மனதின் போர்களம்Sample
“நான் உதவ முடியதா”
தேவன் நம்முடைய தவறான நடத்தையைக் குறித்து, நம்முடன் இடைபடும் போது, “எனக்கு முடியவில்லை” என்று சொல்வது எளிது. ஆனால், இந்தத் தவறுக்கு நானே பொறுப்பேற்கிறேன். என் வாழ்க்கையை சரி செய்து கொள்ள நான் ஆயத்தமாயிருக்கிறேன்,” என்று சொல்வதற்கு உண்மையிலேயே தைரியம் வேண்டும்.
வாழ்க்கையின் போராட்டங்களை நேரடியாக சந்திக்காமல், அதைத் தவிர்ப்பது, ஒரு மிகப்பெரிய பிரச்சனை ஆகும். நாம் சும்மா ஏற்றுக்கொள்ள மறுப்பதினால் மட்டும், தவறான காரியங்கள் தாமதமாகவே மறைந்து போய்விடுவதில்லை. அவ்வப்போது, நாம் காரியங்களை அமுக்கி வைக்கிறோம். நாம் இப்படி செய்யும் வரை, அவைகள் நம் மேல் ஆதிக்கம் தான் செலுத்தும். உயிருடன் புதைக்கப்பட்டிருக்கும் வாழ்க்கையின் போராட்டங்கள், மடிந்து போவதில்லை.
நான் சிறு பெண்ணாக இருந்த காலத்தில், பாலியல் தொல்லைக்கு ஆளாகின அந்த கசப்பான சிந்தனையை சரி செய்ய, பல ஆண்டுகளாகவே நான் மறுத்து வந்தேன். என் தந்தையே என்னை பலாத்காரம் செய்ததால், நான் பதினெட்டு வயதானதும் வீட்டைவிட்டு வெளியேறினேன். நான் வெளியேறுவதால் இந்த பிரச்சனையிலிருந்து விடுபடுகிறேன் என்று நினைத்தேன். ஆனால், இது “என் ஆத்துமாவில் உள்ள பிரச்சனை,” என்று உணராதே போனேன். இது என் சிந்தனையிலும், மனப்போக்கிலும், வார்த்தையிலும் இருந்தது. இது என் செயல்பாடுகளையும், உறவுகளையும் பாதித்தது. என்னுடைய கடந்த கால நினைவுகளை எனக்குள்ளாகவே அடக்கி, அமுக்கி, புதைத்து வைத்து இருந்தேன். நாம் பழைய நினைவுகளிலேயே வாழத் தேவை இல்லை! பின்னானவைகளை மறந்து, முன்னேறிச்செல்ல வேண்டும் என்று தேவனுடைய வார்த்தை நம்மை உற்சாகப்படுத்துகிறது. இதினாலே, நாம் பாதிக்கப்படுகையில், பாதிக்கப்படாதவர்கள் போல நடித்து, அதின் விளைவுகளை பொருட்படுத்தாமல் இருக்கவேண்டும் என்று அர்த்தம் கொள்ளக்கூடாது.
என்னிடத்தில் பல கெட்ட சுபாவங்களும், பிற்போக்கான மனப்பான்மையும் இருந்தன. நான் பல சாக்குப் போக்குகளையும் சொல்லுவேன். என்னுடைய கடந்த கால நினைவுகளை சீர்படுத்தாமல், என்னைக்குறித்தே பரிதாபப்பட்டு, “நான் தவறாக நடத்தப்பட்டேன், இது என்னுடைய தவறு அல்ல. இதற்காக நான் ஒன்றும் செய்ய முடியாது.” இது என்னுடைய தவறாக இல்லாமல் போனாலும்; இந்த நினைவு களிலிருந்து நான் விடுதலை பெற, “தேவன் எனக்கு உதவி செய்யும்படி இடங்கொடுக்க வேண்டியது,” என்னுடைய பொறுப்பாக இருந்தது.
கர்த்தர் எனக்கு உதவி செய்ய ஆரம்பித்தார். என் வாழ்க்கை மாறுவதற்கு முன்பாகவே, என் மனம் மாறவேண்டியதாயிருந்தது. ஆரம்பத்தில், என்னுடைய நினைவுகளுக்காக நான் பொறுப்பேற்க எனக்கு விருப்பம் இருந்ததில்ல. நான் நினைப்பதைக் குறித்து என்னால் எதுவும் செய்ய முடியாது, அது தானாகவே வருகிறது என்று தான் நினைத்தேன். அதன்பிறகு, நாளடைவில், நான் தவறான நினைவுகளை சரியான சிந்தனைகளாக மாற்றி அமைத்து, ஒரு நோக்கத்துடன் சிந்திக்கக் கற்றுக் கொண்டேன்.
