YouVersion Logo
Search Icon

மனதின் போர்களம்Sample

மனதின் போர்களம்

DAY 13 OF 100

வனாந்திர மனப்பான்மை

“இன்னும் கொஞ்சம் நேரம். இதோ ஒரே ஒரு நிமிஷம்,” என்னும் இந்த வார்த்தைகளை பெற்றோராகிய நாம் நன்றாய் கேட்டிருக்கிறோம். நம்முடைய பிள்ளைகளை, விளையாடுவதை நிறுத்திவிட்டு, உள்ளே வரச் சொன்னால், அவர்கள் தங்கள் நண்பர்களுடன் வெளியே இன்னும் கொஞ்ச நேரம் இருக்க விரும்புகின்றனர். அவர்கள் மனதெல்லாம் விளையாட்டிலே இருக்கிறபடியால், குளிக்கவோ, சாப்பிடவோ அவர்கள் விரும்புவதில்லை. அப்படியே விளையாட விட்டால், “இன்னும் கொஞ்ச நேரம்” என்று அது போய் கொண்டேயிருக்கும். பெரியவர்களாகிய நாமும் கூட, சில நேரம், இந்த சிறுவர்களைப் போல, “இன்னும் கொஞ்சம் நேரம்” என்று சொல்லி விடுகிறோம்.

தவறான மனிதர்களிடத்தில், சகிக்க முடியாத நட்பு உள்ளவர்களாக, தங்கள் வேலையில் விருப்பமின்றி, வாழ்க்கையை வெறுத்து, கஷ்டப்படுகிறவர்களை நான் சந்தித்திருக்கிறேன். தாங்கள் கஷ்டப்படுகிறதை நன்கு அறிந்திருந்தும், அதைக்குறித்து அவர்கள் ஒன்றும் செய்யாமல், “இன்னும் கொஞ்ச நேரம்” பார்ப்போம் என்பார்கள். எதற்கு இன்னும் கொஞ்ச நேரம்? இன்னும் அதிக வலிக்காகவா? இன்னும் அதிக சோர்வுக்காகவா? இன்னும் அதிக கவலைக்காகவா?

இப்படிப்பட்டவர்களைத்தான், “வனாந்திர மனப்பான்மை” உள்ளவர்கள் என்று நான் அழைக்கிறேன். இதை நான் விவரிக்க விரும்புகிறேன். இஸ்ரவேல் ஜனங்களை, மோசே எகிப்திலிருந்து வெளியே நடத்தினார். இஸ்ரவேலர்கள் தேவனுக்குக் கீழ்படிந்து, முறுமுறுக்காமல் தேவன் சொன்னபடி நேராக சென்றிருந்தால், பதினோரு நாட்களில் சென்றிருப்பார்கள். ஆனால், 40 ஆண்டுகள் ஆயிற்று.

கடைசியில் அவர்கள் எதினால் புறப்பட்டார்கள்? “நீங்கள் இந்த மலையருகே தங்கியிருந்தது போதும்,” என்று தேவன் சொன்னதினால் தான். கர்த்தர் மட்டும் வாக்குத்தத்தமுள்ள தேசத்திற்குள் அவர்களை பிடித்துத் தள்ளியிருக்காவிட்டால், யோர்தானைக் கடக்காமல் எவ்வளவு காலம் இருந்திருப்பார்கள் என்று தெரியவில்லை.

அவர்கள் கட்டப்பட்டவர்கள். எகிப்திலே அற்புதங்களைக் கண்டு, செங்கடலில் தேவன் எகிப்திய சேனையை முறியடித்ததைக் கண்டு தேவனைத் துதித்திருந்தாலும்; அவர்கள் கட்டப்பட்டவர்களாகவே இருந்தனர். சரீரத்திலே சங்கிலிகளால் கட்டப்படாமல் இருந்தாலும், தங்கள் மனதில் இருந்து சங்கிலிகளை அவர்கள் அகற்றவில்லை. இது தான் “வனாந்திர மனப்பான்மை”. 

