன்மைக்கேதுவாக
யோவான் 3:16 க்கு அடுத்ததாக ரோமர் 8:28ஐ தான் அநேகமாக, விசுவாசிகள் மேற்கோள்காட்டி உபயோகப்படுத்தும் வேத வசனமாக இருக்கும். நம்முடைய கஷ்டமான சூழ்நிலைகளில், பவுலின் வார்த்தைகள் நமக்கு ஆறுதலையும், சமாதானத்தையும் தரக்கூடியவைகளாய் இருக்கிறது. என்னதான் ஏமாற்றங்கள், வேதனைகள் நம்முடைய வாழ்க்கையில் வந்தாலும், இந்த வசனம் நமக்கு ஒரு நம்பிக்கையைத் தந்து, சகலமும் நன்மைக்கேதுவாக நடக்கும் என்று கூறுகிறது.
ரோமர் 8:28ற்கு முந்தின இரண்டு வசனங்கள், ஜெபத்தைக் குறித்து சொல்லுகின்றன. நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ள வேண்டியதின்ன தென்று அறியாமலிருக்கிறபடியால், பரிசுத்த ஆவியானவர் நம்முடைய உதவிக்கு வந்து, நம்மூலமாய் ஜெபிக்கிறார். இப்படிப்பட்ட, ஆவியினால் நிறைந்து ஜெபிக்கிற ஜெபங்கள் மூலமாகத்தான் சகல காரியங்களும், அது எப்படிப்பட்ட காரியமாக இருந்தாலும், நன்மையாக முடியும். நம்முடைய வாழ்க்கையில், நமக்கு நடக்கிற எல்லாக் காரியங்களுமே தன்னில் தானே நன்மையானதாக இருப்பதில்லை. நாம் தேவனை விசுவாசிக்கும்போது, அவர் நல்லவராக இருப்பதினால், அந்த காரியங்களை நமக்கு நன்மைக்கேதுவாக மாற்றுகிறார்.
வேதனையான, அநியானமான சந்தர்ப்பங்களிலும் தொடர்ந்து நாம் தேவனை பற்றிக்கொள்வதுதான், நம்முடைய வெற்றிக்கு திறவுகோலாக இருக்கிறது. விசுவாசமும், ஜெபமும் தேவனுடைய கரத்தை அசைக்கும். நாம் தொடர்ந்து விசுவாசித்தால், அவர் தொடர்ந்து நமக்காக கிரியை செய்ய வாக்களித்திருக்கிறார். அதுவும், நம்முடைய நன்மைக்கேதுவாக.
அவர்மேல் அன்புகூருகிறவர்களுக்கும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களுக்கும் இந்த வாக்குத்தத்தத்தை தேவன் தந்திருக்கிறார். நாம் தேவனை நம்முடைய முழு இருதயத்தோடு அன்புகூர வேண்டும், அவருடைய சித்தத்தை நாம் விரும்பவேண்டும். அவருடைய திட்டத்திற்கு நம்மை அர்ப்பணிக்க எப்பொழுதும் ஆயத்தமாக இருக்கவேண்டும்.
தேவன் நமக்கு வைத்திருக்கிற திட்டமானது, முடிவில் நம்மை அவருடைய சாயலுக்கு ஒப்பாக மாற்றிவிடுகிறது. இது ஆவிக்குரிய ரீதியாக சொல்வது போல் இருந்தாலும், நிஜ வாழ்வில் இது கஷ்டமாக இருக்கும். களிமண் எப்படி உருவங்களாக வனையப்படுகிறது என்று நான் அடிக்கடி யோசிப்பேன். அந்த களிமண்ணுக்கு மட்டும் உயிர் இருந்தால் எப்படி இருக்கும்? முழுவதும் வேறு ஒரு வடிவத்தில் மாற்றப்படுவது எவ்வளவு கஷ்டமாக இருக்கும். ஒரு கை நிறைய களிமண்ணை எடுத்து, ஒரு அச்சிலே வைத்து அழுத்தினால், அதிகமாக இருக்கும் களிமண்ணை நாம் இங்கும் அங்குமாக எடுக்கவேண்டியதாக இருக்கும். இயேசு கிறிஸ்துவைப் போல, அவர் சாயலில் நான் சரியாக வளருவதற்கு, என்னிடத்தில் தேவையற்ற காரியங்கள் நிறைய இருப்பதை உணர்ந்தேன். என்னுடைய சிந்தனைகள், வார்த்தைகள், செயல்பாடுகள் ஆகியவைகளில் உள்ளத் தேவையற்ற காரியங்களை எடுத்துவிடவேண்டியதாயிருந்தது.
நாம் கடினமான சூழ்நிலைகள் வழியாக கடந்து சென்று, இயேசு இந்த சூழ்நிலையில் எப்படி செயல்படுவார் என்று கற்றுக்கொள்ளவேண்டும். நம்மை வந்து தாக்கும் பயமான சிந்தனைகள் மற்றும் உணர்வுகளுக்கு இடம் கொடுக்கக்கூடாது. காரியம் எப்படி இருந்தாலும் சரி, தேவன் அதை எனக்கு நன்மையாக மாற்றுவார் என்ற உறுதி நமக்கு இருக்கவேண்டும். நன்மையாக மாற்றுவதோடல்லாமல், அச்சூழ்நிலைகளைப் பயன்படுத்தி நம்மையும் அவைகளுக்கு மேலானவர்களாக மாற்றுவார்.
