YouVersion Logo
Search Icon

இவைகளில் அன்பே பிரதானம்Sample

இவைகளில் அன்பே பிரதானம்

DAY 21 OF 26

அநேக வாலிபர்கள் இன்றைக்கு தங்களுடைய வாழ்க்கைத்துணையை தேர்ந்தெடுக்கும் விஷயத்தில், வாழ்நாள் முழுக்க தங்களுடன் இருக்கப் போகும் அந்தக் கணவரை அல்லது மனைவியை கண்டுபிடிப்பதில் தேவ சித்தத்தை அறிய விரும்புவதால், எது தேவனிடத்தில் இருந்து வருகிறது, எது தேவனிடத்திலிருந்து வருகிறதில்லை என்பதை, அன்பைக் குறித்து போதிக்கும் இந்த சமயத்தில் நான் கூற விரும்புகிறேன்.

ஒருவரை நேசிக்கிறோம் என்றால், அந்த நபருக்கு உயர்ந்த மதிப்பு அளிக்கிறோம் என்று அர்த்தம். எனவே ஒருவரை நேசிக்க ஆரம்பிக்கும்போது, நாம் நம்மைத் தாழ்த்தி, நாம் நேசிப்பவரை உயர்ந்த இடத்தில் வைக்கிறோம். அநேக காதலர்கள் பிரிவதற்குக் காரணம், மாயை விலகுதலும், உண்மை நிலவரம் புரியவருதலும்தான். எனவே, “நான் ஏன் இந்த நபரண்டை ஈர்க்கப்படுகிறேன்?” அவருடைய தோற்றமா, தாளந்துகளா அல்லது பரஸ்பர விருப்பு வெறுப்புகளா, எது என்னை அவர்பால் ஈர்க்கிறது என்ற கேள்வியை ஒவ்வொருவரும் கேட்க வேண்டும்.

நான் இரட்சிக்கப்படுவதற்கு பல வருடங்களுக்கு முன்பாக, ஓய்வு பெற்ற ஒரு Marine Engineer-ஐ எனக்கு தனிப்பட்ட முறையில் தெரியும். ஒரு பெண்ணுடைய நீளமான கூந்தல் அழகில் மயங்கி, அந்த அழகுக்காகவே அவளைத் திருமணம் செய்து கொண்டவர் அவர். (இந்த இரகசியத்தை அவருடைய மனைவியின் அடக்க ஆராதனையில் அவரே போட்டு உடைத்து விட்டார்). ஆனால் மனைவி செய்யும் சமையல் பிடிக்காமல், “முட்டை வறுவல் கூட செய்யத் தெரியாதா?” என கோபப்படுவார். சாப்பாட்டு பிரச்சனை ஒவ்வொரு நாளும் சண்டையில் முடியும். இதனால் அவருக்கு பெரும்பாலும் உணவு சமைத்துக் கொடுத்தது அவருடைய உறவினர் ஒருவர் தான். ஆனால் அவரும் அவருடைய மனைவியும் ஒரே வீட்டில், வெவ்வேறு தளங்களில், எத்தனையோ வருடங்களாக ஒருவருக்கொருவர் பேசாமலேயே வாழ்ந்து வந்தார்கள்!

அநேக நேரத்தில், ஒரு நபரை நேசிப்பதற்கு பதிலாக, அவரிடம் உள்ள ஒரு குணாதிசயத்தையோ அல்லது ஏதோ ஒன்றையோ நாம் நேசிக்கிறோம். கடந்த காலத்தில் யாராவது நம்மை கொடூரமாக நடத்தியிருந்தால், மென்மையான குணம் கொண்ட ஒருவரை சந்திக்கும்போது, அந்த மென்மையான குணம் பூதக்கண்ணாடியில் பார்ப்பதுபோல நமக்கு மிகவும் பெரியதாய் தோன்றும். பொருளாதார நெருக்கடி, பொருளாதார பாதுகாப்பை மிகப்பெரிய கவர்ச்சியாக மிகைப்படுத்தி காட்டும்.

தனிமை உணர்வினிமித்தம் அநேகர் தேவன் வைத்திருக்கும் சிறந்ததைவிட குறைவானதை தங்களுக்கு தெரிந்து கொண்டிருக்கிறார்கள். தேவன் தனிமையை வெறுக்கிறார் (ஆதியாகமம் 2:18, 21-25). தனிமையாலும், தேவையற்ற உணர்ச்சி கொந்தளிப்புகளாலும் நீங்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதே தேவனுடைய விருப்பம். ஆகவேதான் அன்பிலே தோழமை, நட்பு, துணை இருக்கவேண்டும் என அவர் விரும்புகிறார். “பின்பு தேவனாகிய கர்த்தர்: மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல, ஏற்ற துணியை அவனுக்கு உண்டாக்குவேன் என்றார்”.

எனவே, உண்மை அன்பை கண்டறிவது எப்படி? நீங்கள் “காதல் வயப்பட்டிருக்கிறீர்கள்” என்பதை நீங்கள் அறிந்து கொள்வது எப்படி? இன்னார் உங்களை நேசிக்கிறார் என்ற நிச்சயம் உங்களுக்கு எவ்வாறு உண்டாக முடியும்?

காதல் வசப்படுவதைக் குறித்து வளவளவென்று பேசாமல் இரத்தின சுருக்கமாய் இதைச் சொல்ல விரும்புகிறேன். யாரைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என ஆசைப்படுகிறீர்களோ, அவர் மீது மிகவும் விசேஷமான ஆசையும் அன்பையும் தேவன்தான் கொடுக்க வேண்டும் என்பதை நாம் ஒத்துக்கொள்ள வேண்டும். நற்செய்தி என்னவென்றால், வழக்கத்துக்கு மாறான அன்பை நாம் புரிந்துணர முடியும். நீங்கள் ஆவியானவரால் வழி நடத்தப்பட்டு, தேவனுடைய வசனத்தினால் வாழும்போது, தேவன் எழுப்பும் எச்சரிப்பு மணிகளை விழிப்போடு கவனித்தாலே போதும், தவறான ஆளை நேசித்துவிட்டு, பின்பு ஏமாற்றமடைந்து, உள்ளம் உடைந்து, மனவேதனையில் அவதிப்படவேண்டிய சூழ்நிலை ஏற்படாது. 

Scripture

Day 20Day 22

About this Plan

இவைகளில் அன்பே பிரதானம்

கிறிஸ்தவத்தில் இருப்பது இயேசு அறிமுகப்படுத்திய புதுவகையான அன்பு – அகாபே அன்பு. வெறுமையான, பாவம் நிறைந்த உலகத்தில் இயேசு இந்த அன்பை அறிமுகப்படுத்தினார். 

More