இவைகளில் அன்பே பிரதானம்Sample
நான் இரட்சிக்கப்பட்ட பிறகு, தேவனால் பயன்படுத்தப்பட்ட தாசர்களிடமிருந்து கற்றுக்கொண்ட காரியங்களில் ஒன்று, இலக்குகள் முக்கியம் என்பது. என்னை பயிற்றுவித்தவர்களிடமிருந்து நான் கற்றுக்கொண்ட இன்னொரு காரியம், தீர்மானிக்க வேண்டிய நேரத்தில் தீர்மானிக்காமல் இருப்பதும் ஒரு தீர்மானம் என்பது. ஒரு கம்பெனியின் போர்டு ரூம், கிரிக்கெட் ஆடுகளம், அனுதின அலுவல்களை கவனிக்க வெளியே புறப்பட்டு செல்லும் சேல்ஸ்மேன் மற்றும் சுவிசேஷகர் ஆகியோரின் அனுதின செயல்பாடுகள் நிச்சயமான இலக்குகளின் அடிப்படையில் அமைந்துள்ளது.
மக்களுக்கு சேவை செய்வதும், லாபத்தை பெருக்குவதும் வியாபாரியின் இலக்கு; தன்னுடைய அணியின் வெற்றிக்காக விளையாடுவது கிரிக்கெட் வீரரின் இலக்கு; தனது பொருட்களை வாடிக்கையாளருக்கு விற்பது சேல்ஸ்மேனின் இலக்கு; இரட்சிக்கப்படாதவர்களுக்கு சுவிசேஷத்தை அறிவித்து, அவர்களை தேவனுடைய ராஜ்யத்தில் கொண்டுவந்து சேர்ப்பது சுவிசேஷகரின் இலக்கு. இலக்குகளை நிர்ணயித்து அவற்றை அடைய ஏறக்குறைய ஒவ்வொருவரும் அவரவர் திராணிக்கேற்ப முயற்சிக்கிறார்கள். இலக்கு-நிர்ணயம் ஒரு சத்தியம்; பரிசுத்த வேதாகமத்தில் பல முக்கியமான இடங்களில் அதைக்குறித்து போதிக்கப்படுகிறது.
எந்தவொரு இலக்கையும் அடைவதற்கு குறைந்தபட்சம் இரண்டு காரியங்கள் அவசியம். முதலாவது ஒழுக்கம் (Discipline), இரண்டாவது மன உறுதி (Determination). சாதிப்பதற்கு பின்வரும் காரியம் அவசியம் என யாரோ ஒருவர் கூறியுள்ளார். உங்கள் திராணிக்கு மிஞ்சி வேலை செய்ய திட்டமிடுங்கள், பிறகு அந்த வேலையை செய்யுங்கள்; மென்று தின்ன முடியாத அளவுக்கு பெரும்பகுதியை வாய்க்குள் கடித்துக் கொள்ளுங்கள்; பிறகு அதை மெல்லுங்கள். இலக்குகளை நிர்ணயிப்பது மிகவும் உதவியாயிருக்கும், அதுமட்டுமல்ல, அது வேதத்தின் அடிப்படையிலான ஒரு காரியமும்கூட.. விசுவாசியாகிய நீங்கள் அவசியப்படும் போதெல்லாம் இலக்குகளை நிர்ணயிக்கும்படி வேதம் ஊக்குவிக்கிறது.
Scripture
About this Plan
கிறிஸ்தவத்தில் இருப்பது இயேசு அறிமுகப்படுத்திய புதுவகையான அன்பு – அகாபே அன்பு. வெறுமையான, பாவம் நிறைந்த உலகத்தில் இயேசு இந்த அன்பை அறிமுகப்படுத்தினார்.
More