YouVersion Logo
Search Icon

மனதின் போர்களம்Sample

மனதின் போர்களம்

DAY 15 OF 100

முதலாவது பாடுகள்

“நாம் ஏன் பாடுபடவேண்டும்?” “தேவன் நம்மை உண்மையாகவே நேசித்தால், நமக்கு ஏன் இந்த கஷ்டங்கள்?” இப்படிப்பட்ட கேள்விகளை நான் அடிக்கடி கேட்டிருக்கிறேன். பல ஆயிரம் ஆண்டுகளாக என்னை விட அறிவாளிகள், இதற்கு பதில் சொல்ல முடியாமல் தடுமாறியிருக்கின்றனர். இக்கேள்விகளுக்கு பதில் சொல்ல எந்த முயற்சியையும் நான் எடுப்பதில்லை. ஆனால், “தேவன் விசுவாசிகளுக்கு எந்தப்பாடுகளையும், கஷ்டங்களையும், போராட்டங்களையும் அனுமதிக்காமல்; வெறும் ஆசீர்வாதங்களை மட்டும் கொடுத்து வந்தால், அது ஜனங்களை விசுவாசிக்க வைக்க லஞ்சம் கொடுக்க ஒரு வழியாக இருக்கும் இல்லையா?”

தேவன் இப்படி கிரியை செய்கிறவர் அல்ல. நமக்கு தேவைகள் வரும் போது, அந்தத் தேவைகளை “தேவன் மட்டுமே” சந்திக்க கூடியவராக இருப்பதினால், நாம் அன்போடு அவரிடத்தில் வர வேண்டும் என்று விரும்புகிறார்.

நம்முடைய பிறப்பிலிருந்து, இயேசுவை சந்திக்கும் நாள் வரையிலும் நாமனைவரும் சில நேரங்களில் பாடுபடுவோம். சிலர் கொஞ்சமாகவும், சிலர் அதிகமாகவும், ஆனால், பாடுகள், பாடுகள்தான்.

ஆனால், இவைகளிலிருந்து கர்த்தர் நமக்கு வெற்றியை தருவதை மற்றவர்கள் பார்க்கும்போது, இது ஒரு சாட்சியாக அமைகிறது. அவர்கள் இந்த சாட்சியின் மூலம் இரட்சிப்படையாமல் இருந்தாலும், நம்முடைய வாழ்க்கையிலுள்ள தேவப் பிரசன்னத்தை நிரூபித்து, இது அவர்களுக்குள் இல்லாதை உணரவைக்கிறது.

ஆம், நாம் பாடுபடுவோம்! ஆனால், இந்தக் குழப்பத்தில் இருந்து, நம்முடைய ஜெபத்திற்கு பதில் கொடுக்கும் விதத்தில் தேவன் விடுவிக்கும்போது, அதன் விளைவாக, நாம் அவரைத் துதிக்க ஏதுவாகிறது.

பாடுகளுக்கும், துதிகளுக்கும் இடையிலுள்ள காலக்கட்டத்தில் தான் பிசாசானவன் நம்முடைய மனதைத்தாக்குவான். “தேவன் உண்மையாகவே உன்னை நேசித்தால், நீ இப்படியெல்லாம் பாடுபடத் தேவையில்லையே,” என்று அவன் சொல்லுவான். ஆனால், அந்த நேரத்தில் தான், விடுதலையை கொடுக்கப்போகும் தேவனை விசுவாசிக்க வேண்டும்.

அடுத்ததாக, “நீ தேவனுக்கு ஊழியம் செய்து எந்த பிரயோஜனமும் இல்லை, அதனால் எந்த முன்னேற்றமுமில்லை. தேவன் உன்னைக் குறித்து கரிசனையுள்ளவராக இருந்தால், உன்னை இந்த அளவிற்கு பாடுபட அனுமதிப்பாரா? என்று இரகசியமாக சொல்லுவான்.

