இவைகளில் அன்பே பிரதானம்Sample
ஜனவரி 1956ல், ஈக்வேடார் காடுகளில் மரித்த 5 இளம் அருட்பணியாளர்களைக் குறித்து அதிர்ச்சியூட்டும் ஒரு தகவலை லைஃப் பத்திரிகை (Life Magazine) வெளியிட்டது. இன்றைக்கு அவர்களுடைய வாழ்க்கை சரிதை விருது பெற்ற சிறந்த திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது. தென் அமெரிக்காவிலுள்ள பழங்குடி ஆக்கா இந்தியர்களை (Auca Indians) தொடர்பு கொள்ள இவர்கள் பல மாதங்களாக முயன்றனர். கடைசியில் அவர்களை தொடர்பு கொண்டு சுவிசேஷத்தை சொல்ல முயன்றபோது அவர்கள் அனைவரும் கொடூரமாக கொல்லப்பட்டனர்.
இன்றைக்கு அந்த இனத்தை சேர்ந்த அநேகர் கிறிஸ்தவர்களாக இருக்கின்றனர்! அந்த அருட்பணியாளர்கள் கொல்லப்பட்ட இடத்துக்கு அருகாமையில் ஒரு திருச்சபை உள்ளது. அதில் அவர்கள் தலைவர்களாக இருக்கிறார்கள். இந்த அற்புத மனமாற்றத்தைக் கண்டு அநேக கல்வியாளர்களும், அரசாங்க தலைவர்களும்கூட தங்கள் வியப்பை வெளிப்படுத்தினர். இது எவ்வாறு நடந்தது?
அதற்கான பதில், இரத்த சாட்சியாக மரித்த இரண்டு பேருடைய மனைவிகளும், சகோதரிகளும் காண்பித்த அன்பில் அடங்கியிருக்கிறது. பழிவாங்கும் எண்ணத்தினால் அல்ல. தேவ அன்பினால் நிறைந்து, அவநம்பிக்கை எனும் மதிலை தகர்த்தெறிய இவர்கள் பல வருடங்களாக பிரயாசப்பட்டார்கள். கொஞ்சம் கொஞ்சமாக அந்த ஜனங்களுக்கு இவர்கள் சுவிசேஷத்தை அறிவித்து, கிறிஸ்துவின் அன்பு அவர்களுடைய வாழ்க்கையை மாற்றுவதைக் கண்டார்கள். தேவனுடைய அன்புதான் இந்த உலகத்திலேயே மிகப்பெரிய சக்தியாகும்!
Scripture
About this Plan
கிறிஸ்தவத்தில் இருப்பது இயேசு அறிமுகப்படுத்திய புதுவகையான அன்பு – அகாபே அன்பு. வெறுமையான, பாவம் நிறைந்த உலகத்தில் இயேசு இந்த அன்பை அறிமுகப்படுத்தினார்.
More