YouVersion Logo
Search Icon

இவைகளில் அன்பே பிரதானம்Sample

இவைகளில் அன்பே பிரதானம்

DAY 9 OF 26

நமது கிரைஸ்ட் சேப்பல் சிறுவர் ஆலயத்தின் அறிவிப்பு பலகையில் The Jars (ஜாடிகள்) என்னும் தலைப்பில் எழுச்சியூட்டும் ஒரு கட்டுரை காணப்படுகிறது. அதில் இவ்வாறாக சொல்லப்பட்டுள்ளது: “பிரசங்க பீடம் அருகில் உள்ள மேஜை மீது ஒரே மாதிரியான இரண்டு ஜாடிகளை ஒரு பிரசங்கியார் வைத்தார். பிறகு அவர், “மனுஷன் பார்க்கிற பிரகாரம் கர்த்தர் பார்க்கிறதில்லை. மனுஷன் முகத்தைப் பார்கிறான், கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார்!” (1 சாமுவேல் 16:7), இந்த இரண்டு ஜாடிகளும் ஒரே இடத்தில் ஒரே விதமான பொருட்களால் செய்யப்பட்டவை, ஒரே கொள்ளளவு கொண்டவை” என்று கூறினார்.

“ஆனால் இவை இரண்டும் வித்தியாசமானவை” என்று சொன்ன அவர், ஒரு ஜாடியை சாய்த்தார், அதிலிருந்து தேன் ஒழுகிற்று. இன்னொரு ஜாடியை சாய்த்தார், அதிலிருந்து காடி கொட்டினது. “ஜாடியை சாய்க்கும்போது, உள்ளே என்ன இருக்கிறதோ அதுதான் வெளியே வரும்” என்று அவர் விளக்க ஆரம்பித்தார். ஜாடிகளை சாய்க்காத வரையில் இரண்டுமே ஒரே விதமாகத்தான் இருந்தது. வித்தியாசம் உள்பக்கம் இருந்ததால் அதைக் காண முடியவில்லை. ஆனால் சாய்த்தபோது சாயம் வெளுத்துவிட்டது.

பிரச்சனை இல்லாத வரையில் நாமும் பார்க்க நன்றாகத்தான் தெரிகிறோம். “இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும்” (லூக்கா 6:45) என்பதற்கேற்க, பிரச்சனை வரும்போதுதான் நம்முடைய எண்ணங்களும் மனப்பான்மைகளும் வெளிப்பட ஆரம்பிக்கின்றது. இன்றைக்கு யாராவது உங்களை கோபப்படுத்தினால் எப்படியிருக்கும்? உங்களிடத்திலிருந்து என்ன புறப்பட்டு வரும்? கிருபை, பொறுமை எனும் “தேன்” வருமா அல்லது கோபம், கிண்டல் எனும் “காடி” வருமா?

“எல்லாவற்றிற்கும் மேலாக ஒருவரிலொருவர் ஊக்கமான அன்புள்ளவர்களாயிருங்கள்; அன்பு திரளான பாவங்களை மூடும்” (1 பேதுரு 4:8). “உங்களை கோபப்படுத்துகிறவர் ஒருவேளை தேனை தேடிக்கொண்டிருக்கலாம் என்பதை அறிந்தவர்களாய், இந்த நாளை அற்புதமான நாளாக ஆக்கிக்கொள்ளுங்கள்” என்று அந்த கட்டுரை முடிகிறது.

Scripture

Day 8Day 10

About this Plan

இவைகளில் அன்பே பிரதானம்

கிறிஸ்தவத்தில் இருப்பது இயேசு அறிமுகப்படுத்திய புதுவகையான அன்பு – அகாபே அன்பு. வெறுமையான, பாவம் நிறைந்த உலகத்தில் இயேசு இந்த அன்பை அறிமுகப்படுத்தினார். 

More