YouVersion Logo
Search Icon

இவைகளில் அன்பே பிரதானம்Sample

இவைகளில் அன்பே பிரதானம்

DAY 3 OF 26

எனக்கு சோடா குடிக்க ‘பிடிக்கும்’ என்று தமிழில் சொல்லுகிறோம். ஆனால் ஆங்கிலத்தில், “I would love to drink a soda” என்று சொல்லுகிறார்கள். அவன் அவளைக் காதலிக்கிறான் என்று தமிழில் சொல்லுகிறோம். ஆனால் ஆங்கிலத்தில் “He is in love with her” என்று சொல்லுகிறார்கள். இவ்வாறு ஆங்கிலத்தில் ஆசை, பிரியம், பாசம், காதல், நேசம் எல்லாவற்றுக்கும் ‘Love’ என்ற வார்த்தை பரவலாக பயன்படுத்தப்படுகிறது.

அன்பை விளக்குவதற்கு ஆங்கில மொழியில் போதுமான வார்த்தைகளில்லை. ஆசை, பாசம், பிரியம், காதல், நேசம் போன்றவற்றை மட்டும் அல்ல, தேவனோடுள்ள உறவை குறிப்பதற்கும் Love என்ற வார்த்தைத்தான் பயன்படுத்தப்படுகிறது. உண்மை அன்புக்கு விளக்கம் சொல்ல முடியாது என்பதே உண்மை. அன்பின் பல பரிமாணங்களை பிரதிபலிக்கக்கூடிய சரியான ஒரு விளக்கம் ஏதும் இல்லை. அன்பை எதிலும் வைத்து அடைக்க முடியாது. சிலர் அன்பு என நினைத்து, அன்பே இல்லாத இடத்தில் அன்பைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு அன்பு வெறும் ஒரு கானல் நீராகவே காணப்படுகிறது.

புதிய ஏற்பாட்டை எழுதுவதற்கு பரிசுத்த ஆவியானவர் பயன்படுத்திய கிரேக்க மொழியில், அன்பின் நான்கு பரிமாணங்கள் சொல்லப்பட்டிருக்கிறது. முதல் வார்த்தை ஈராஸ் (Eros). ஈராஸ் என்றால் தன்னைத்தானே திருப்திப்படுத்திக் கொள்ளும் அன்பு. இது வேதத்தில் காணப்படும் வார்த்தை அல்ல. இந்த வார்த்தை சரீர ஆசைகளை தீர்த்துக் கொள்ளும் அன்பைக் குறிக்கிறது. இது இன்பத்தை அளிக்கக்கூடியதாக இருந்தாலும், சுயநலமுள்ளதாகவும், தற்காலிகமானதாகவும் காணப்படுகிறது.

கிரேக்க நூல்களில், ஆணுக்கு பெண் மீது ஏற்படும் மோகத்தை குறிக்கும்படியாக ஈராஸ் என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. ஈராஸ், “காதலர்களின் காதலை” குறிக்கும் வார்த்தை என்று பிரபல கிறிஸ்தவ எழுத்தாளர் சி.எஸ். லூயிஸ் கூறுகிறார். ஈராஸ்-உறுதியானது, இனிமையானது, பயங்கரமானது என்று பள்ளி மாணாக்கர் கூட சொல்லுவார்கள். அதற்கு உதவி தேவை. உதவி கிடைக்காத பட்சத்தில் அது செத்துவிடும் அல்லது பூதாகரமாய் மாறிவிடும்.

Day 2Day 4

About this Plan

இவைகளில் அன்பே பிரதானம்

கிறிஸ்தவத்தில் இருப்பது இயேசு அறிமுகப்படுத்திய புதுவகையான அன்பு – அகாபே அன்பு. வெறுமையான, பாவம் நிறைந்த உலகத்தில் இயேசு இந்த அன்பை அறிமுகப்படுத்தினார். 

More