YouVersion Logo
Search Icon

இவைகளில் அன்பே பிரதானம்Sample

இவைகளில் அன்பே பிரதானம்

DAY 12 OF 26

தேவனுடைய அன்பினால், அன்புகூரப்பட முடியாதவர்களை அவர் அன்புகூர்ந்தார், தள்ளப்பட்டவர்களை தன்னிடம் சேர்த்துக் கொண்டார். ஆனால் தேவஞானத்தினால் நண்பனையும் எதிரியையும் அடையாளம் கண்டு பக்குவமாக செயல்பட்டார். ஏரோது இராஜாவின் நட்பையும், அவனுடைய அரண்மனைக்கு செல்வதையும் விரும்பாத அவர், மரத்தின் மீது உட்கார்ந்து கொண்டிருந்த, நேர்மையற்ற ஒரு ஆயக்காரனை தேடிப்போய், இன்று நான் உன் வீட்டிற்கு வர வேண்டும், எனவே நீ உடனே இறங்கி வா என்றார்!

எனவே, தேவனுடைய அன்பு மதியீனமானதில்லை, மதியீனத்துடன் சேர்வதுமில்லை. அதை வேண்டாமென்று திரும்பத் திரும்ப நிராகரிக்கும் மக்கள் மீது அது தன்னை திணிப்பதில்லை. கெட்ட குமாரனைப் போல, அதை நோக்கி ஓடி வரும் பாவிக்கு அந்த அன்பு இலவசமாக, ஏராளமாக கிடைக்கிறது. ஆனால், கெட்ட குமாரனுடைய அண்ணனைப் போன்ற சுய நீதிமான்கள், மனந்திரும்ப விருப்பமில்லாதவர்கள், சட்டதிட்டங்களை நாடிப் போகும் பரிசேயர் போன்றவர்களுக்கு அது புரியாத புதிராக காணப்படுகிறது.

இந்த உலகத்தில் பிறப்பதற்கு நாம் யாரும், எதுவுமே செய்யவில்லை, என்றாலும் நாம் இந்த உலகத்தில் இப்போது இருக்கிறோம். நமக்கு கொடுக்கப்பட்டிருக்கும் வாழ்க்கையைக் கொண்டு என்ன செய்யப் போகிறோம் என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும். “எவ்வளவு வருடங்கள் வாழ்கிறோம் என்பது முக்கியமல்ல, அது எவ்வளவு தரமான வாழ்க்கையாக இருக்கப்போகிறது என்பதுதான் முக்கியம்” என்று மார்ட்டின் லூதர் கிங் ஜுனியர் சொன்னதாக சொல்லப்படுகிறது. இந்த பூமியில் நம்முடைய காலம் மிகவும் குறுகியது. நம்முடைய வாழ்க்கை, உதிரும் இலை, சாயும் நிழல், பறக்கும் அம்பு, வெளியில் உள்ள புல், இரையைத் தொடரும் கழுகு, மறையும் புகை ஆகியவை போன்றது என வேதம் சித்தரிக்கிறது. இந்த நிமிஷம் இருப்பவர்கள், மறு நிகிஷம் மறைந்துபோகிறார்கள் (சங்கீதம் 103:15, 16).

தொட்டில் மரம் கல்லறையின் பளிங்கு கல்லை உறசக்கூடிய அளவுக்கு, இரண்டுக்கும் இடையே உள்ள இடைவெளி மிகவும் குறுகியதாய் இருக்கிறதே, அது போன்றதுதான் மனுஷ வாழ்க்கையும்; அது மிகவும் குறுகியது என்றார் ஒரு பிரசங்கியார். எனவே நம்முடைய வாழ்க்கையைக் குறித்த தேவ நோக்கத்தை நிறைவேற்றுவதில் கருத்தாயிருப்போம். தேவ வகையான அன்பை உங்கள் குறிக்கோளாக ஆக்கிக்கொள்ளுங்கள்.

Day 11Day 13

About this Plan

இவைகளில் அன்பே பிரதானம்

கிறிஸ்தவத்தில் இருப்பது இயேசு அறிமுகப்படுத்திய புதுவகையான அன்பு – அகாபே அன்பு. வெறுமையான, பாவம் நிறைந்த உலகத்தில் இயேசு இந்த அன்பை அறிமுகப்படுத்தினார். 

More