நமக்கு சம்பவிக்கும் காரியங்கள் மூலமாக, நாம் அதிகமாக இயேசுவைப் போல மாறவேண்டும் என்பதே, தேவனுடைய நோக்கமாக இருக்கிறது. இயேசுவானவர் முற்றிலும் கீழ்படிந்தவராக இருந்தார். “அவர் குமாரனாயிருந்தும் பட்ட பாடுகளினாலே கீழ்படிதலைக் கற்றுக் கொண்டு...” (எபிரயெர் 5:8).
நாமும், நாம் படுகின்ற கஷ்டங்கள் மூலமாக கற்றுக்கொள்கிறோம். தேவனுடைய வார்த்தையின் மூலமும், நம்முடைய வாழ்க்கையின் அனுபவங்கள் மூலமும் கற்றுக்கொள்கிறோம். நம்முடைய பாவ சுபாவத்தினால், தேவனுடன் ஒவ்வொரு முறையும் வாதாடுகிறோம். அதன் விளைவாக, நாம் தேவனைப்போல மாறுவதைத் தாமதப்படுத்தி, இன்னும் அதிக வேதனையடைகிறோம். இதற்கு மாறாக, நாம் உடனே அர்ப்பணிக்கக் கற்றுக்கொண்டால், அநேக வேதனைகளில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம். கடைசியில் அவர்தான் ஜெயிக்கப்போகிறார். நாம் ஏன் வீணாக இழுத்துப்பிடித்து நாட்களை அதிகமாக்கவேண்டும்?
மனம் போகும் போக்கிலே மனிதன் செல்லுவான். உங்கள் மனதை சரியானத் திசையிலே செலுத்தினால், உங்கள் வாழ்க்கையும் சீரானதாக இருக்கும். எந்த ஒரு மனுஷன் தேவன்மேல் உறுதியான விசுவாசத்தை வைத்திருக்கிறானோ, அவன் தோற்றுப்போவதில்லை. வேதம் சொல்லுகிறது, யோசேப்பை அவனுடைய சகோதரர்கள் வெறுத்தனர், ஆனால் கர்த்தர் அவனோடிருந்தார். தேவன் அவனுக்கு தயை கிடைக்க செய்து உயர்த்தினார். அவன் தேவன்மேல் கொண்ட விசுவாசத்தினால், அவனை, அவனுடைய சூழ்நிலைகளின் மத்தியிலும் அவர் உயர்த்தினார்.
சில பயங்கரமான காரியங்கள் யோசேப்புக்கு சம்பவித்தது. அவன் சகோதரர் அவனை அடிமையாக விற்றுவிட்டு, தங்கள் தகப்பனிடம் ஏதோ கொடிய மிருகம் அவனை பீறிபோட்டது என்று சொன்னார்கள். யாருக்கு வேலை செய்தானோ, அவர்களே அவனை மறுதலித்துவிட்டனர். அதை தேவன் பார்த்துக்கொண்டிருந்தார். அவனுக்கு ஒரு நல்ல திட்டத்தை தேவன் வைத்திருந்தார். அதை நிறைவேறவும் செய்தார். அவன் கடைசியாக, “அவனுக்கு எல்லாம் தீமையாக நடந்த போதிலும், தேவன் அதை நன்மையாக மாற்றினார்,” என்றான்.
இந்த காரியம் நம் அனைவருக்குமே பொருந்தக்கூடிய ஒன்றாகும். தேவன் எல்லாவற்றையும் நன்மைக்கேதுவாக செய்வார். மேலும், நம்மைத் தம்முடைய சொந்த சாயலில் மாற்றுவார் என்பதை நாம் விசுவாசித்துக்கொண்டே இருந்தால், பிசாசு தோற்றுப்போவது நிச்சயம்.
சகல ஞானமும், அன்புமுள்ள தேவனே, என்னை இன்னும் அதிகமாக இயேசுவைப்போல் மாற்றும். எனக்குப் பாடுபட விருப்பமில்லை, தோல்வியடையவும் வெறுக்கிறேன். ஆனால் உம்மிடத்தில் அன்புகூரும்போது, சகலமும் நன்மைக்கேதுவாக நீர் செய்ய வல்லவர் என்பதை புரிந்துகொள்ள எனக்கு போதித்தருளும். இயேசு கிறிஸ்துவின் மூலம் ஜெபிக்கிறேன். ஆமென்.
Scripture
About this Plan
ஜாய்ஸ் மரின் நகடமுகற மவதபாட மபாதகனயுடன் உங்கள் நாகைத் ததாடங்குங்கள் .இப்படிப்பட்ட தினசரி பக்திக்கான மவத பாடங்கள் உங்களுக்கு நம்பிக்கககத் தரும், உங்கள் னகதப் புதுப்பிக்க உதவுகிறது ற்றும் ஒவ்தவாரு நாளும் நீங்கள் மநாக்கத்துடனும் ஆர்வத்துடனும் வாழ முடியும் ன்பகதக் கண்டறி உதவுகிறது!
More