YouVersion Logo
Search Icon

இவைகளில் அன்பே பிரதானம்Sample

இவைகளில் அன்பே பிரதானம்

DAY 11 OF 26

பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தின் தலைவரும், அமெரிக்காவின் தலைசிறந்த பிரசங்கியார்களில் ஒருவருமான ஜோனத்தான் எட்வர்ட்ஸின் மகள் மிகவும் கோப குணம் கொண்டவள் என்று பரவலாக சொல்லப்படுவதுண்டு. வழக்கம் போல, இந்தப் பிரச்சனை குடும்பத்தில் உள்ளவர்களைத் தவிர மற்றவர்களுக்கு தெரியாது. ஒருநாள், வாலிபன் ஒருவன் அவள் மீது ஆசைப்பட்டு, அவளைத் திருமணம் செய்து கொள்ள விரும்பி, அவளுடைய பெற்றோரை சந்தித்தான். “அவளை உனக்கு திருமணம் செய்து வைக்க முடியாது” என்று ஜோனத்தான் எட்வர்ட்ஸ் கண்டிப்பாக சொல்லிவிட்டார்.

“ஆனால் நான் அவளை நேசிக்கிறேன்” என்றான் அந்த வாலிபன். “நான் அவளை உனக்கு கொடுக்கமாட்டேன்” என்றார் எட்வர்ட்ஸ், “ஆனால் அவள் என்னை நேசிக்கிறாள்” என்றான் அவன். மறுபடியும் எட்வர்ட்ஸ் “முடியாது” என்றார். “ஏன்” என வாலிபன் கேட்டான். “அவள் உனக்கு ஏற்றவள் அல்ல” என்றார் எட்வர்ட்ஸ். “அவள் கிறிஸ்தவள் தானே?” என்று அவன் கேட்டான். அதற்கு அவர், “ஆம் அவள் கிறிஸ்தவள்தான். ஆனால், சிலருடன் மனிதர்கள் வாழ முடியாவிட்டாலும் தேவகிருபை வாழ முடியும்!” என்றார்.

கோபத்தை அடக்குவதற்கு சுயக்கட்டுப்பாடு அவசியம். ஆனால் அதைவிட அவசியம் கிறிஸ்து கட்டுப்பாடு. நாம் எல்லாருமே மடியில் வெடிகுண்டுடந்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். தேவனும், அவருடைய அன்பின் வல்லமையும் இல்லாமல் வாழும்போது, அந்த வெடிகுண்டு எந்த நேரத்திலும் வெடித்து சிதறும்படி நாம் எதிர்பார்க்கலாம். ஒரு பெண் தன் போதகரிடம் இவ்வாறு சொன்னதாக வாசித்தேன்: “எனக்கு மிகவும் அதிகமாக கோபம் வரும். ஆனால் அடுத்த நிமிஷம் நான் சரியாகிவிடுவேன்”. அந்தப் போதகர் அவளைப் பார்த்து, “அணுகுண்டும் அப்படித்தான். ஆனால் அதனால் உண்டாகும் பாதிப்பை எண்ணிப்பார்!” என்றாராம். நீங்கள் சுயக்கட்டுப்பாட்டை இழக்கும்போது, சிந்திக்கக்கூடிய, பகுத்தறியக்கூடிய திராணியை இழந்து விடுகிறீர்கள். இழப்புகள் ஏற்படுவதால் நம்முடைய கோபம் நம்மைவிட்டு விலகுவதில்லை!

வாழ்க்கையின் உரசல்களுக்கு தேவனுடைய அன்பு வழவழப்பைக் கொடுக்கும் எண்ணையாக உள்ளது. தேவனுடைய அன்பும், தேவனுடைய ஞானமும் பிரிக்கப்பட முடியாத அளவு ஒன்றிணைந்து இருக்கிறது. இயேசு இந்த பூமியில் வாழ்ந்தபோது, தேவனுடைய அன்பு மற்றும் தேவனுடைய ஞானத்தின் மாம்ச உருவமாய் வாழ்ந்தார் (1 யோவான் 4:9).

Scripture

Day 10Day 12

About this Plan

இவைகளில் அன்பே பிரதானம்

கிறிஸ்தவத்தில் இருப்பது இயேசு அறிமுகப்படுத்திய புதுவகையான அன்பு – அகாபே அன்பு. வெறுமையான, பாவம் நிறைந்த உலகத்தில் இயேசு இந்த அன்பை அறிமுகப்படுத்தினார். 

More