YouVersion Logo
Search Icon

இவைகளில் அன்பே பிரதானம்Sample

இவைகளில் அன்பே பிரதானம்

DAY 15 OF 26

ஒரு விற்பனையாளரின் மிகப்பெரிய பொக்கிஷம் அவருடைய பேச்சுத் திறமை. அப்போஸ்தலனாகிய பவுல் வாழ்ந்த காலத்தில் இருந்த கொரிந்து மக்கள் இதற்கு விலக்கு அல்ல. கொரிந்து மக்கள் மிகச்சிறந்த பேச்சாளர்களின் பேச்சுத் திறனை கேட்டுக் களித்தவர்கள். டிமாஸ்தேனஸ் (Demosthenes), சோபோகிளஸ் (Sophocles), யூரிபைட்ஸ் (Euripides) போன்ற மிகச்சிறந்த பேச்சாளர்கள் அன்றைய காலங்களில் மிகவும் புகழ் பெற்றிந்தனர். மக்களை இணங்கவைக்கும் விதத்தில் பேசும் திறன் ஒரு பெரிய வரமாகும். வல்லமையான பேச்சாளர்களின் பேச்சுத் திறன் மக்களை வீரதீர செயல் புரியவும், மாபெரும் போராட்டத்திலும் போர்க்களத்திலும் குதிக்கவும் செய்திருக்கிறது.

Clairvaux Bernard பேசினான். அவனுடைய பேச்சைக் கேட்டு முகமதியர்களை எதிர்த்து போரிட ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் புறப்பட்டுச் சென்றனர். மார்க் ஆண்டனி பேசிய வார்த்தைகள் ஒவ்வொரு தலைமுறை மக்கள் மத்தியிலும் இன்னும் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கிறது. ஷேக்ஸ்பியர் மூலம் அவர்கள் சாகாவரம் பெற்றவர்களாகி விட்டனர். மார்க் ஆண்டனியின் வார்த்தைகளை கேட்டு ஜுலியஸ் சீசரை கொன்ற மக்களுக்கு எதிராக ரோம மக்கள் கொதித்தெழுந்தார்கள். பேசப்படும் வார்த்தை மிகவும் வல்லமையுள்ளது என்பதில் கடுகளவும் சந்தேகமில்லை. 

ஆனால் 1 கொரிந்தியர் 13ம் அதிகாரத்தில் அப்போஸ்தலனாகிய பவுல், தேவனுடைய அன்பு கலவாத வார்த்தைகளை, சத்தமிடுகிற வெண்கலத்திற்கும், ஓசையிடும் கைத்தாளத்திற்கும் ஒப்பிடுகிறார். தேவனுடைய அகாபே அன்பு, வார்த்தைகளை விட பெரியது!

உதாரணத்திற்கு, ஒரு கிறிஸ்தவ சகோதரனோ அல்லது ஒரு தேவ ஊழியரோ தவறுசெய்து விழுந்துபோனால் என்ன செய்வீர்கள்? தூக்கி விடுவீர்களா? அல்லது ஒதுக்கி விடுவீர்களா? அவருடைய தவறுகளை மூடுவீர்களா அல்லது எல்லாருடைய காதுகளிலும் ஓதுவீர்களா? அவருடைய பெயரை கெடுக்க முயற்சிப்பீர்களா அல்லது பிரச்சனையில் அகப்பட்ட அந்த மனுஷனோடு பேசி அவருக்கு உதவ முயலுவீர்களா? இரக்கமில்லாத பேச்சு தேவனுடைய செயலை எண்ணற்ற விதத்தில் தடைசெய்கிறது. குறைகூறும் நாவுகள் திருச்சபை கதவுகளை எண்ணற்ற மக்களுக்கு அடைத்து போட்டிருக்கிறது. அவசியமில்லாத பேச்சு அநேக போதகர்களின் இருதயத்தையும், சரீர ஆரோக்கியத்தையும் உடைக்கிறது. “சிம்சோன் நரிகளைப் பிடித்து, அவற்றை இரண்டிரண்டாக சேர்த்துக்கட்டி, அவைகளின் வால்களின் நடுவே தீப்பந்தத்தை வைத்து கட்டி, பெலிஸ்தரின் வெள்ளாண்மையை எரித்துப்போட்டானே, அதற்கு ஒப்பானது குறை கூறும் நாவு” என்று யாரோ ஒருவர் கூறியிருக்கிறார். 

Day 14Day 16

About this Plan

இவைகளில் அன்பே பிரதானம்

கிறிஸ்தவத்தில் இருப்பது இயேசு அறிமுகப்படுத்திய புதுவகையான அன்பு – அகாபே அன்பு. வெறுமையான, பாவம் நிறைந்த உலகத்தில் இயேசு இந்த அன்பை அறிமுகப்படுத்தினார். 

More