நம்பிக்கையற்ற நினைவுகளை நிறுத்திவிட்டு, முற்போக்காக சிந்திக்கவும், செயல்படவும் அறிந்துகொண்டேன்.
நம்முடைய பழக்கங்களின் அடிப்படையில்தான், பெரும்பாலும் நம்முடைய சிந்தனைகள் இருக்கின்றன. தேவனைக் குறித்து தொடர்ந்து நாம் சிந்திக்கும் போது, தெய்வீக சிந்தனைகள் நமக்கு இயல்பாகவே வரும். எனவே, நம்முடைய மனதில் தினமும் தோன்றும் ஆயிரக்கணக்கான சிந்தனைகளில், நன்மையானவைகளை மட்டும்தான் நினைக்கவேண்டும். ஆச்சரியப்படும் வகையில், தவறான சிந்தனைகளை சிந்திக்க நாம் எந்த முயற்சியையும் எடுக்கத் தேவையில்லை என்று சொன்னாலும், சரியான சிந்தனைகளை நாம் சிந்திக்க, அதிகமாக நாம் முயற்சி எடுக்க வேண்டும்.
நம்முடைய மனது, சாத்தானுடைய யுத்தகளமாக இருக்கிறது. நான் இப்படி சொல்வதினால், கிறிஸ்தவ வாழ்க்கை என்பது ஒரு கஷ்டமான போராட்டமுள்ள ஜீவியம் என்று எண்ணிவிடக்கூடாது. அநேகர், வெற்றியுள்ள கிறிஸ்தவ வாழ்க்கையை வாழ விரும்பினாலும், அவர்கள் போராட்டங்களை சந்திக்க விரும்புவதில்லை. எதிர்த்து வரும் தடைகளை மீறி ஜெயிப்பதுதான், “வெற்றி” என்பதாகும்.
சரியான விதத்தில் சிந்திப்பது என்பது, ஒரு சுலபமான வழி அல்ல. இதற்கு பயிற்சி தேவை. ஆனால், இதுதான் வாழ்க்கைக்கு சரியான பாதை என்று புரிந்துகொண்டால், என்ன தடை வந்தாலும் அதை மீறி முற்போக்காக சிந்திக்க வேண்டும்.
சந்தேகம், மற்றும் பயத்தினால் பிசாசு நம்மைத் தாக்கும் போது “என்னால் முடியவில்லை,” என்று மீண்டும் சொல்லாமல்; பவுலைப் போல, “நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலே நமக்கு ஜெயம் கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம்...கர்த்தருக்குள் நீங்கள் படுகிற பிரயாசம் விருதாவாயிராதென்று அறிந்து, நீங்கள் உறுதிப்பட்டவர்களாயும், அசையாதவர்களாயும் கர்த்தருடைய கிரியையிலே எப்பொழுதும் பெருகுகிறவர்களாயும் இருப்பீர்களாக” (1 கொரிந்தியர் 15:57-58).
சரியானவைகளைத் தெரிந்துகொண்டு, தவறானவைகளை ஒதுக்கித் தள்ள கற்றுக்கொள்வதற்கு, நமக்கு நேரமெடுக்கும்.
இது எளிதானதல்ல. ஆனால், ஒவ்வொரு முறையும் சரியான தீர்மானங்களையே எடுக்கவேண்டும் என்று நாம் தீர்மானமாக இருக்கும் போது, நாம் சரியான திசையில் தான் முன்னேறுவோம்.
வல்லமையுள்ள தேவனே, என்னால் தினமும் தேர்ந்தெடுக்க முடியும் என்று நினைவுப்படுத்தும். பிசாசை மேற்கொள்ளும் சரியான சிந்தனைகளை பெற்றுக்கொள்ளவும், மனதின் போராட்டத்தை ஜெயிக்கவும் எனக்கு உதவி செய்யும். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன். ஆமென்.
Scripture
About this Plan
ஜாய்ஸ் மரின் நகடமுகற மவதபாட மபாதகனயுடன் உங்கள் நாகைத் ததாடங்குங்கள் .இப்படிப்பட்ட தினசரி பக்திக்கான மவத பாடங்கள் உங்களுக்கு நம்பிக்கககத் தரும், உங்கள் னகதப் புதுப்பிக்க உதவுகிறது ற்றும் ஒவ்தவாரு நாளும் நீங்கள் மநாக்கத்துடனும் ஆர்வத்துடனும் வாழ முடியும் ன்பகதக் கண்டறி உதவுகிறது!
More