இங்கு தான், நாம் உறுதியாய் யோபுவைப் போல் நிற்கவேண்டும். அவன் தன் பிள்ளைகளை, உடைமைகளை, உடல் நலத்தையும் இழந்தான். ஜனங்கள் அவனை மாய்மாலக்காரன் என்று நிந்தித்தார்கள். அவனுடைய சிநேகிதர்களும் சாத்தானின் கருவிகளாக செயல்பட்டனர். பிசாசு அவர்களை பயன்படுத்தி, யோபுவை அதைரியப்படுத்தினான் என்று அவர்கள் உணராதிருந்தார்கள். அவர்களுக்கு இது தெரியாது போனாலும், பிசாசு அவர்களை பயன்படுத்தாமல் இல்லை.

ஆனாலும், தேவனுடைய மனிதனாகிய யோபு, எதையும் கவனிக்கவில்லை. “அவர் என்னைக் கொன்று போட்டாலும், நான் அவர் மேல் நம்பிக்கையாயிருப்பேன்,” என்று அவன் சொன்னான் (யோபு 13:15). சாத்தான் தன்னுடைய மனதைத்தாக்க இடமளித்து, அவன் தேவனை குறை கூறவில்லை. கர்த்தருடைய திட்டம் அவனுக்கு புரிந்ததாகவும் தெரியவில்லை. ஆனாலும், தன்னோடிருந்த தேவனையும், அவருடைய அன்பின் பிரச்சன்னத்தையும், யோபு எப்பொழுதும் அறிந்திருந்தான்.

நாமும், இப்படிப்பட்ட தெய்வீக அமைதிக் கொண்டவர்களாகவே இருக்க வேண்டும். “அவர் என்னைக் கொன்று போட்டாலும், அவர் மேல் நம்பிக்கையாய் இருப்பேன்,” என்று சொல்லுமளவிற்கு, அவருடைய அன்பில் மூழ்கியிருக்கவேண்டும். நமக்கெல்லாமே புரிந்திருக்கவேண்டும் என்று அவசியமில்லை. “புரிந்துகொள்ளுதல் அதிகபட்சமானது, கீழ்ப்படிதலோ அத்தியாவசியமானது,” என்று ஒருவர் சொன்னார்.

கடைசியாக, நாம் பாடுபடும்போது, தேவனுடைய பரிசுத்தவான்கள் சென்ற பாதையில் நாமும் செல்லுகிறோம் என்று நினைத்துப் பார்க்க வேண்டும். பேதுருவின் நாட்களில் கூட ஜனங்கள் பாடுபட்டார்கள். அதாவது, ரோமர்களால் உபத்திரவப்பட்டார்கள். ஆனால், நம்முடைய நாட்களில், ஒரு வேளை நம்மை புரிந்துகொள்ளாத மக்களாகவோ, அல்லது நமக்கு எதிரிகளாய் மாறின நம் சொந்த குடும்ப அங்கத்தினர்களாகவோ இருக்கலாம். எது எப்படி இருந்தாலும், பாடுகள் “தேவனை துதிக்கும் வகையில்” முடிவடைய வேண்டும்.


எஜமானனாகிய என் தேவனே, பாடுகளே இல்லாத வாழ்க்கையை நாடியதற்காக என்னை மன்னியும். நான் பாடுபட விரும்பாமலும், தவறு செய்தால் அதை பொறுக்காமலும் இருப்பதை ஒத்துக் கொள்ளுகிறேன். இவைகளிலிருந்து விடுதலைப் பெற்று, சரியான மனப்பான்மையுடன் நான் வாழ எனக்கு உதவி செய்யும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறேன். ஆமென்.

Scripture

Day 14Day 16

About this Plan

மனதின் போர்களம்

ஜாய்ஸ் ம஫஬ரின் நகடமுகற மவதபாட மபாதகனயுடன் உங்கள் நாகைத் ததாடங்குங்கள் .இப்படிப்பட்ட தினசரி பக்திக்கான மவத பாடங்கள் உங்களுக்கு நம்பிக்ககக஬த் தரும், உங்கள் ஫னகதப் புதுப்பிக்க உதவுகிறது ஫ற்றும் ஒவ்தவாரு நாளும் நீங்கள் மநாக்கத்துடனும் ஆர்வத்துடனும் வாழ முடியும் ஋ன்பகதக் கண்டறி஬ உதவுகிறது!

More