இவைகளில் அன்பே பிரதானம்Sample
தாவீது தன் எஜமானுக்கு எதிராக குறைகூறும் வேலையில் இறங்கவில்லை. சவுல் ராஜா அசுத்த ஆவியினால் பிடிபட்டிருப்பது அவனுக்குத் தெரியும்; அவனைத் துன்பப்படுத்தின மகளுக்காகவும், அவர்களுடைய முடிவுக்காகவும் அவன் ஜெபித்த ஜெபங்கள் தேவ ஆவியினால் சங்கீத புத்தகங்களில் எழுதப்பட்டிருக்கிறது. என்றாலும் சவுலுக்கு விரோதமாக, நேரடியாக அவன் ஒருபோதும் தன் வாயைத் திறந்து அவதூறு பேசவேயில்லை.
சவுல் இராஜா உயிரோடிருந்த போதும் தாவீது அவனை அவதூறாக பேசவில்லை, சவுல் மரித்த பிறகும் அவன் அப்படிப் பேசவில்லை. அவனுடைய ஞானம் நிறைந்த புத்திமதியை கவனியுங்கள். “பெலிஸ்தரின் குமாரத்திகள் சந்தோஷப்படாதபடிக்கும், விருத்தசேதனம் இல்லாதவர்களின் குமாரத்திகள் களிகூராதபடிக்கும், அதைக் காத் பட்டணத்தில் அறிவியாமலும் அஸ்கலோனின் வீதிகளில் பிரஸ்தாபப்படுத்தாமலும் இருங்கள்” (1 சாமுவேல் 1:20). தாவீது என்னுடைய இருதயத்திற்கு ஏற்றவன் என்று தேவன் பகிரங்கமாக சொன்னதில் ஆச்சரியமேயில்லை!
“அந்த மனுஷரைப் பற்றி, அந்த சுவிசேஷரைப் பற்றி நீங்கள் அந்த விஷயத்தை கேள்விப்பட்டீர்களா? அதைக் கேட்டு நான் வருத்தப்பட்டேன், அதிர்ச்சியுற்றேன்” என்று யாராவது சொன்னால், அது பொய்! அவர் பொய் சொல்லுகிறார்!! அது அவருக்கு பெரிய சந்தோஷம். இல்லையென்றால், அவர் அமைதியாக இருந்திருப்பார் அல்லது அந்த சூழ்நிலையில் என்ன செய்வது என்று ஆண்டவரிடம் கேட்டிருப்பார். எவ்வளவு நெருக்கடி ஏற்பட்டாலும் பிறரை அவதூறு செய்ய தன்னுடைய நாவையும், வார்த்தைகளையும் அவர் பயன்படுத்தவே மாட்டார்.
புறங்கூறுகிறவர்கள், கிசுகிசுகிறவர்கள் எல்லாம், உலக மகா திருடனைக் காட்டிலும் மோசமானவர்கள். திருடன் பணத்தைத் திருடுகிறான். ஆனால் புரங்கூறுகிறவன் பணத்தினால் வாங்க முடியாத ஒன்றை – அதாவது, ஒரு மனுஷனுடைய நற்பெயரைத் திருடுகிறான். ஒரு மனுஷனுடைய வாழ்க்கையில் உள்ள பெலவீனத்தைப் பற்றி கேள்விப்படும்போது, தேவனுடைய அன்பை அந்த சூழ்நிலையில் நாம் நாடாமல் போனால், அந்த மனுஷனை விட நான் எவ்வளவோ மேல் என்கிற எண்ணம் நமக்குள் வந்துவிடும்.
Scripture
About this Plan
கிறிஸ்தவத்தில் இருப்பது இயேசு அறிமுகப்படுத்திய புதுவகையான அன்பு – அகாபே அன்பு. வெறுமையான, பாவம் நிறைந்த உலகத்தில் இயேசு இந்த அன்பை அறிமுகப்படுத்தினார்.
More