நாற்பது வருஷமாக முறுமுறுத்தார்கள். அவர்களுக்கு தண்ணீரில்லை, தேவன் அதைக் கொடுத்தார். உணவுக்காக முறுமுறுத்தனர், மன்னா அவர்களுக்கு போதுமானதாக இருந்தது. ஆனாலும் இறைச்சி ஏதாவது வேண்டும் என்று கேட்டனர். சூழ்நிலை எப்படி இருந்தாலும், மனதில் கட்டப்பட்டவர்களாகவே அவர்கள் இருந்தனர். எவ்வளவு தான் காரியங்கள் நன்றாக மாறினாலும், அது அவர்களுக்கு திருப்தியில்லை. எகிப்திய அடிமைத்தனத்தின் கஷ்டங்களையெல்லாம் மறந்து விட்டு, மோசேயின் தலைமைத்துவத்தில் எப்பொழுதும் திருப்தியில்லாதவர்களாய், “நாங்கள் எகிப்திலேயே இருந்திருந்தால் நலமாயிருந்திருக்கும்” என்று புலம்பினார்கள்.

அதே சமயம், புதிய தேசத்திற்குள் பிரவேசிக்க வாய்ப்பு கிடைத்தபோதோ, “அந்த தேசத்தில் இராட்சதர்கள் உண்டு”, என்று பயந்து கூக்குரலிட்டார்கள். முன்நாட்களில் தேவனுடைய விடுதலையை அவர்கள் கண்டிருந்தாலும், அந்நேரத்தில் அவர்கள் அதற்கு ஆயத்தமாயில்லை.

கடைசியாக, “இனி புறப்பட்டு போங்கள்,” என்று தேவன் சொன்னார். அப்பொழுது அவர்கள் மனநிலை எப்படி இருந்தது என்று வேதம் எதுவும் சொல்லவில்லை. அது மாறினதாகவும் நான் நினைக்கவில்லை. “இந்த இடம் சரியில்லை தான். ஆனால், வனாந்திரத்தில் நாம் வாழ்ந்து பழகிவிட்டோம். இவ்வளவு பழகின பிறகு, இந்த இடத்தை விட்டு போவது எப்படி? “இன்னும் கொஞ்ச நேரம் இருப்போம்”, என்று தான் அவர்கள் சொல்லியிருப்பார்கள் என்று நினைக்கிறேன். 

உங்களுக்கு வாழ்க்கை பிடிக்கவில்லையென்றால், இதை மாற்றிக்கொள்ள, நீங்கள் எந்த முயற்சியும் எடுக்காமல் இருந்தால், உங்களுக்கு “வனாந்திர மனப்பான்மை” இருக்கக்கூடும். எதிர்மறையான சிந்தனைகளால் உங்கள் மனதை நிரப்பியிருந்தால், நீங்கள் கட்டுப்பட்டிருப்பீர்கள்.

ஆனால், நீங்கள் ஒன்று செய்ய முடியும். இனியும் தாமதிக்காமல், “நீண்ட காலம் இந்த மலையில் இருந்து விட்டேன், வாக்குத்தத்தமான தேசத்திற்கு நான் போகிறேன், அங்கு சாத்தானின் திட்டங்களை முறியடித்து, வெற்றியுடன் வாழ்வேன்” என்று சொல்லுங்கள்.


உயர்ந்த உன்னத தேவனே, “வனாந்திர மனப்பான்மையை” அகற்ற எனக்கு உதவும். வாக்களிக்கப்பட்ட தேசத்தின் மனப்பான்மை யுடன் வெற்றியுடன் வாழ, இயேசு கிறிஸ்துவின் மூலம் எனக்கு உதவி செய்யும். ஆமென்.

Day 12Day 14

About this Plan

மனதின் போர்களம்

ஜாய்ஸ் ம஫஬ரின் நகடமுகற மவதபாட மபாதகனயுடன் உங்கள் நாகைத் ததாடங்குங்கள் .இப்படிப்பட்ட தினசரி பக்திக்கான மவத பாடங்கள் உங்களுக்கு நம்பிக்ககக஬த் தரும், உங்கள் ஫னகதப் புதுப்பிக்க உதவுகிறது ஫ற்றும் ஒவ்தவாரு நாளும் நீங்கள் மநாக்கத்துடனும் ஆர்வத்துடனும் வாழ முடியும் ஋ன்பகதக் கண்டறி஬ உதவுகிறது!

More