இவைகளில் அன்பே பிரதானம்Sample
வழக்கத்துக்கு மாறான அன்பு பயப்படாது:
நம்பகத்தன்மை இல்லாமை, அவநம்பிக்கை – இது தான் பயம். தி லிவிங் வேதாகமத்திலிருந்து இந்த வசனத்தை நான் உங்களுக்கு கொடுக்கிறேன். “நம்மைப் பூரணமாய் நேசிக்கிற ஒருவரைக் கண்டு நாம் பயப்படத் தேவையில்லை; அவர் நம்மேல் வைத்திருக்கும் பூரணமான அன்பு, அவர் நமக்கு ஏதாவது செய்து விடுவாரோ என்கிற பயத்தை நம்மைவிட்டு அகற்றுகிறது. நாம் பயப்பட்டால், அவர் நமக்கு ஏதாவது செய்துவிடுவாரோ என்ற எண்ணத்தில் பயப்படுகிறோம். அவர் நம்மை மெய்யாகவே நேசிக்கிறார் என்பதை நாம் முழு நிச்சயமாய் நம்பவில்லை என்பதையும் நம்முடைய பயம் காண்பித்து விடுகிறது” (1 யோவான் 4:18).
பயம் இருக்கும் இடத்தில் ஏதோ ஒன்று இல்லாமலிருக்கிறது. அந்த பயம், இது தவறான ஆள், அல்லது இது தவறான நேரம், அல்லது இது தவறான உறவு என்பதற்கான ஆதாரமாகவும் இருக்கலாம்.
நீங்கள் முதன்முறையாக ஒரு நபரை சந்திக்கும்போது, தேனைப்போல ஒழுகும் அவருடைய இனிமையான பேச்சும், வார்த்தைகளும், மறைமுகமான கருத்துக்களும், உங்களுக்குள்ளே ஆழமான சமாதானத்தையும் நிச்சயத்தையும் ஏற்படுத்துவதற்கு பதிலாக, உங்களுடைய மனநிம்மதியை கெடுக்குமானால், ஜெபத்தில் அதிக நேரம் செலவிடுங்கள். அவசரப்பட்டு பிரதியுத்தரம் கொடுக்க வேண்டாம்.
என்னவென்று உங்களுக்குத் தெரியவில்லை, ஆனால் உங்களுக்குள்ளே இதில் ஏதோ தவறு இருக்கிறது என்பதை நீங்கள் உணர ஆரம்பிக்கிறீர்கள். அவர்களுடைய மனதில் தேவன் இல்லை. பேச்சுவாக்கில் இயேசு என்ற பெயரை நீங்கள் சொன்னாலே அது அவர்களுக்கு பெரிய அச்சுருத்தலாயிருக்கிறது. நீங்கள் இயேசுவைப்பற்றி பேசும்போது, “அவரைப்பற்றி பேசுவதை தயவுசெய்து நிறுத்திக்கொள்” என்ற வார்த்தைகள் அவர்களுடைய வாயிலிருந்து வந்தால், அல்லது நீங்கள் இயேசுவைப் பற்றி சொல்லும்போது, அவர்கள் ஏதோ ஒரு பாடலை முணுமுணுத்துக் கொண்டிருந்தால், நீங்கள் சொல்லுவதைக் கேட்க அவர்களுக்கு விருப்பமில்லை என்பதை அவர்கள் நாசுக்காக சொல்லுகிறார்கள். அது ஒரு எச்சரிப்பு மணி. அதை நிராகரிக்கவோ அல்லது லேசாக எடுத்துக் கொள்ளவோ வேண்டாம்.
சபை ஆராதனைகளுக்கு ஒழுங்காக செல்லுகிறீர்களா என்ற கேள்விக்கு, “நேரம் இருந்தால் போவேன்”, “ஒழுங்காக போக முடியவில்லை” என்று பதில்கள் வருமென்றால், எச்சரிக்கை கொள்ளுங்கள். தேவனுடைய வழிகாட்டும் பலகைகள் நீங்கள் போகவேண்டிய வழியை உங்களுக்கு சுட்டிக் காட்டிக்கொண்டிருக்கிறது என்பதை மனதில் கொள்ளுங்கள். அவற்றை கவனித்து, சரியான திசையில் பயணிக்க வேண்டியது உங்களுடைய கடமை.
நீங்கள் போக வேண்டிய பாதையில் தேவன் உங்களை தரதரவென்று இழுத்துக்கொண்டு போக மாட்டார். அவர் உங்களுக்கு போதிக்கவும், வழிகாட்டவும் மட்டுமே செய்வார். சரியான திசையில் பயணிக்க வேண்டிய பொறுப்பு உங்களுடையது. “நான் உனக்கு போதித்து, உன்னுடைய வாழ்க்கைக்கான சிறந்த பாதையில் உன்னை நடத்துவேன்; நான் உனக்கு ஆலோசனை கொடுத்து, உன்னுடைய முன்னேற்றத்தை கவனிப்பேன். வாரினாலும், கடிவாளத்தினாலும் வாய் கட்டப்பட்டாலொழிய, உன் கிட்டச்சேராத புத்தியில்லாக் குதிரையைப் போலவும் கோவேறு கழுதையைப் போலவும் இருக்க வேண்டாம்” (சங்கீதம் 32:8, 9 தி லிவிங் வேதாகமம்).
Scripture
About this Plan
கிறிஸ்தவத்தில் இருப்பது இயேசு அறிமுகப்படுத்திய புதுவகையான அன்பு – அகாபே அன்பு. வெறுமையான, பாவம் நிறைந்த உலகத்தில் இயேசு இந்த அன்பை அறிமுகப்படுத்தினார்.
More